செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Friday 17 September 2021

வகுப்பு 10. இணைப்பு பயிற்சி 10.

   

இணைப்பு பயிற்சி- 10 

(அட்டவணை, அறிவிப்பு பலகை, விளம்பரம்- படித்தல்)

மதிப்பீட்டுச் செயல்பாடுகள்

கீழ்க்காணும் விளம்பரத்தைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்கவும்.

      

 

புத்தகத் திருவிழா

புத்தகம் படிப்போம் !   புதியன அறிவோம்!

 

நாள் - செப்டம்பர் 19 முதல் 28 வரை,

இடம்  - சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சாவூர்.

நேரம் - காலை 8.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரை,

 

(முதல் நாள் காலை, 9.00 மணிக்குத் தமிழகக் கல்வி அமைச்சர் தொடங்கி வைக்கிறார்).

                       (நாள்தோறும் மாலை 6.00 மணிக்குப் புதிய புத்தகங்கள் வெளியீடும் சிறப்புப் பேச்சாளர்களின் உரையும் இடம்பெறும்),

 

அனைவரும் வாரீர்:                                                                                        அறிவுத்திறம் பெறுவீர்!

 



1. கொடுக்கப்பட்டுள்ள விளம்பரம் எந்த நிகழ்வைக் குறிக்கிறது?

         இவ்விளம்பரம் புத்தகத் திருவிழாவைக் குறிக்கிறது.

2. புத்தகத்திருவிழா எங்கு நடைபெறுகிறது?

      புத்தகத் திருவிழா தஞ்சாவூரில் உள்ள சரசுவதி மகால் நூலகத்தில் நடைபெறுகிறது.

3. புத்தகத் திருவிழா எத்தனை நாள்கள் நடைபெறுவதாக விளம்பரம் குறிப்பிடுகிறது?

   புத்தகத் திருவிழா பத்து நாள்கள் நடைபெறுவதாக விளம்பரம் குறிப்பிடுகிறது.

4. புத்தகத் திருவிழாவைத் தொடங்கிவைப்பவர் யார்? எப்போது?

            புத்தகத் திருவிழாவை செப்டம்பர் 19 காலை 9 மணிக்குத் தமிழகக் கல்வி அமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

5. புத்தகத்திருவிழா நடைபெறும் நாள்களில் மாலை 6மணிக்கு நடைபெறும் நிகழ்வுகள் யாவை?

       புத்தகத் திருவிழா நடைபெறும் நாள்களில் மாலை 6 மணிக்குப் புதிய புத்தகங்கள் வெளியீடும் , சிறப்புப் பேச்சாளர்களின் உரையும் நடைபெறும்.

No comments:

Post a Comment