செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Friday 17 September 2021

வகுப்பு 10- இணைப்பு பயிற்சி 11

 இணைப்பு பயிற்சி 11

(உரையாடல் எழுதுதல்)


மதிப்பீட்டுச் செயல்பாடுகள்


உரையாடலை நீட்டித்து எழுதுக.

விரலும் நகமும் பேசுவது போன்ற ஒரு கற்பனை உரையாடல்.

நகம் : ஏன் அண்ணா, சோகமாக இருக்கிறாய்? என்ன காரணம்?

விரல் : ம்ம்ம்....! பழி ஓரிடம்; பாவம் ஓரிடம் என்பார்கள். என்னுடைய சோகத்திற்குக்
காரணம் நீதான் தெரியுமா?


நகம்  : நானா? எப்படி என்று விளக்கமாகக் கூறுங்கள் அண்ணா!

விரல் : நீ தான் என்னைத் தாண்டி நீளமாக வளர்ந்து கொண்டே இருக்கிறாயே!

நகம் : அதுதான் அடிக்கடி என்னை வெட்டி விடுகிறார்களே!

விரல் :  இருந்தாலும்... நேற்று ஒரு தாய் தன் மகனிடம், "உன்னுடைய நகத்தை
ஒழுங்காக வெட்டாமல் விட்டுவிட்டால் விரலையே வெட்டி விடுவேன்"
என்று கூறிக் கண்டித்தார். வளர்வது நீ; வெட்டுவது என்னையா? என்ன
கொடுமை இது!

நகம் : கண்டிப்புக்காக அப்படிச் சொல்வார்கள். என்னைத்தான் வெட்டுவார்கள். உன்னை அல்ல.

விரல்  : நீ ஏன் இப்படி வளர்ந்து கொண்டே இருக்கிறாய் ?

நகம் : அது எனது இயல்பு ; வளர்வதே என் வாழ்வு.

விரல் :வெட்டுகிறார்களே என்று வேதனைப்படாதே ! என் அழகுக்கு நீயும் காரணமல்லவா ? 

நகம் : வண்ணமிடுவதில் எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் ...

விரல் :  ஆனால் என்று இழுக்கிறாயே ! 
நகம் : கண்ட கண்ட சாயங்களைப் பூசி நலத்தைக் கெடுத்துக் கொள்கிறார்களே !

விரல் : ஆமாம் ! நாகரிகம் என்ற பெயரில் நஞ்சை விரும்புகிறார்கள்.

நகம் : மருதாணி இலையின் மணமும் வண்ணமும் எனக்கு விருப்பம்.

விரல் : நீ சொல்வது சரி. எனக்கும்தான்.

நகம் : வளர்வது என் இயல்பென்றாலும் என்னை எப்போதும் கவனிப்பது மனிதர்களின் இயல்பாக இருக்க வேண்டும் . 

விரல் : ஆமாம் ! நீதானே நலம் காட்டும் கண்ணாடி.

நகம் :  சரியாகச் சொன்னாய்.

விரல் :  உன்னைக் கவனித்தால் உடல் நரம் தெரியும். உன்னைத் தூய்மையாக வைத்தால் உடல் நலம் பெறும்.

நகம்  : நன்றி விரலே ! இதை மனிதருக்குக் கூறு. 

விரல் :  நிச்சயம் கூறுவேன். நன்றி.

No comments:

Post a Comment