செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Friday 17 September 2021

வகுப்பு 10- இணைப்பு பயிற்சி 1

 இணைப்பு பயிற்சி - 1

(பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளித்தல்)


உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

                  ஏறுதழுவுதல் என்பது தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறுபெயர்களில் அழைக்கப்படுகின்றது. அது மாடு பிடித்தல், மாடு அணைதல், மாடு விடுதல், மஞ்சுவிரட்டு, வேலி மஞ்சுவிரட்டு, எருதுகட்டி, காளைவிரட்டு, ஏறுவிடுதல், சல்லிக்கட்டு எனப்பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது. சல்லிக்கட்டு பேச்சுவழக்கில் திரிபுற்று, ஜல்லிக்கட்டு என்றாகியது.சல்லி என்பது மாட்டின்கழுத்தில் கட்டப்படுகிறவளையத்தைக் குறிக்கும். புளியங் கொம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணிவிக்கும்
வழக்கம் தற்போதும் உள்ளது. 

           அக்காலத்தில் புழங்கிக்கொண்டிருந்த சல்லி நாணயங்களைத் துணியில் முடிந்து மாட்டின் கொம்புகளில் கட்டும் பழக்கமும் இருந்தது. மாட்டைத் தழுவும் வீரருக்கு அந்தப் பணமுடிப்புச் சொந்தமாகும்.

வினாக்கள்

1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களைக் கொண்டு தொடர் அமைத்து எழுதுக.
1.வளையம்
2. சல்லி நாணயம்
3.மஞ்சுவிரட்டு
4. பணமுடிப்பு
5.புழங்கிக்கொண்டிருந்த

விடை :

  ஏறுதழுவுதல் மஞ்சுவிரட்டு , சல்லிக்கட்டு முதலிய பெயர்களில் அழைக்கப் படுகிறது.சல்லிக்கட்டில் சல்லி என்பது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தைக் குறிக்கிறது. அக்காலத்தில் புழங்கிக் கொண்டிருந்த சல்லி  நாணயங்களே மாடு பிடிக்கும் வீரருக்கான பணப்பரிசாகும்.

2. சரியா? தவறா? என எழுதுக.

1. புளியங்கொம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணிவிக்கும்
பழக்கம் தற்போதும் உள்ளது.

விடை :  சரி 

2. மாட்டைத் தழுவும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமில்லை.

விடை : தவறு 

3. ஏறுதழுவுதல் குறித்து உங்களுக்குத் தெரிந்த செய்திகளை ஐந்து வரிகள்
எழுதுக.

* ஏறுதழுவுதல் தமிழர்களின் பண்பாட்டோடு தொடர்புடைய நிகழ்வாகும்.

* ஏறுதழுவுதல் மாட்டுக்கும் , மனிதருக்கும்  இடையேயான ஓர் உணர்வு பூர்வமான தொடர் நிகழ்வாகும்.

* ஏறுதழுவுதலில் அவிழ்த்து விடப்பட்ட காளைகள் நிலம் அதிர ஓடுவதால் பூமித்தாய் மகிழ்வதாக மக்கள் நம்புகின்றனர்.

4. கோடிட்ட இடத்தை நிரப்புக.

கொடுக்கப்பட்டுள்ள பத்திக்கு ஏற்ற தலைப்பு.

விடை : ஏறுதழுவுதல்

5.ஏறுதழுவுதலுக்கு வழங்கும் வெவ்வேறு பெயர்களை எழுதுக.

 * மாடுபிடித்தல்

* மாடு அணைதல் 

* மாடு விடுதல்

* மஞ்சு விரட்டு 

* வேலி மஞ்சுவிரட்டு 

* எருதுகட்டி 

*  காளைவிரட்டு 

* ஏறுவிடுதல்

* சல்லிக்கட்டு 

No comments:

Post a Comment