பாடநூல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
காட்டிலிருந்து வந்த …………………… கரும்பைத் தின்றன.
அ) முகில்கள்
ஆ) முழவுகள்
இ) வேழங்கள்
ஈ) வேய்கள்
Answer:
இ) வேழங்கள்
Question 2.
‘கனகச்சுனை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………..
அ) கனகச் + சுனை
ஆ) கனக + சுனை
இ) கனகம் + சுனை
ஈ) கனம் + சுனை
Answer:
இ) கனகம் + சுனை
Question 3.
முழவு + அதிர என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………………….
அ) முழவுதிர
ஆ) முழவுதிரை
இ) முழவதிர
ஈ) முழவு அதிர
Answer:
இ) முழவதிர
குறுவினா
Question 1.
தமிழ் இசையோடு இணைந்து இசைக்கும் இசைக்கருவிகளாகச் சுந்தரர் கூறுவன யாவை?
Answer:
புல்லாங்குழல் மற்றும் முழவு ஆகியவற்றைத் தமிழ் இசையோடு இணைந்து இசைக்கும் இசைக் கருவிகளாகச் சுந்தரர் கூறுகின்றார்.
சிறு வினா
Question 1.
திருக்கேதாரத்தைச் சுந்தரர் எவ்வாறு வருணனை செய்கிறார்?
Answer:
- பண்ணோடு சேர்ந்த இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடும் போது, அதற்கு ஏற்றவாறு முதிர்ந்த மூங்கில்களால் ஆன புல்லாங்குழலும் முழவும் இணைந்து ஒலிக்கும்.
- கண்களுக்கு இனிய குளிர்ச்சிதரும் ஒளியை உடைய பொன் வண்ண நீர் நிலைகள் வைரங்களைப் போன்ற நீர்த் திவலைகளை வாரி இறைக்கும்.
- நிலத்தின் மீது நின்று கொண்டிருக்கும் மத யானைகள் மணிகளை வாரி வாரி வீசும். இவற்றால் இடையறாது தோன்றும் ‘கிண்’ என்னும் ஒலியானது இசையாக முழங்கும்.
- இத்தகைய சிறப்புகள் உடைய நகரம் திருக்கேதாரம் என்று சுந்தரர் வருணனை செய்கிறார்.
No comments:
Post a Comment