செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Friday 17 September 2021

வகுப்பு 10.இணைப்பு பயிற்சி 2- (வினாச்சொற்களை அறிந்து வினாக்களை உருவாக்குதல்)

 இணைப்பு பயிற்சி 2-

 (வினாச்சொற்களை அறிந்து வினாக்களை உருவாக்குதல்)

பக்க எண் 7 க்கான விடைகள்


1. அரிக்கமேடு அகழாய்வில் ரோமானிய மட்பாண்டங்கள் கிடைத்தன.

வினா: தமிழகத்தில் எங்கு நடந்த அகழாய்வில் ரோமானிய மட்பாண்டங்கள் கிடைத்தன ?

* அரிக்கமேடு அகழாய்வில் கிடைத்த மட்பாண்டங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவை ?

* எந்நாட்டைச் சேர்ந்த மட்பாண்டங்கள் அரிக்கமேடு அகழாய்வில் கிடைத்தன ?

2 . உழைத்துச் சேர்த்த பணத்தைப் பெட்டியில் பூட்டி வைக்கும் பழக்கம் இன்று இல்லை.

வினா: உழைத்துச் சேர்த்த பணத்தைப் பெட்டியில் பூட்டி வைக்கும் பழக்கம் இன்று உள்ளதா ?

3. தமிழக மக்கள்  பயன்படுத்தும் குடும்ப அட்டைகள் திறன் அட்டைகளாக   மாற்றப்பட்டுள்ளன.

வினா: தமிழக மக்கள் பயன்படுத்தும் குடும்ப அட்டைகள் எவ்வாறு மாற்றப்பட்டுள்ளன ?

4. உரிச்சொற்கள் செய்யுளுக்கே உரியன என்று நன்னூலார் கூறுகிறார்.

வினா: உரிச்சொற்கள் செய்யுளுக்கே உரியன என்று கூறுபவர் யார் ?

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

2. பத்தியைப் படித்துக் காரண காரிய அடிப்படையில் வினாக்கள் உருவாக்குக

               பெரியாரின் சிந்தனைகள் தொலைநோக்கு உடையவை; அறிவியல் அடிப்படையில் அமைந்தவை; மனித நேயம் வளர்க்கப் பிறந்தவை. நடைமுறைக்கு ஒவ்வாத கருத்துகளை அவர் எப்பொழுதும் கூறியதில்லை. மேலும், தமது சீர்திருத்தக்  கருத்துகளுக்கேற்ப வாழ்ந்து காட்டினார்; தம் வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவுக் கருத்துக்களைப் பரப்புரை செய்தார்; சமுதாயத்தை மூடப்பழக்கங்களிருந்து மீண்டெழ    அரும்பாடுபட்டார்;அதற்காகப் பலமுறை சிறை சென்றார்;பலரின்கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தார். இறுதி மூச்சுவரை சமூகச் சீர்திருத்தப் போராளியாகவே வாழ்ந்து மறைந்தார்.

வினாக்கள்

1. பெரியாரின் சிந்தனைகள் எப்படிப்பட்டவை ?

2 . தமது சீர்திருத்தக் கருத்துகளுக்கேற்ப வாழ்ந்து காட்டியவர் யார் ?

3. பெரியார் தம் வாழ்நாள் முழுவதும் பரப்புரை செய்த கருத்துகள் எவை ?

4. சமுதாயத்தை மூடப்பழக்கங்களில் இருந்து மீட்க   அரும்பாடுபட்டவர்   யார் ?

5. பெரியார் ஒரு சமூகச் சீர்திருத்தப் போராளி என்பதை நிறுவுக.

No comments:

Post a Comment