செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Wednesday 18 August 2021

வகுப்பு -10 - கவிதைப்பேழை - இரட்டுற மொழிதல்- வினா- விடைகள்

 பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘மெத்த வணிகலன்’ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது
அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்
ஆ) பெரும் வணிகமும் பெரும் கலன்களும்
இ) ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்
ஈ) வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்
Answer:
அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்


குறுவினா

Question 1.
தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.
Answer:
ஒரு சொல்லோ, சொற்றொடரோ இருபொருள்பட வருவது இரட்டுற மொழிதல் அணி என்பர். இதனை சிலேடை அணி என்றும் அழைப்பர்.
எ.கா: சீனிவாசன் பாற்கடலில் துயில் கொள்கிறான்.

– இத்தொடர் எவ்வித மாற்றமுமின்றி இரண்டு விதமான பொருளைத் தருகிறது.

  • சீனியில் (சர்க்கரை) வாசம் செய்யும் எறும்பு பாலில் இறந்து மிதக்கிறது.
  • சீனிவாசகனாகிய திருமால் பாற்கடலில் துயில் கொள்கிறார்.

சிறுவினா

Question 1.
தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுறமொழியும் பாங்கினை விளக்குக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 1.3 இரட்டுற மொழிதல் - 3

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘தமிழ், ஆழி இரண்டுக்கும் பொருள்படும் படியான’ – இரட்டுற மொழிதலணி அமைய பாடிய ஆசிரியர் யார்?
அ) தேவநேயப் பாவாணர்
ஆ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்
இ) தமிழழகனார்
ஈ) எழில் முதல்வன்
Answer:
இ) தமிழழகனார்


Question 2.
கடல் தரும் சங்குகளின் வகைகள் எத்தனை?
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer:
ஆ) மூன்று

Question 3.
கடல் தன் அலையால் எதைத் தடுத்து நிறுத்திக் காக்கிறது?
அ) மணல்
ஆ) சங்கு
இ) கப்பல்
ஈ) மீனவர்கள்
Answer:
ஆ) சங்கு

Question 4.

முத்தினையும் அமிழ்தினையும் தருவதாகச் சந்தக்கவிமணி தமிழழகனார் குறிப்பிடுவது எதை?
அ) மூங்கில்
ஆ) கடல்
இ) மழை
ஈ) தேவர்கள்
Answer:
ஆ) கடல்


Question 5.
தமிழ் அணிகலன்களாகப் பெற்றவை எவை?
அ) சங்க இலக்கியங்கள்
ஆ) ஐம்பெருங்காப்பியங்கள்
இ) ஐஞ்சிறு காப்பியங்கள்
ஈ) நீதி இலக்கியங்கள்
Answer:
ஆ) ஐம்பெருங்காப்பியங்கள்

Question 6.
இரட்டுறமொழிதல் அணியின் வேறுபெயர் யாது?
அ) வேற்றுமை அணி
ஆ) பிறிதுமொழிதல் அணி
இ) சொற்பொருள் பின்வருநிலையணி
Answer:
ஈ) சிலேடை அணி

Question 4.
முத்தினையும் அமிழ்தினையும் தருவதாகச் சந்தக்கவிமணி தமிழழகனார் குறிப்பிடுவது எதை?
அ) மூங்கில்
ஆ) கடல்
இ) மழை
ஈ) தேவர்கள்
Answer:
ஆ) கடல்


Question 5.
தமிழ் அணிகலன்களாகப் பெற்றவை எவை?
அ) சங்க இலக்கியங்கள்
ஆ) ஐம்பெருங்காப்பியங்கள்
இ) ஐஞ்சிறு காப்பியங்கள்
ஈ) நீதி இலக்கியங்கள்
Answer:
ஆ) ஐம்பெருங்காப்பியங்கள்

Question 6.
இரட்டுறமொழிதல் அணியின் வேறுபெயர் யாது?
அ) வேற்றுமை அணி
ஆ) பிறிதுமொழிதல் அணி
இ) சொற்பொருள் பின்வருநிலையணி
Answer:
ஈ) சிலேடை அணி

Question 7.
ஒரு சொல்லோ, சொற்றொடரோ இருபொருள்பட வருவது எது?
அ) இரட்டுறமொழிதல் அணி
ஆ) வேற்றுமை அணி
இ) உவமை அணி
ஈ) உருவக அணி
Answer:
அ) இரட்டுறமொழிதல் அணி


Question 8.
சந்தக்கவிமணி எனக் குறிப்பிடப்படும் தமிழழகனாரின் இயற்பெயர் என்ன?
அ) சண்முகமணி
ஆ) சண்முகசுந்தரம்
இ) ஞானசுந்தரம்
ஈ) ஆறுமுகம்
Answer:
ஆ) சண்முகசுந்தரம்

Question 9.
தமிழழகனார் எத்தனை சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்?
அ) பத்து
ஆ) பன்னிரண்டு
இ) பதினான்கு
ஈ) பதினாறு
Answer:
ஆ) பன்னிரண்டு

Question 10.
முத்தமிழ் துய்ப்பதால் என்னும் பாடல் இடம் பெற்றுள்ள தொகுப்பு யாது?
அ) எட்டுத்தொகை
ஆ) பத்துப்பாட்டு
இ) சிற்றிலக்கியங்கள்
ஈ) தனிப்பாடல் திரட்டு
Answer:
ஈ) தனிப்பாடல் திரட்டு


குறுவினா

Question 1.
ஐம்பெருங்காப்பியங்கள் யாவை?
Answer:
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி.

Question 2.
கடலிலிருந்து கிடைக்கும் பொருட்கள் யாவை?
Answer:

  • முத்தும், அமிழ்தமும் கிடைக்கிறது.
  • வெண்சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்யம் ஆகிய மூன்று வகையான சங்குகள் கிடைக்கிறன.


Question 3.
தமிழ்மொழி குறித்து தமிழழகனார் கூறிய செய்தி யாது?
Answer:

  • தமிழ் இயல், இசை, நாடகம் முத்தமிழாய் வளர்ந்தது.
  • முதல், இடை, கடை ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது.
  • ஐம்பெருங் காப்பியங்களை அணிகலன்களாகப் பெற்றது.
  • சங்கப்புலவர்களால் காக்கப்பட்டது.

Question 4.
இரட்டுற மொழிதல் அணி என்றால் என்ன? அதன் வேறுபெயர் யாது?
Answer:

  • ஒரு சொல்லோ சொற்றொடரோ இருபொருள்பட வருவது இரட்டுறமொழிதல் அணி எனப்படும்.
  • வேறுபெயர் – சிலேடை அணி.


Question 5.
சிலேடைகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
சிலேடைகள் இரண்டு வகைப்படும். அவை:

  • செம்மொழிச் சிலேடை
  • பிரிமொழிச் சிலேடை

No comments:

Post a Comment