செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Monday 9 August 2021

வகுப்பு 10- முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ்- சுயமதிப்பீட்டு வினாக்கள் ( தானே கற்றல் முறை)

 

1➤ முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் இயற்றிய ஆசிரியர்
=> குமரகுருபரர்
,
2➤ பண்டி - என்ற சொல் குறிக்கும் பொருள் -
=> வயிறு
,
3➤ ஆடுக- இலக்கணக் குறிப்பு தருக
=> வியங்கோள் வினை முற்று
,
4➤ குண்டலமும் குழைக்காதும்-- இலக்கணக்குறிப்பு தருக
=> எண்ணும்மை
,
5➤ செங்கீரைப் பருவம் என்பது குழந்தை பிறந்து ------------ மாதங்களைக் குறிக்கும்
=> 5- 6 மாதம்
,
6➤ காலில் அணியும் அணிகலன்
=> சிலம்பு, கிண்கிணி
,
7➤ இடையில் அணிவது
=> அரை நாண்
,
8➤ நெற்றியில் அணிவது
=> சுட்டி
,
9➤ காதில் அணிவது
=> குண்டலம் மற்றும் குழை
,
10➤ சிற்றிலக்கியங்கள் மொத்தம் எத்தனை வகைப்படும்
=> 96
,
11➤ பிள்ளைத் தமிழின் மொத்த பருவங்கள்
=> 10
,
12➤ பிள்ளைத்தமிழின் இரு வகைகள் யாவை?
=> ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ்
,
13➤ குமரகுருபரின் காலம்
=> 17 ஆம் நூற்றாண்டு
,
14➤ கந்தர் கலிவெண்பாவினை எழுதியவர் யார்?
=> குமரகுருபரர்
,
15➤ சிற்றில்,சிறுபறை,சிறுதேர்- என்பது எப் பாலுக்குரியது
=> ஆண்பாற் பிள்ளைத் தமிழ்
,
16➤ பெண்பாற் பிள்ளைத்தமிழின் கடைசி மூன்று பருவங்கள்
=> கழங்கு , அம்மாணை , ஊசல்
,
17➤ இரு பாலருக்கும் பொதுவான பருவங்கள் எவை? எத்தனை
=> 7 , அவை, காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி
,
18➤ நீதி நெறி விளக்கம் - என்ற நூலை எழுதியவர் யார்?
=> குமரகுருபரர்
,
19➤ செங்கீரைப் பருவம் என்பது
=> குழந்தை தன் இருகை ஊன்றி, ஒரு காலினை மடக்கி, மற்றொரு காலை நீட்டி தலைநிமிர்ந்தும், முகமசைத்தும் ஆடுவது
,
20➤ குமரகுருபரர் எழுதிய வேறு நூட்கள்
=> மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்,சகலகலா வல்லிமாலை,நீதிநெறி விளக்கம், திருவாரூர் மும்மணிக்கோவை

No comments:

Post a Comment