2➤ நோய் பாதிப்படைந்த பகுதியில் இருந்து வருவோரை எத்தனை நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்
=> 14
3➤ முகக்கவசத்தினை கழட்டும் போது செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கைகள் யாவை?
=> 1. முகக்கவசத்தின் முன் பகுதியினை தொடுதல் கூடாது.2. முகக்கவசத்தினை கழட்டுவதற்கு முன்பும் பின்பும் சோப்பு நீர் அல்லது சானிடைசர் மூலம் கைகளை கழுவிவிட வேண்டும்
4➤ கோவிட் 19 காற்றின் மூலம் பரவுமா?
=> நிரூபிக்கப்படவில்லை. ஆனால், நோய் பாதித்தவர் தும்மும் போதும் இருமும் போதும் வெளிவரும் நீர்திவாலைகள் மூலமாக பரவுகின்றன.
5➤ நோய் தொற்று பாதித்தவர் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை?
=> 1. குடும்ப உறுப்பினர் மற்றும் பிற நபர்களிடம் இருந்து தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். 2. பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் ஆடைகளை பிறர் பயன்படுத்தக்கூடாது.3. அருகில் உள்ள சுகாதார நிலையத்தினை உடனடியாக தொடர்பு கொண்டு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்
6➤ நோய் பாதித்தவர்களில் அதிகம் எத்தகைய வயதுடையோரை நோய் கடுமையாக பாதிக்கிறது?
=> 1.வயது முதிர்ந்தவர்கள் 2. இதயநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 3.நுரையீரல் நோய், கேன்சர், பாதித்தவர்களை நோய் கடுமையாக தாக்குகிறது
7➤ நோய்க்கிருமிகள் பொருட்களின் மீது எத்தனை மணி நேரம் உயிரோடு இருக்கும்
=> .உறுதி செய்யப்படவில்லை. ஆயினும் சில மணி நேரங்கள் முதல் சில நாட்கள் வரை உயிரோடு இருக்கலாம் என நம்பப்படுகிறது. பாதிக்கப்பட்டடவர்கள் பயன்படுத்திய பொருட்களை சானிடைசர் மற்றும் கிருமி நாசினி கொண்ட சுத்தப்படுத்தியபின் பயன்படுத்துவது சிறந்தது.
8➤ கோவிட் 19 - பற்றி முறையான அறிவிப்பு உலக பன்னாட்டு அமைப்பால் முதன் முதலில் அறிவிக்கப்பட்ட ஆண்டு
=> 2019 டிசம்பர் 31
9➤ இந்தியாவில் பயன்படுத்தப்படும் இரண்டு வகை தடுப்பூசிகள் யாவை?
=> 1.கோவேக்சின் 2.கோவிஷீல்டு
10➤ உலக கை கழுவும் தினம் என்று கொண்டாடப்படுகிறது
=> அக்டோபர் 15
11➤ கொரோனா வைரஸ் உற்பத்தி தொழிற்சாலைகளாக செயல்படுவது என்று மனித உடலில் குறிக்கப்படும் பகுதி எது?
=> தொண்டை மற்றும் மூச்சுக்குழாய்
12➤ நோய் கண்டவர்கள் தினமும் செய்ய வேண்டியவை யாவை?
=> 1.கைகளை நன்றாக கழுவுதல் 2. முகக் கவசம் அணிய வேண்டும். 3. தொண்டை பகுதியில் உப்பு நீரால் கொப்பளிக்க வேண்டும்
No comments:
Post a Comment