செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Tuesday 24 August 2021

வகுப்பு - 10- உரைநடை - கேட்கிறதா என் குரல்- வினா-விடைகள்

 பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
செய்தி 1 : ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.
செய்தி 2 : காற்றாலை மின்உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே.
செய்தி 3 : காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல் கடந்து வணிகம் செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்.

அ) செய்தி 1 மட்டும் சரி
ஆ) செய்தி 1, 2 ஆகியன சரி
இ) செய்தி 3 மட்டும் சரி
ஈ) செய்தி 1, 3 ஆகியன சரி
Answer:
ஈ) செய்தி 1, 3 ஆகியன சரி


Question 2.
பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க.
i) கொண்டல் – 1. மேற்கு
ii) கோடை – 2. தெற்கு
iii) வாடை – 3. கிழக்கு
iv) தென்றல் – 4. வடக்கு
அ) 1, 2, 3, 4
ஆ) 3, 1, 4, 2
இ) 4, 3, 2, 1
ஈ) 3, 4, 1, 2
Answer:
ஆ) 3, 1, 4, 2

குறுவினா

Question 1.
‘நமக்கு உயிர் காற்று
காற்றுக்கு வரம் மரம் – மரங்களை
வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம்’
– இது போன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.
Answer:
உயிர்களின் சுவாசம் காற்று!
காற்றின் சுவாசம் மரம்!

தூய்மையை நேசிப்போம்!
தூய காற்றைச் சுவாசிப்போம்!


சிறுவினா

Question 1.
உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசைகளிலும் நான், இலக்கியத்தில் நான், முந்நீர் நாவாய் ஓட்டியாக நான்……… முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப் பற்றிப் பேசுகிறது. இவ்வாறு ‘நீர்’ தன்னைப் பற்றிப் பேசினால் ……….. உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக.
Answer:

  • நானே! நீர்
  • உலகில் முக்கால் பாகம் நான்
  • நான் இல்லை என்றால் உலகம் இல்லை
  • ஆதவனின் அணைப்பில் கருவுற்று
    மேகமாய் வளர்ந்து
    மழையாய் பிறப்பேன் நான்
  • விண்ணிலிருந்து நான் விழுந்தால்
  • என்னைக் கண்டு உலகம் சிரிக்கும்
  • மலையில் விழுந்து
    நதியில் ஓடி
    கடலில் சங்கமிக்கும்
    சரித்திர நாயகன் நான்.

Question 2.
சோலைக் (பூங்கா) காற்றும் மின்விசிறிக் காற்றும் பேசிக்கொள்வதுபோல் ஓர் உரையாடல் அமைக்க.
Answer:
மின் விசிறிக் காற்று : நண்பா! வா எங்கெல்லாம் சுற்றித் திரிந்து வருகிறாய்? என்னைப் போல் நிலையாக ஓரிடத்திலிருந்து வீசக் கூடாதா.
சோலைக்காற்று : நீ ஓரிடத்தில் இருந்து நிலையாக வீசினாலும் உன்னை இயக்க ஒருவர் தேவை. அது மட்டுமல்லாமல் நீ கொடுக்கும் வெப்பக்காற்றை மனிதர்கள் வேறு வழியின்றி பயன்படுத்துகின்றனர். மின்சாரம் தடைப் பட்டாலும் மனிதர்கள் உன்னை இயக்க முடியாது.
மின் விசிறிக் காற்று : மனிதர்கள் உன்னை விரும்புகிறார்களா?
சோலைக்காற்று : ஆம், நான் மக்களுக்குக் குளிர்ந்த காற்றைக் கொடுக்கிறேன். என்னிலிருந்து மின்சாரம் தயாரிக்கின்றனர். காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா ஐந்தாம் இடத்திலும் தமிழகம் முதல் இடத்திலும் உள்ளது. புதுப்பிக்கக் கூடிய வளமான என்னைப் பயன்படுத்தி மின்னாற்றலை உருவாக்கும் போது நிலக்கரியின் தேவை குறைந்து கனிம வளங்கள் பாதுகாக்கப்படுகிறது.
மின் விசிறிக் காற்று : இத்தனை சிறப்புகள் கொண்ட உன்னை வைத்து ஒரு புது மொழியை உலகிற்குக் கூறப்போகிறேன்.
சோலைக்காற்று : அப்படியா! அப்புது மொழி யாது?
மின் விசிறிக் காற்று : “காற்றுள்ள போதே மின்சாரம் எடுத்துக் கொள்”.


நெடுவினா

Question 1.
மலர்ந்தும் மலராத பாதிமலர் போல
வளரும் விழி வண்ணமே – வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளந்தென்றலே – வளர்
பொதிகை மலைதோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே
– கவிஞர் கண்ணதாசனின் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயத்தையும் பாராட்டி உரை செய்க.
Answer:
காற்றைப் பாராட்டல் :
மலர்ந்த மலராத பாதி மலரையும், விடிந்தும் விடியாத காலைப் பொழுதையும் விரும்பாதார் எவருமில்லை. அனைவரும் காற்றாகிய உன்னையும் நீ இளந்தென்றலாக வரும் போது விரும்புவர் எனக் குறிப்பிட்டுள்ளார் கண்ணதாசன். காற்றானது நதிகளை வருடியும், செடி கொடிகளை வருடியும் இளந்தென்றலாக வருகிறது. காற்றைப் போலவே தமிழும் அனைவராலும் விரும்பத்தக்கதாய் இருக்கிறது. தெற்கிலுள்ள பொதிகை மலையில் தோன்றிய தமிழுக்கு மதுரையிலே சங்கம் வைத்து அழகிய தமிழ் வளர்த்ததாகவும் கருத்துக் கொள்ளலாம்.


No comments:

Post a Comment