செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Monday 15 February 2021

வ. 10.சிற்றகல் ஒளி வினா விடைப் பகுதி

 பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்’ -மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே ……………..
அ) திருப்பதியும் திருத்தணியும்
ஆ) திருத்தணியும் திருப்பதியும்
இ) திருப்பதியும் திருச்செந்தூரும்
ஈ) திருப்பரங்குன்றமும் பழனியும்
Asnwer:
அ) திருப்பதியும் திருத்தணியும்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 2.
தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது …………………
அ) திருக்குறள்
ஆ) புறநானூறு
இ) கம்பராமாயணம்
ஈ) சிலப்பதிகாரம்
Answer:
ஈ) சிலப்பதிகாரம்

குறுவினா

Question 1.
வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று தருக.
Answer:

  • ம.பொ.சி. வறுமையிலும் நூல் வாங்குவதற்குப் பணமில்லாத நிலையில் பழைய புத்தகங்கள் வாங்கி படிப்பார்.
  • இவர் விருப்பமான புத்தகங்களைக் குறைந்த விலைக்கு வாங்கும் வழக்கம் உள்ளவர்.
  • இவர் பல வேளைகளில் பட்டினி கிடந்து புத்தகம் வாங்கி ஆனந்தம் அடைவார்.
  • செவி வழியாகவும் இலக்கிய அறிவைப் பெற்றார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

Question 2.
பொருத்தமான இடங்களில் நிறுத்தற் குறியிடுக.
Answer:
பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி, நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன். – ம.பொ.சி.

சிறுவினா

Question 1.
‘தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்’ – இடஞ்சுட்டி பொருள் விளக்குக.
Answer:
இடம்:
‘ம.பொ.சி’யின் தன் வரலாற்றுப் பகுதியில் சிற்றகல் ஒளி என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ளன.

பொருள்:
ஆந்திர மாநிலம் பிரியும்போது சென்னைதான் அதன் தலைநகராக இருக்க வேண்டும் என்று ஆந்திர மாநிலத் தலைவர்கள் விரும்பினர். அதனை எதிர்த்து ம.பொ.சி. கூறிய கூற்று இது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

விளக்கம்:
மாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமையில் ஒரு கூட்டத்தைக் கூட்டினர். அப்பொழுது, தமிழ் மாநிலத்தின் தலைநகர் சென்னை’ என்ற தீர்மானத்தை முன்மொழிந்தனர்.முன்மொழிந்து தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்’ என்று ம.பொ.சி முழங்கினார். 25.03.1953இல் பிரதமர் நேரு, சென்னை தமிழருக்கே என்ற உறுதிமொழியை, நாடாளுமன்றத்தில் நடுவணரசின் சார்பில் வெளியிட்டார்.

நெடுவினா

Question 1.
நாட்டு விழாக்கள் – விடுதலைப் போராட்ட வரலாறு – நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு – குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் ‘மாணவப்பருவமும் நாட்டுப்பற்றும்’ என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.
Answer:

‘மாணவப் பருவமும் நாட்டுப்பற்றும்’

அறிமுகவுரை:

அன்பார்ந்த அவையோரே! வணக்கம்! மாணவப் பருவத்திலே நாம் நாட்டுப்பற்று உடையவர்களாய் இருத்தல் வேண்டும் என்பதைப் பற்றி உங்கள் முன் பேச வந்துள்ளேன்.

மாணவப்பருவமும் நாட்டுபற்றும்:

  • ‘நாட்டின் எதிர்காலம் வகுப்பறைகளில் தான் வடிவமைக்கப்படுகிறது’ என்றார் நேரு. எனவே கல்வியோடு நாட்டுப்பற்றையும் கண் எனப் போற்றி வளர்க்க வேண்டும்.
  • சுதந்திரதினம், குடியரசுதினம் போன்ற நாட்டு விழாக்களைக்கொண்டாடும்போது நம் முன்னோர்கள் சிந்திய கண்ணீரையும், செந்நீரையும், விலைமதிப்பில்லாத உயிரையும் மனப்பூர்வமாக உணர்ந்து செயல்படவேண்டும்.
  • அகிம்சை, தீண்டாமை விலக்கு, கதர் விற்பனை, வெள்ளையனே வெளியேறு போன்ற விடுதலைப் போராட்ட முறைகளை நாம் மறத்தல் கூடாது.
  • செக்கடியிலும், சிறைச்சாலையிலும் நம் வீரர்கள் பட்ட துன்பத்தை எண்ணிப் பார்த்து, நாட்டு விழாக்களைக் கொண்டாடும் போது நாட்டைக் காக்கும் சூளுரை ஏற்பவர்களாகவும், அதனைச் செயல்படுத்துகிறவர்களாகவும் நாம் இருத்தல் வேண்டும்.
  • மாணவப் பருவத்தில் நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர்படை ஆகியவற்றில் இணைந்து நாட்டுப்பற்றையும், சேவை மனப்பான்மையையும் நாம் வளர்த்துக் கொண்டால் நாளை நாம் நாட்டைக் காக்கும் நல்லோராய், பற்றாளராய் மாற முடியும்.
  • கல்வி, பொருளாதாரம், தொழில் பெருக்கம் இவற்றில் நாம் அக்கறை உடையவர்களாய் இருப்பதும் நாட்டுப்பற்றே.
  • நம் நாட்டின் உயர்வுக்கும் முற்போக்கு வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டையாக இருப்பவைகளை முறியடித்து கல்வி, அறிவியல், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் கவனம் செலுத்தல் வேண்டும்.
  • சொந்த நலன் கருதி சொந்த நாட்டையே சீரழிக்கும் கயவர் போல் இல்லாமல் இருத்தல் வேண்டும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 சிற்றகல் ஒளி

நிறைவுரை:

  • நாடு நமக்கு என்ன செய்தது என்பதை நினைக்காமல் நாட்டிற்காக நாம் நல்ல செயல்கள் செய்வோம் எனக் கூறி என் உரையை நிறைவு செய்கிறேன்.

No comments:

Post a Comment