செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Tuesday 14 September 2021

வகுப்பு 8 - தமிழர் இசைக்கருவிகள் வினா விடைகள்

 மதிப்பீடு

Question 1.
காற்றுக் கருவிகள் குறித்த செய்திகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
முன்னுரை :
இசைக்கு மயங்காதவர் எவருமில்லை . இதனை அனைவரும் அறிவர். அந்த இசையின் இனிமைக்குத் துணை செய்பவை இசைக்கருவிகள். இவை தோல் கருவி, நரம்புக் கருவி, காற்றுக்கருவி, கஞ்சக்கருவி என நான்கு வகைப்படும். இவற்றுள் காற்றுக்கருவியைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

குழல் :
காடுகளில் வளரும் மூங்கில்களில் வண்டுகள் ஏற்படுத்திய துளைகள் வழியாக காற்று வீசும் போது. இனிய இசை எழும்பும். இதனால் மகிழ்ந்த நம் முன்னோர் வேய்ங்குழல், புல்லாங்குழல் போன்றவற்றை உருவாக்கினர். குழல் ஏழு சுரங்களை உண்டாக்குவதற்கு உரிய ஏழு துளைகளை உடையது. இது சுமார் இருபது விரல் நீளம் உடையதாக இருக்கும்.

மூங்கில் மட்டுமன்றிச் சந்தனம், செங்காலி, கருங்காலி ஆகிய மரங்களாலும் குழல்கள் செய்யப்படுகின்றன. கொன்றைக்குழல், முல்லைக்குழல், ஆம்பல் குழல் எனப் பலவகையான குழல்கள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. குழல் இனிது யாழ்இனிது என்பர்தம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர். (திருக்குறள்)

கொம்பு :
மனிதர்கள் தொடக்க காலத்தில் இறந்த மாடுகளின் கொம்புகளைப் பயன்படுத்தி ஒலி எழுப்பினர். அதுவே பிற்காலத்தில் கொம்பு என்னும் இசைக்கருவிக்கு அடிப்படையாயிற்று. இக்காலத்தில் பித்தளை அல்லது வெண்கலத்தில் கொம்புகள் செய்யப்படுகின்றன. இதனை வேடர் வேட்டையின் போது ஊதுவர்.

கழனி மேடுகளில் காவல் புரிபவர்கள் விலங்குகள், கள்வரை விரட்டவும் மற்ற காவல்காரர்களை விழித்திருக்கச் செய்யவும் கொம்பினை ஊதுவர். ஊதுகொம்பு, எக்காளம், சிங்கநாதம், துத்தரி போன்ற பலவகையான கொம்புகள் இக்காலத்தில் திருவிழா ஊர்வலங்களின் போது இசைக்கப்படுகின்றன.

சங்கு :
இஃது ஓர் இயற்கைக் கருவி. கடலில் இருந்து எடுக்கப்படுவது. வலமாகச் சுழிந்து இருக்கும் சங்கை வலம்புரிச்சங்கு என்பர். சங்கின் ஒலியைச் சங்கநாதம் என்பர். இலக்கியங்களில் இதனைப் பணிலம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். கோயில் திருவிழாக்களின் போதும் சமயச் சடங்குகளின்போதும் சங்கு முழங்கும் வழக்கம் உண்டு.


சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய். – என்று திருப்பாவை கூறுகிறது.

முடிவுரை :
இவ்வாறு இசைக் கருவிகள் நம் வாழ்வோடு இணைந்துள்ளன என்பதை உணர்ந்து மகிழலாம்.

No comments:

Post a Comment