செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Wednesday 11 August 2021

வகுப்பு 9 - நீரின்றி அமையாது - வினா- விடைகள்.

 பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது?
அ) அகழி
ஆ) ஆறு
இ) இலஞ்சி
ஈ) புலரி
Answer:
ஈ) புலரி

Question 2.

பொருத்தமான விடையைத் தேர்க.
அ) நீரின்று அமையாது உலகு – திருவள்ளுவர்
ஆ) நீரின்று அமையாது யாக்கை – ஒளவையார்
இ) மாமழை போற்றுதும் – இளங்கோவடிகள்
i) அ, இ, ஆ
ii) ஆ, இ, அ
iii) ஆ, அ , இ
iv) அ, ஆ, இ
Answer:
iv) அ, ஆ, இ

குறுவினா

Question 1.
“கூவல்” என்று அழைக்கப்படுவது எது?
Answer:
உவர்மண் (களர்மண்) நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலைக்கு கூவல் என்று பெயர்.


Question 2.
உங்களது பள்ளியைச் சுற்றியுள்ள நீர்நிலைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
Answer:
ஆழிக் கிணறு – கடலருகே தோண்டிக் கட்டிய கிணறு
இலஞ்சி – பலவகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கம்
ஊருணி – மக்கள் பருகு நீர் உள்ள நீர்நிலை
கேணி – அகலமும் ஆழமும் உள்ள பெருங்கிணறு
பூட்டைக் கிணறு – கமலை நீர்பாய்ச்சும் அமைப்புள்ள கிணறு

Question 3.
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
Answer:
காடும் உடையது அரண்
– இக்குறள் கூறும் நாட்டின் அரண்கள் யாவை?
மணிபோல் தெளிவான நீரும், வெட்ட வெளியான நிலமும், ஓங்கி உயர்ந்த மலையும் நிழல் தருகிற காடும் ஆகிய நான்கும் அமைந்து இருப்பதே ஒரு நாட்டின் அரண் ஆகும்.



No comments:

Post a Comment