செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Sunday 22 August 2021

வகுப்பு - 9 - துணை வினைகள் - வினா விடைகள்

 கீழ்க்காணும் துணைவினைகளைப் பயன்படுத்திப் புதிய தொடர்களை எழதுக.

அ) வேண்டும்
ஆ) பார்
இ) உள்
ஈ) வா
உ) விடு
Answer:
அ) வேண்டும் – ஆசிரியர் கூறும் அறிவுரையைக் கேட்க வேண்டும்.
ஆ) பார் – தந்தை சொன்னது சரியா தவறா எண்ணிப்பார் .
இ) உள் – மனதில் உள்ளதைச் சொல்க.
ஈ) வா – நேரில் வா பேசிக்கொள்வோம்.
உ) விடு – தீய பழக்கங்களை விட்டு விடு.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பொருத்தமான விடையை எடுத்து எழுதுக.
கதிர் அலுவலகத்திலிருந்து விரைவாக …………
அவன் பையன் பள்ளியிலிருந்து இன்னும்………………..
அ) வந்தான், வருகிறான்
ஆ) வந்துவிட்டான், வரவில்லை
இ) வந்தான், வருவான்
ஈ) வருவான், வரமாட்டான்
Answer:
ஆ) வந்துவிட்டான், வரவில்லை


Question 3.
பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்துகையில் துணை வினைகளைச் சேர்க்கிறோம். பிறமொழிச் சொற்களைத் தமிழ்ச் சொற்களாக மாற்றி, ஏற்ற துணை வினைகளை இட்டு எழுதுக.
மார்னிங் எழுந்து, பிரஷ் பண்ணி, யூனிஃபார்ம்
போட்டு ஸ்கூலுக்குப் போனாள்.
…………………………………………………………………………
…………………………………………………………………………
…………………………………………………………………………
…………………………………………………………………………
Answer:
மார்னிங் எழுந்து, பிரஷ் பண்ணி, யூனிஃபார்ம்
போட்டு ஸ்கூலுக்குப் போனாள்.

  • காலையில் எழுந்துவிட்டாள்.
  • பல் துலக்கி முடித்தாள்.
  • சீருடை அணிந்து கொண்டாள்.
  • பள்ளிக்குப் புறப்பட்டுப் போனாள்.

No comments: