செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Friday 5 February 2021

வகுப்பு 8. ஓடை

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பள்ளிக்குச் சென்று கல்வி ……………………. சிறப்பு.
அ) பயிலுதல்
ஆ) பார்த்தல்
இ) கேட்டல்
ஈ) பாடுதல்
Answer:
அ) பயிலுதல்

Question 2.
செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது …………………….
அ) கடல்
ஆ) ஓடை
இ) குளம்
ஈ) கிணறு
Answer:
ஆ) ஓடை


Question 3.
‘நன்செய்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….
அ) நன் + செய்
ஆ) நன்று + செய்
இ) நன்மை + செய்
ஈ) நல் + செய்
Answer:
இ) நன்மை + செய்

Question 4.
‘நீளுழைப்பு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………….
அ) நீளு + உழைப்பு
ஆ) நீண் + உழைப்பு
இ) நீள் + அழைப்பு
ஈ) நீள் + உழைப்பு
Answer:
ஈ) நீள் + உழைப்பு

Qestion 5.

‘சீருக்கு + ஏற்ப’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………….
அ) சீருக்கு ஏற்ப
ஆ) சீருக்கேற்ப
இ) சீர்க்கேற்ப
ஈ) சீருகேற்ப
Answer:
ஆ) சீருக்கேற்ப


Question 6.
‘ஓடை + ஆட’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………….
அ) ஓடைஆட
ஆ) ஓடையாட
இ) ஓடையோட
ஈ) ஓடைவாட
Answer:
ஆ) ஓடையாட

குறுவினா

Question 1.
ஓடை எவ்வாறு ஓடுவதாக வாணிதாசன் கூறுகிறார்?
Answer:
ஓடை கற்களில் உருண்டும், தவழ்ந்தும், நெளிந்தும், சலசல என்று ஒலியெழுப்பியும் அலைகளால் கரையை மோதியும், இடையறாது ஓடுகிறது.

Question 2.
ஓடை எழுப்பும் ஒலிக்கு எதனை உவமையாக வாணிதாசன் குறிப்பிடுகிறார்?
Answer:
ஓடை எழுப்பும் ஒலி, பெண்கள் பாடும் வள்ளைப்பாட்டின் சிறப்புக்கேற்ப முழவை முழக்குவதற்கு உவமையாக வாணிதாசன் கூறுகிறார்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 2.1 ஓடை

சிறு வினா

Question 1.
ஓடையின் பயன்களாக வாணிதாசன் கூறுவன யாவை?
Answer:
(i) நன்செய், புன்செய் நிலங்களுக்கு நீர்வளம் தந்து பயிர்களைச் செழிக்கச் செய்கிறது.

(ii) விளைந்த பயிர்கள் மூலம் உணவு தந்து நாட்டின் வறுமையைப் போக்குகிறது. கொஞ்சி மகிழும் அலைகளால் கரையை மோதுகிறது. குளிர்ச்சியைத் தரும் புற்களுக்கு இன்பம் சேர்க்கிறது.

No comments:

Post a Comment