செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Friday 6 August 2021

வகுப்பு 10- வாராந்திர தேர்வு - ஆகஸ்ட் முதல் வாரம்

 

அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி கடையநல்லூர்.

வாராந்திர தேர்வு ஆகஸ்ட் முதல் வாரம்

வகுப்பு 10

நாள்                                                மொத்த மதிப்பெண் 25

--------------------------------------------------------------------------------------------------------------------------

 

ஒரிரு வரிகளில் விடை தருக 10

1.
1.இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் ……………………. இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர்…………………
அ) அமைச்சர், மன்னன்
இ) இறைவன், மன்னன்
ஆ) அமைச்சர், இறைவன்
ஈ) மன்னன், இறைவன்


2.ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர். இத்தொடரின் செயப்பாட்டு வினைத்தொடர் எது?
அ) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுவர்.
ஆ) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது.
இ) ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது. ஈ) ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகின்றனர்.


3.கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர். இத்தொடருக்கான வினா எது?
அ) கரகாட்டம் என்றால் என்ன?
ஆ) கரகாட்டம் எக்காலங்களில் நடைபெறும்?
இ) கரகாட்டத்தின் வேறுவேறு வடிவங்கள் யாவை?
ஈ) கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?

4.விடையின் வேறு பெயர்கள்------- -------------- --------

5.பாம்போ? கயிறோ? எவ்வகை வினா?

குறுவினா


1.“
கழிந்த பெரும்கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால்
பொழிந்த பெரும் காதல்மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென்சொல்

                        – இவ்வடிகளில் கழிந்த பெரும் கேள்வியினான் யார்?
காதல் மிகு கேண்மையினான் யார்?

2.இடைக்காடனார் யாருடைய அவையில் தம் கவிதையைப் படித்தார்?

3.மன்னன் தன் குற்றத்தைப் பொறுக்க வேண்டியது எவ்வாறு?

4.வினா எத்தனை வகைப்படும்? அவை யாவை?

5.கொடை வினா என்றால் என்ன? எடுத்துக்காட்டு தந்து விளக்கு?

6.வினா எதிர் வினாதல் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தந்து விளக்கு.

7.பொருள்கோள் என்றால் என்ன?

8.ஒயிலாட்டம் குறித்து நீவீர் அறிவது யாது?

9.காவடியாட்டம் என்றால் என்ன?

10.பொருள்கோள் எத்தனை வகைப்படும் அவை யாவை?

No comments:

Post a Comment