செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Saturday 18 September 2021

வகுப்பு -9 இணைப்பு பயிற்சி 3

 இணைப்பு பயிற்சி 3.

( அகராதியைப் பார்த்து பொருளறிதல்)

மதிப்பீட்டுச் செயல்பாடு


1.பின்வரும் சொற்களை அகராதியில் கண்டு அதற்கான பொருளை எழுதுக.

அடிசில்,ஆவலி, இம்மி, கல்லல், காசினி, தரு,நண்ணலர், வங்கூழ்,வெஃகல்.

அடிசில் -  உணவு 

ஆவலி   - வரிசை 

இம்மி   - அணு 

கல்லல்  - தோண்டல் 

காசினி   - நிலம் 

தரு        - மரம் 

நண்ணலர்  - பகைவர் 

வங்கூழ்  -  காற்று  , வாதம் 

வெஃகல்   -  பேராசை 

2. கீழுள்ள பத்தியைக் கவனமாய்ப் படித்துக் கொடுக்கப்பட்ட சொற்களுக்குரிய பொருளை அகராதியில் கண்டு எழுதுக.


           அஞ்ஞானம் அகன்றிட, ஆழ்ந்து கற்றிடுவீர்; இறுமாப்பாய் உலவி, ஈறுவரை புகழ்பெற்று வாழ்ந்திடுவீர்; ஊருணியாய்ப் பிறருக்குப் பயன்பட்டு, எஞ்ஞான்றும் சிறந்திடுவீர்:ஏதின்றி மொழிந்திடுவீர்;ஐயம் அகற்றித் தெளிந்திடுவீர்; ஒப்புமையின்றி
உயர்ந்திடுவீர் ; ஓதிஞானம் பெற்றதனால், ஔதாரியமாய் வாழ்ந்திடவே, அஃகலிலும்
கற்றிடுவீர்!
அஞ்ஞானம்  -  அறியாமை 

இறுமாப்பு  -  செருக்கு 

ஈறுவரை     - எல்லை

ஊருணி  -  மக்கள் நீரெடுக்கும் குளம்

எஞ்ஞான்றும்  -  எப்போதும்

ஏதின்றி  -   காரணமின்றி

ஓதிஞானம்  -  கல்வியறிவு 

ஔதாரியம்  -  பெருந்தன்மை 

அஃகல்     -  வறுமை 

3. பொருளை அகராதி உதவியுடன் எழுதுக.

"வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்."


மனமெனும் சோலையில் மந்தியாய் ஆடி
கனலான சொல்லாலே காய்த்து மனத்தை
ஊனமாய் மாற்றுமந்த உன்மத்தக் கோபத்தை
ஏனமாய் எஞ்ஞான்றும் எண்

                         கவிஞர் நளினா கணேசன்

காவாதான்  - காக்காதவர்

எரிமுன்னர்  - தீ முன்னர்

வைத்தூறு   - வைக்கோற்போர்

மந்தி              - குரங்கு 

எஞ்ஞான்றும்  - எப்போதும்

No comments:

Post a Comment