செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Wednesday 3 February 2021

வகுப்பு 8.இயல் 2.திருக்குறள் வினா விடைப் பகுதி

 பாடநூல் வினாக்கள்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.6 திருக்குறள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
புகழாலும் பழியாலும் அறியப்படுவது ………………………….
அ) அடக்கமுடைமை
ஆ) நாணுடைமை
இ) நடுவுநிலைமை
ஈ) பொருளுடைமை
Answer:
இ) நடுவுநிலைமை

Question 2.
பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள் …………………….
அ) வலிமையற்றவர்
ஆ) கல்லாதவர்
இ) ஒழுக்கமற்றவர்
ஈ) அன்பில்லாதவர்
Answer:
ஆ) கல்லாதவர்

Question 3.
‘வல்லுருவம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………….
அ) வல் + உருவம்
ஆ) வன்மை + உருவம்
இ) வல்ல + உருவம்
ஈ) வ + உருவம்
Answer:
ஆ) வன்மை + உருவம்


Question 4.
நெடுமை + தேர் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………………..
அ) நெடுதேர்
ஆ) நெடுத்தேர்
இ) நெடுந்தேர்
ஈ) நெடுமைதேர்
Answer:
இ) நெடுந்தேர்

Question 5.
‘வருமுன்னர்’ எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி ………………………
அ) தற்குறிப்பேற்ற அணி
ஆ) எடுத்துக்காட்டு உவமை அணி
இ) உவமை அணி
ஈ) உருவக அணி
Answer:
இ) உவமை அணி

குறுவினா

Question 1.
சான்றோர்க்கு அழகாவது எது?
Answer:
துலாக்கோல் போல நடுவுநிலைமையுடன் சரியாகச் செயல்படுவதே சான்றோர்க்கு அழகாகும்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.6 திருக்குறள்

Question 2.
பழியின்றி வாழும் வழியாகத் திருக்குறள் கூறுவது யாது?
Answer:
தலைவன் முதலில் தன்குற்றத்தைக் கண்டு நீக்கி, அதன்பின் பிறருடைய குற்றத்தை ஆராய்ந்தால், அவனுக்கு எந்தப் பழியும் ஏற்படாது.

Question 3.
‘புலித்தோல் போர்த்திய பசு’ என்னும் உவமையால் திருக்குறள் விளக்கும் கருத்து யாது?
Answer:
மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவர் மேற்கொண்ட தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக் கொண்ட பசு பயிரை மேய்ந்ததைப் போன்றது.

திருக்குறளைச் சீர் பிரித்து எழுதுக.

1. தக்கார் தகவிலரென்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்.
2. தொடங்கற்க எவ்வினையு மெள்ளற்க முற்று மிடங்கண்ட பின் அல்லது.

சீர்பிரித்தது

1. தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்.

2. தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.


கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. வலியில் நிலைமையான் வல்லுருவம் ……………………….
புலியின்தோல் ……………………. மேய்ந் தற்று.

2. விலங்கொடு ………………….. அனையர் ……………………….
கற்றாரோடு ஏனை யவர்.
Answer:
1. பெற்றம், போர்த்து
2. மக்கள், இலங்குநூல்

சீர்களை முறைப்படுத்தி எழுதுக.

யாழ்கோடு அன்ன கொளல் கணைகொடிது
வினைபடு பாலால் செவ்விதுஆங்கு.

முறைப்படுத்தியது
கணைகொடிது யாழ்கோடு செவ்விது ஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல்.

படங்களுக்குப் பொருத்தமான திருக்குறள்களை எழுதுக.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.6 திருக்குறள் 1

1. வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின் தோல் போர்த்துமேய்ந் தற்று.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.6 திருக்குறள் 2
2. கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல் ஓடும்
நாவாயும் ஓடா நிலத்து.

No comments:

Post a Comment