செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Monday 9 August 2021

வகுப்பு - 9 - பகுபத உறுப்பிலக்கணம் - வினா- விடைகள்.

 பகுபத உறுப்பிலக்கணம்

1.பதம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

  • பதம் (சொல்) இரு வகைப்படும். அவை பகுபதம், பகாப்பதம் ஆகும்.

  • 2.பகுபதம் என்றால் என்ன? எத்தனை வகைப்படும்?
  • பிரிக்கக்கூடியதும், பிரித்தால் பொருள் தருவதுமான சொல் பகுபதம் எனப்படும்.
  • இது பெயர்ப் பகுபதம், வினைப் பகுபதம் என இரண்டு வகைப்படும்.

2. பகுபத உறுப்புகள் மொத்தம் எத்தனை வகைப்படும்?

  பகுபத உறுப்புக்கள் ஆறு வகைப்படும்.

அவை,

பகுதி, விகுதி,இடைநிலை, சந்தி, சாரியை,விகாரம்

3.எழுத்துப்பேறு - விவரி?

  • பகுபத உறுப்புகளுள் அடங்காமல் பகுதி, விகுதிக்கு நடுவில் காலத்தை உணர்த்தாமல் வரும் மெய்யெழுத்து எழுத்துப்பேறு ஆகும்.
  • பெரும்பாலும் ‘த்’ மட்டுமே வரும்.
  • சாரியை வரும் இடத்தில் ‘த்’ வந்தால் அது எழுத்துப்பேறு. எ.கா:

1. வந்தனன் – வா(வ)+த்(ந்)+த்+அன்+அன்
வா – பகுதி (‘வ’ ஆனது விகாரம்)
த்(ந்) – சந்தி (‘ந்’ ஆனது விகாரம்)
த் – இறந்தகால இடைநிலை
அன் – சாரியை
அன் – ஆண்பால் வினைமுற்று விகுதி


2. செய்யாதே – செய்+ய்+ஆ+த்+ஏ
செய் – பகுதி
ய் – சந்தி
ஆ – எதிர்மறை இடைநிலை
த் – எழுத்துப்பேறு
ஏ – முன்னிலை ஒருமை ஏவல் வினைமுற்று விகுதி

No comments:

Post a Comment