செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Thursday 12 August 2021

வகுப்பு- 9 (நீரின்றி அமையாது உலகு) உரைநடை சுயமதிப்பீட்டு வினாக்கள் (தானே கற்றல் முறை)

உலக சுற்றுச்சூழல் நாள் எது
=> ஜீன் 5
,
பயிர்க்கூட்டம் மகிழ்ச்சியா வாழ துணை செய்வது
=> மழை
,
கல்லணையைக் கட்ட பயன்படுத்தப்பட்ட தொழில் நுட்பம்
=> ஒட்டும் களிமண்
,
பாண்டி நிலத்து நிலப்பகுதியில் ஏரியை --------------- என்று அழைப்பர்
=> கண்மாய்
,
மக்கள் பருகுநீர் உள்ள நீர்நிலைக்கு ---------------- என்று பெயர்
=> ஊருணி
,
மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வளையமிடட கிணற்றுக்கு -------------- என்று பெயர்
=> உறைக்கிணறு
,
கல்லணையைக் கட்டிய மன்னன்
=> கரிகால் சோழன்
,
உணவெனப்படுவது நிலத்தொடு நீரே”----- பாடல் வரி இடம் பெறும் நூல்
=> புறநானூறு
,
இந்திய நீர் பாசனத்தின் தந்தை என அறியப்படுபவர் யார்?
=> சர் ஆர்தர் காட்டன்
,
கிராண்ட் அணைக்கட் - என்ற சிறப்பு பெயரிட்டு அழைக்கப்படும் அணை
=> கல்லணை
,
குளித்தல் என்ற சொல் குறிக்கும் பொருள்-
=> உடம்பினைத் தூய்மை செய்தல்
,
சனி நீராடு - -- எனக் குறிப்பிட்டவர் யார்?
=> ஔவையார்
,
குழித் தூம்பில் காணப்படும் துளைகளின் எண்ணிக்கை எத்தனை?
=> 2
,
குழித்தூம்பின் மேல் துளைக்கு என்ன பெயர்?
=> நீரோடித் துளை
,
குழித்தூம்பின் கீழ் துளை எவ்வாறு அழைக்கப்படுகிறது
=> சோறோடித் துளை
,
கடலருகே தோண்டிக் கட்டிய கிணறு
=> ஆழிக்கிணறு
,
கமலை நீர் பாய்ச்சும் அமைப்புள்ள கிணறு
=> பூட்டைக் கிணறு
,
முல்லை பெரியாறு அணையைக் கட்டியவர் யார்?
=> ஜான் பென்னி குவிக்
,
பலவகைக்கும் பயன்படும் நீர்த் தேக்கம் ------- எனப்படும்
=> இலஞ்சி
,
அகலமும் ஆழமும் உடைய பெருங்கிணறு ------------ எனப்படும்
=> கேணி

No comments:

Post a Comment