செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Sunday 15 August 2021

வகுப்பு 10- இலக்கணம்- அகப்பொருள்- வினா மற்றும் விடைகள்

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்
அ) முல்லை , குறிஞ்சி, மருத நிலங்கள்
ஆ) குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்
இ) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்
ஈ) மருதம், நெய்தல், பாலை நிலங்கள்
Answer:
இ) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்


குறுவினா

Question 1.
காட்டில் விளைந்த வரகில் சமைத்த உணவு மழைக்கால மாலையில் சூடாக உண்ணச் சுவை மிகுந்திருக்கும். இத்தொடரில் அமைந்துள்ள முதற்பொருள், கருப்பொருள்களை வகைப்படுத்தி எழுதுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் - 8

Question 2.
கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத கருப்பொருள்களைத் திருத்தி எழுதுக.
உழவர்கள் மலையில் உழுதனர்.
முல்லைப்பூச் செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.
Answer:

  • உழவர்கள் வயலில் உழுதனர்.
  • நெய்தல்பூச் செடியைப் பார்த்தவாறே பரதவர்கள் கடலுக்குச் சென்றனர். (அல்லது) தாழைப்பூச் செடியைப் பார்த்தவாரே பரதவர்கள் கடலுக்குச் சென்றனர்.
  • முல்லைப்பூச் செடியைப் பார்த்தவாறே இடையர்கள் காட்டுக்குச் சென்றனர்.


கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் சரியான விடை வரிசையைத் தேர்ந்தெடு.
i) குறிஞ்சி – 1. பேரூர், மூதூர்
ii) முல்லை – 2. பட்டினம், பாக்கம்
iii) மருதம் – 3. சிறுகுடி
iv) நெய்தல் – 4. குறும்பு
v) பாலை – 5. பாடி, சேரி
அ) 3, 4, 1, 2, 5
ஆ) 4, 3, 1, 5, 2
இ) 3, 2, 5, 1, 4
ஈ) 3, 5, 1, 2, 4
Answer:
ஈ) 3, 5, 1, 2, 4

Question 2.
பொருத்தமான விடையைக் கண்டறிக.
i) குறிஞ்சி – 1. வற்றிய சுனை, கிணறு
ii) முல்லை – 2. மனைக்கிணறு, பொய்கை
iii) மருதம் – 3. காட்டாறு
iv) நெய்தல் – 4. அருவிநீர், சுனைநீர்
v) பாலை – 5. மணற்கிணறு, உவர்க்கழி
அ) 4, 3, 2, 5, 1
ஆ) 5, 4, 1, 2, 3
இ) 4, 3, 5, 1, 2
ஈ) 3, 4, 5, 2, 1
Answer:
அ) 4, 3, 2, 5, 1


Question 3.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ) முல்லை – வரகு, சாமை
ஆ) மருதம் – செந்நெல், வெண்ணெல்
இ) நெய்தல் – தினை
ஈ) பாலை – சூறையாடலால் வரும் பொருள்
Answer:
இ) நெய்தல் – தினை

Question 4.
முல்லை நிலத்திற்குரிய பெரும்பொழுதினைத் தேர்ந்தெடு.
அ) கார்காலம்
ஆ) குளிர்காலம்
இ) முன்பனி
ஈ) பின்பனி
Answer:
அ) கார்காலம்

Question 5.
ஐந்திணைகளுக்கு உரியன ……………
i) முதற்பொருள்
ii) கருப்பொருள்
iii) உரிப்பொருள்
அ) i – சரி
ஆ) ii – சரி
இ) மூன்றும் சரி
ஈ) iii – மட்டும் சரி
Answer:
இ) மூன்றும் சரி


Question 6.
பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. கடலும் கடல் சார்ந்த இடமும்
ii) முல்லை – 2. வயலும் வயல் சார்ந்த இடமும்
iii) மருதம் – 3. காடும் காடு சார்ந்த இடமும்
iv) நெய்தல் – 4. மலையும் மலை சார்ந்த இடமும்
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 4, 2, 3, 1
ஈ) 3, 4, 2, 1
Answer:
அ) 4, 3, 2, 1

Question 7.
மணலும் மணல் சார்ந்த இடமும் – எத்திணைக்குரியது?
அ) குறிஞ்சி
ஆ) முல்லை
இ) நெய்தல்
ஈ) பாலை
Answer:
ஈ) பாலை

Question 8.
பொழுது எத்தனை வகைப்படும்?
அ) இரு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஆறு
Answer:
அ) இரு


Question 9.
பொருத்திக் காட்டுக.
i) கார்காலம் – 1. மாசி, பங்குனி
ii) குளிர்காலம் – 2. மார்கழி, தை
iii) முன்பனிக்காலம் – 3. ஐப்பசி, கார்த்திகை
iv) பின்பனிக்காலம் – 4. ஆவணி, புரட்டாசி
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 4, 2, 3,1
ஈ) 3, 4, 2, 1
Answer:
அ) 4, 3, 2, 1

Question 10.
இளவேனிற் காலத்துக்குரிய மாதங்கள் ……………
அ) ஆவணி, புரட்டாசி
ஆ) சித்திரை, வைகாசி
இ) ஆனி, ஆடி
ஈ) மார்கழி, தை
Answer:
ஆ) சித்திரை, வைகாசி

Question 11.
ஆனி, ஆடி முதலான மாதங்கள் ……………
அ) கார்காலம்
ஆ) குளிர்காலம்
இ) இளவேனிற்காலம்
ஈ) முதுவேனிற்காலம்
Answer:
ஈ) முதுவேனிற்காலம்


Question 12.
பொருத்திக் காட்டுக.
i) காலை – 1. மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை
ii) நண்ப கல் – 2. பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை
iii) எற்பாடு – 3. காலை 10 மணி முதல் 2 மணி வரை
iv) மாலை – 4. காலை 6 மணி முதல் 10 மணி வரை
அ) 4, 3, 2, 1|
ஆ) 2, 1, 3, 4
இ) 4, 3, 1, 2
ஈ) 2, 1, 4, 3
Answer:
அ) 4, 3, 2, 1

Question 13.
இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை உள்ள சிறுபொழுது ……………
அ) எற்பாடு
ஆ) மாலை
இ) யாமம்
ஈ) வைகறை
Answer:
இ) யாமம்


Question 14.
வைகறைக்குரிய கால நேரம்……………
அ) இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை
ஆ) காலை 6 மணி முதல் 10 மணி வரை
இ) காலை 10 மணி முதல் 2 மணி வரை
ஈ) இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை
Answer:
அ) இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை

Question 15.
பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. கார்காலம்
ii) முல்லை – 2. குளிர்காலம், முன்பனிக்காலம்
iii) மருதம், நெய்தல் – 3. இளவேனில், முதுவேனில், பின்பனி
iv) பாலை – 4. ஆறு பெரும்பொழுதுகள்
அ) 2, 1, 4, 3
ஆ) 4, 1, 3, 2
இ) 4, 3, 1, 2
ஈ) 2, 4, 3, 1
Answer:
அ) 2, 1, 4, 3


Question 16.
நண்பகல் எத்திணைக்குரிய சிறுபொழுது?
அ) குறிஞ்சி
ஆ) முல்லை
இ) நெய்தல்
ஈ) பாலை
Answer:
ஈ) பாலை

Question 17.
பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. வைகறை
ii) முல்லை – 2. எற்பாடு
iii) மருதம் – 3. யாமம்
iv) நெய்தல் – 4. மாலை
அ) 3, 4, 1, 2
ஆ) 4, 3, 2, 1
இ) 1, 2, 3, 4
ஈ) 3, 2, 1, 4
Answer:
அ) 3, 4, 1, 2

Question 18.
திணைகளுக்குரிய தெய்வத்தைப் பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. கொற்றவை
ii) முல்லை – 2. வருணன்
iii) மருதம் – 3. இந்திரன்
iv) நெய்தல் – 4. திருமால்
v) பாலை – 5. முருகன்
அ) 5, 4, 3, 2, 1
ஆ) 4, 5, 2, 3,1
இ) 3, 2, 4, 5, 1
ஈ) 1, 2, 3, 4, 5
Answer:
அ) 5, 4, 3, 2, 1


Question 19.
திணைகளுக்குரிய மக்களைப் பொருத்திக் காட்டுக.
i) வெற்பன் – 1. குறிஞ்சி
ii) தோன்றல் – 2. முல்லை
iii) ஊரன் – மருதம்
iv) சேர்ப்ப ன் – 4. நெய்தல்
v) எயினர் – 5. பாலை
அ) 5, 4, 3, 2, 1
ஆ) 4, 5, 2, 3, 1
இ) 3, 5, 4, 1, 2
ஈ) 1, 2, 3, 4, 5
Answer:
ஈ) 1, 2, 3, 4, 5

Question 20.
பொருத்திக் காட்டுக.
i) புலி – 1. பாலை
ii) மான் – 2. நெய்தல்
iii) எருமை – 3. மருதம்
iv) முதலை – 4. முல்லை
v) வலியிழந்த யானை – 5. குறிஞ்சி
அ) 5, 4, 3, 2, 1
ஆ) 4, 5, 2, 3, 1
இ) 2, 1, 4, 5, 3
ஈ) 4, 2, 3, 1, 5
Answer:
அ) 5, 4, 3, 2, 1


Question 21.
பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. குரவம், பாதிரி
ii) முல்லை – 2. தாழை
iii) மருதம் – 3. தாமரை, செங்கழுநீர்
iv) நெய்தல் – 4. தோன்றி
v) பாலை – 5. காந்தள்
அ) 5, 4, 3, 2, 1
ஆ) 4, 5, 2, 1, 3
இ) 2, 3, 4, 1, 5
ஈ) 3, 1, 4, 2, 5
Answer:
அ) 5, 4, 3, 2, 1

Question 22.
பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. அகில், வேங்கை
ii) முல்லை – 2. கொன்றை, காயா
iii) மருதம் – 3. காஞ்சி
iv) நெய்தல் – 4. புன்னை , ஞாழல்
v) பாலை – 5. இலுப்பை
அ) 1, 2, 3, 4, 5
ஆ) 2, 3, 1, 5, 4
இ) 3, 4, 2, 1, 5
ஈ) 5, 4, 3, 2, 1
Answer:
அ) 1, 2, 3, 4, 5


Question 23.
பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. கடற்காகம்
ii) முல்லை – 2. காட்டுக் கோழி, மயில்
iii) மருதம் – 3. நாரை, நீர்க்கோழி, அன்னம்
iv) நெய்தல் – 4. கிளி, மயில்
v) பாலை – 5. புறா, பருந்து
அ) 4, 2, 3, 1, 5
ஆ) 5, 4, 3, 2, 1
இ) 4, 3, 1, 5, 2
ஈ) 3, 4, 2, 5, 1
Answer:
அ) 4, 2, 3, 1, 5

Question 24.
விளரி யாழ் எத்திணைக்கு உரியது?
அ) குறிஞ்சி
ஆ) மருதம்
இ) நெய்தல்
ஈ) பாலை
Answer:
இ) நெய்தல்

Question 25.
பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. துடி
ii) முல்லை – 2. மீன் கோட்பறை
iii) மருதம் – 3. மணமுழா
iv) நெய்தல் – 4. ஏறுகோட்பறை
v) பாலை
5. தொண்டகம்
அ) 5, 4, 3, 2, 1
ஆ) 4, 5, 2, 1, 3
இ) 3, 4, 5, 2, 1
ஈ) 3, 5, 1, 2, 4
Answer:
அ) 5, 4, 3, 2, 1


Question 26.
செவ்வழிப்பண், பஞ்சுரப்பண் முதலியனவற்றுக்குரிய திணைகள் முறையே
அ) நெய்தல், பாலை
ஆ) குறிஞ்சி, முல்லை
இ) மருதம், நெய்தல்
ஈ) மருதம், பாலை
Answer:
அ) நெய்தல், பாலை

Question 27.
முல்லை நிலமக்களின் உணவுப் பொருள்கள்
அ) வெண்நெல், வரகு
ஆ) மலைநெல், திணை
இ) வரகு, சாமை
ஈ) மீன், செந்நெல்
Answer:
இ) வரகு, சாமை

குறுவினா

Question 1.
பொருள் இலக்கணம் குறிப்பு வரைக.
Answer:

  • பொருள் என்பது ஒழுக்க முறை.
  • தமிழர் வாழ்வியல் ஒழுக்கங்களை அகம், புறம் என வகுத்தனர்.
  • இவற்றைப் பற்றிக் கூறுவதே பொருள் இலக்கணம்.

Question 2.
அகத்திணை என்றால் என்ன?
Answer:
அன்புடைய தலைவன் தலைவி இடையிலான உறவு நிலைகளைக் கூறுவது அகத்திணை ஆகும்.


Question 3.
அன்பின் திணைகள் எத்தனை? அவை யாவை?
Answer:
அன்பின் திணைகள் ஐந்து. அவை:
குறிஞ்சி, முல்லை , மருதம், நெய்தல், பாலை.

Question 4.
அகத்திணைக்குரிய பொருள்கள் எத்தனை? அவை யாவை?
Answer:
அகத்திணைக்குரிய பொருள்கள் மூன்று. அவை:
முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள்.

Question 5.
முதற்பொருளாவது யாது?
Answer:
நிலமும் பொழுதும் முதற்பொருள் ஆகும்.

Question 6.
ஐவகை நிலங்களின் அமைவிடங்களைக் கூறுக.
Answer:

  • குறிஞ்சி – மலையும் மலை சார்ந்த இடமும்
  • முல்லை – காடும் காடு சார்ந்த இடமும்
  • வயலும் வயல் சார்ந்த இடமும்
  • நெய்தல் – கடலும் கடல் சார்ந்த இடமும்
  • பாலை – சுரமும் சுரம் சார்ந்த இடமும்

Question 7.
பொழுது எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
பொழுது இரண்டு வகைப்படும் அவை: பெரும்பொழுது, சிறுபொழுது.


Question 8.
பெரும்பொழுதிற்குரிய கூறுகள் எத்தனை? அவை யாவை?
Answer:
பெரும்பொழுதிற்குரிய கூறுகள் ஆறு. அவை:
கார்காலம், குளிர்காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம், இளவேனிற் காலம், முதுவேனிற் காலம்.

Question 9.
சிறுபொழுதிற்குரிய கூறுகள் எத்தனை? அவை யாவை?
Answer:
சிறுபொழுதிற்குரிய கூறுகள் ஆறு. அவை:
காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம், வைகறை.

Question 10.
எற்பாடு பிரித்து பொருள் எழுதுக.
Answer:
எல் + பாடு = எற்பாடு
எல் – சூரியன்
பாடு – மறையும் நேரம்
பொருள் – சூரியன் மறையும் நேரம்.

Question 11.
கருப்பொருள் என்றால் என்ன?
Answer:
ஒவ்வொருநிலத்திற்கும் உரிய தெய்வம் முதலாகத்தொழில் வரையில் தனித்தனியே குறிப்பிடப்படுவது கருப்பொருள்.


Question 12.
உரிப்பொருள் என்றால் என்ன?
Answer:
கவிதைகளில் கருப்பொருளின் பின்னணியில் அமைத்துப் பாடப்படுவது உரிப்பொருள்.

Question 13.
ஐவகை நிலத்திற்குரிய தெய்வங்களின் பெயர்களைக் கூறு.
Answer:
குறிஞ்சி – முருகன்
முல்லை – திருமால்
மருதம் – இந்திரன்
நெய்தல் – வருணன்
பாலை – கொற்றவை

Question 14.
ஐவகை நிலத்திற்குரிய பறைகளைக் கூறு.
Answer:
குறிஞ்சி – தொண்டகப் பறை
முல்லை – ஏறுகோட்பறை
மருதம் – மணமுழா, நெல்லரிகிணை
நெய்தல் – மீன் கோட்பறை
பாலை – துடி


Question 15.
ஐவகை நிலத்திற்குரிய யாழ், பண் எவை என எழுதுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் - 9

Question 16.
ஐவகை நிலத்திற்குரிய மரம், பூ ஆகியவற்றை எழுதுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் - 10


Question 17.
ஐவகை நிலத்திற்குரிய மக்கள் யாவர்?
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் - 11

Question 18.
ஐவகை நிலத்திற்குரிய விலங்குகள் மற்றும் பறவைகள் எவை எனக் கூறுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் - 12

Question 19.
ஐவகை நிலத்திற்குரிய தொழில்கள் யாவை?
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் - 13


Question 20.
ஐவகை நிலத்திற்குரிய நீரை எழுதுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் - 14

Question 21.
ஐவகை நிலத்திலிருந்து கிடைக்கும் உணவுப் பொருள்கள் யாவை?
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் - 15

Question 22.
ஐவகை நிலத்திற்குரிய ஊர்களைக் குறிப்பிடுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் - 16


சிறுவினா

Question 1.
பெரும்பொழுதிற்குரிய கூறுகளை எழுதி, அக்காலத்திற்கான மாதங்களையும் எழுதுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் - 17

(1 ஆண்டின் 12 மாதங்களும் இரண்டிரண்டு மாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. (12/2 = 6)

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.5 பாய்ச்சல்

Question 2.
சிறுபொழுதிற்குரிய கூறுகளையும் அதற்குரிய நேர அளவுகளையும் குறிப்பிடுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் - 18
(1 நாளின் 24 மணி நேரமும் நான்கு நான்கு மணி நேரமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. (24/4=6)

Question 3.
ஐந்திணைக்கும் உரிய பெரும்பொழுதுகள் சிறுபொழுதுகளை எழுதுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் - 19

No comments:

Post a Comment