செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Wednesday 4 August 2021

வகுப்பு - 8 - 2.2 கோணக்காத்துப் பாட்டு ( வினா விடைகள் )

 மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
வானில் கரு ………… தோன்றினால் மழை பொழியும் என்பர்.
அ) முகில்
ஆ) துகில்
இ) வெயில்
ஈ) கயல்
Answer:
அ) முகில்

Question 2.
முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் ………………..யும் ஓட்டிவிடும்.
அ) பாலனை
ஆ) காலனை
இ) ஆற்றலை
ஈ) நலத்தை
Answer:
ஆ) காலனை

Question 3.
‘விழுந்ததங்கே’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………..
அ) விழுந்த + அங்கே
ஆ) விழுந்த + ஆங்கே
இ) விழுந்தது + அங்கே
ஈ) விழுந்தது + ஆங்கே
Answer:
ஈ) விழுந்தது + ஆங்கே


Question 4.
‘செத்திறந்த’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………
அ) செ + திறந்த
ஆ) செத்து + திறந்த
இ) செ + இறந்த
ஈ) செத்த + இறந்த
Answer:
ஈ) செத்த + இறந்த

Question 5.
பருத்தி + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………
அ) பருத்தி எல்லாம்
ஆ) பருத்தியெல்லாம்
இ) பருத்தெல்லாம்
ஈ) பருத்திதெல்லாம்
Answer:
ஆ) பருத்தியெல்லாம்

குறுவினா

Question 1.
கப்பல் கவிழ்ந்ததற்குக் காரணமாகக் கோணக்காத்துப் பாட்டு கூறுவது யாது?
Answer:
கப்பல் கவிழ்ந்ததற்குக் காரணமாகக் கோணக்காத்துப் பாட்டு கூறுவது : கடலில் விரைந்து வந்த கப்பல் எமனைப் போல வந்த பெருமழையினாலும் சுழல் காற்றினாலும் கவிழ்ந்த து.

Question 2.
புயல் காற்றினால் தொண்டைமான் நாட்டில் ஏற்பட்ட அழிவு யாது?
Answer:
புயல் காற்றினால் தொண்டைமான் நாட்டில் ஏற்பட்ட அழிவு : தொண்டைமான் நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னாபின்னமாக ஒடிந்து விழுந்தன.

Question 3.
கொல்லிமலை பற்றிப் பாடல் கூறும் செய்தி யாது?
Answer:
கொல்லிமலை பற்றிப் பாடல் கூறும் செய்தி : சித்தர்கள் வாழும் கொல்லிமலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் புயல் அடித்தது.

சிறுவினா

Question 1.
புயல் காற்றினால் மரங்களுக்கு ஏற்பட்ட நிலைகளாகப் பாடல் குறிப்பிடும் கருத்துகள் யாவை?
Answer:
புயல் காற்றினால் மரங்களுக்கு ஏற்பட்ட நிலைகளாகப் பாடல் குறிப்பிடும் கருத்துகள்:
(i) வாங்கல் என்னும் ஊரில் அழகாக வைக்கப்பட்ட தென்னம்பிள்ளைகள் எல்லாம் வீணாயின.

(ii) அழிவில்லாத காங்கேய நாட்டின் மேட்டுப் பகுதிகளில் வளர்ந்திருந்த பருத்திச் செடிகள் எல்லாம் சிதைவு அடைந்து வெறும் குச்சிகளாக மாறின.

(iii) தொண்டைமான் நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னாபின்னமாக ஒடிந்து விழுந்தன.

Question 2.
கோணக்காற்றால் வீடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் யாவை?
Answer:
கோணக்காற்றால் வீடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் : திரண்டு எழுந்த மேகங்களால் உருவான காற்று வேகமாக அடித்ததால் பெரிய வீடுகளின் கூரைகள் எல்லாம் மொத்தமாகப் பிரிந்து சரிந்தன. அழகிய சுவர்களை உடைய மாடி வீடுகள் அடியோடு விழுந்தன.


சிந்தனை வினா

Question 1.
இயற்கைச் சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கச் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?
Answer:
இயற்கைச் சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கச் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் :

புயல், மழை :
ஏரிக்கரை மற்றும் ஆற்றோரச் சாலைகளில் நடப்பதைத் தவிர்க்க வேண்டும்; மரங்களின் கீழே நிற்பதைத் தவிர்க்க வேண்டும். சாக்கடை நீர் வடிகால்கள், வாய்க்கால்கள் போன்றவற்றை அடைப்பில்லாமல் சீர் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். கழிவுநீர்த் தொட்டிகள் எப்போதும் மூடிய நிலையில் வைத்திருக்கப்பட வேண்டும்.

சாலையில் மின்கம்பிகள் விழுந்திருந்தால் அவற்றைத் தொடக்கூடாது. மின்சாதனங்கள், எரிவாயுப் பொருள்கள் பழுதுபட்டிருந்தால் அவற்றைப் பயன்படுத்தக்கூடாது. தற்போது மின்சார வாரியமே புயல், மழை என்றால் மின்சாரத்தைத் துண்டித்து விடுகின்றனர். புயலின்போது வெளியில் செல்லாமல் இருப்பது சாலச் சிறந்தது. அவசியம் ஏற்பட்டால் மட்டுமே வாகனங்களில் செல்லலாம்.

வெள்ளப் பெருக்கென்றால் வேடிக்கை பார்க்கச் செல்வதைத் தவிர்க்கலாம். இடி மின்னலின்போது மரத்தின்கீழ் நிற்கக் கூடாது. செல்பேசி, வீட்டுச்சாவி, தீப்பெட்டி மெழுகுவர்த்தி, தண்ணீர்ப் புட்டிகள் முதலிய அவசியமான பொருள்களை ஒரே இடத்தில் வைத்திருக்க வேண்டும். முதலுதவி பெட்டி ஒவ்வொருவர் வீட்டிலும் இருப்பது அவசியம். அவசர உதவிக்கான தொலைபேசி எண்களை அனைவரும் அறிந்திருத்தல் அவசியம்.

நிலநடுக்கம் :
நிலநடுக்கத்தின் போது அடுக்ககங்களில் இருப்பவர்கள் மின் தூக்கியைப் பயன்படுத்தக்கூடாது. வீட்டை விட்டு வெளியே வந்து வெட்ட வெளியில் நிற்கலாம். மரங்கள், மின்கம்பங்கள் இல்லாத இடமாகப் பார்த்து நிற்க வேண்டும். பாலங்களைக் கடக்கக்கூடாது.

கூடுதல் வினாக்கள்

சொல்லும் பொருளும் :
1. முகில் – மேகம்
2. வின்னம் – சேதம்
3. கெடிகலங்கி – மிக வருந்தி
4. வாகு – சரியாக
5. சம்பிரமுடன் – முறையாக
6. காலன் – எமன்
7. சேகரம் – கூட்டம்
8. மெத்த – மிகவும்
9. காங்கேய நாடு – கொங்குமண்டலத்தின் 24 நாடுகளுள் ஒன்று.

நிரப்புக :

1. இயற்கை மிகவும் ……………………
2. தமிழ்நாடு அடிக்கடி ………………. தாக்கப்படும் பகுதியாகும்.
3. பேச்சுத் தமிழில் அமைந்த கும்மிப்பாடல்கள் …………………….. என்று அழைக்கப்பட்டன.
4. பஞ்சக்கும்மிகள் என்னும் நூல் …………………….. என்பவரால் தொகுக்கப்பட்டது.
5. காத்து நொண்டிச்சிந்து’ இயற்றியவர் ……………………
Answer:
1. அழகானது, அமைதியானது
2. புயலால்
3. பஞ்சக்கும்மிகள்
4. புலவர் செ. இராசு
5. வெங்கம்பூர் சாமிநாதன்


No comments:

Post a Comment