செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Tuesday 2 February 2021

வகுப்பு8.இயல் 1.தமிழ் மொழி மரபு. வினா விடைகள்

 பாடநூல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பறவைகள் ………………… பறந்து செல்கின்றன.
அ) நிலத்தில்
ஆ) விசும்பில்
இ) மரத்தில்
ஈ) நீரில்
Answer:
ஆ) விசும்பில்

Question 2.
இயற்கையைப் போற்றுதல் தமிழர் ……………………..
அ) மரபு
ஆ) பொழுது
இ) வரவு
ஈ) தகவு
Answer:
அ) மரபு

Question 3.
‘இருதிணை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………………
அ) இரண்டு + திணை
ஆ) இரு + திணை
இ) இருவர் + திணை
ஈ) இருந்து + திணை
Answer:
அ) இரண்டு + திணை

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.2 தமிழ்மொழி மரபு

Question 4.
‘ஐம்பால்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….
அ) ஐம் + பால்
ஆ) ஐந்து + பால்
இ) ஐம்பது + பால்
ஈ) ஐ + பால்
Answer:
ஆ) ஐந்து + பால்

சிந்தனை வினா

Question 1.
நம் முன்னோர்கள் மரபுகளைப் பின்பற்றியதன் காரணம் என்னவாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்?
Answer:
மனிதன் தன் வாழ்நாளில் நல்ல முறையில் வாழ்ந்து, தான் வாழ்ந்ததற்கான அடிச்சுவட்டை விட்டுச் செல்கிறான். அவ்வகையில் பழந்தமிழர் தம் வாழ்வில் கடைப்பிடித்து தமக்கு விட்டுச் சென்ற பண்பாட்டை மரபுகளாகப் பின்பற்றுவது நமது கடமையாகும். அதனால்தான், நம் முன்னோர்கள் மரபுகளைப் பின்பற்றி வந்தனர். மரபு மாறினால் பொருள் மாறிவிடும் பண்பாடும் அர்த்தமற்று போய்விடும். எனவே, நம் முன்னோர்கள் மரபுகளைப் பின்பற்றியதன் காரணம் இதுவாகத்தான் இருக்கும் என கருதுகிறேன்

No comments:

Post a Comment