செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Thursday 4 February 2021

வகுப்பு 10 நீதி வெண்பா வினா விடை கள்

 பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
அருந்துணை என்பதைப் பிரித்தால் …………………
அ) அருமை + துணை
ஆ) அரு + துணை
இ) அருமை + இணை
ஈ) அரு + இணை
Answer:
அ) அருமை + துணை

Question 2.
“அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை”
– என்ற இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?
அ) தமிழ்
ஆ) அறிவியல்
இ) கல்வி
ஈ) இலக்கியம்
Answer:
இ) கல்வி


குறுவினா

Question 1.
செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக.
Answer:
கற்போம்! கற்போம்!
அருளைப் பெருக்க கற்போம்!
கற்போம்! கற்போம்!
அறிவினைப் பெற கற்போம்!
கற்போம்! கற்போம்!
மயக்கம் விலக்க கற்போம்!
கற்போம்! கற்போம்!
உயிருக்குத் துணையாக கல்வியைக் கற்போம்!

No comments:

Post a Comment