கட்டுரை எழுதுக.
தலைப்பு – விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்
Answer:
முன்னுரை :
ஆணுக்குப் பெண் சரிசமம்’ என்ற கருத்தை மெய்ப்பிக்கும் வண்ணம் விண்வெளியில் கால்பதித்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவர் கல்பனா சாவ்லா. அவரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
பிறப்பு :
- 01.07.1961 அன்று இந்தியாவில் உள்ள ஹரியானா மாநிலத்தில் பிறந்தார்.
- பெற்றோர் – பனாரஸ் லால் சாவ்லா (தந்தை), சன்யோகிதா தேவி (தாய்).
- பஞ்சாபிக் குடும்பத்தைச் சார்ந்தவள்.
- ‘கல்பனா’ என்றால் ‘கற்பனை’ என்று பொருள்.
- இவருக்குச் சுனிதா மற்றும் தீபா என்ற இரு சகோதரிகளும் சஞ்சய் என்ற சகோதரனும் இருக்கின்றனர்.
கல்வி :
கர்னலில் உள்ள தாகூர் அரசுப் பள்ளியில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கினார். 1982-இல் சண்டிகரில் உள்ள “பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமான ஊர்தியியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றாள். 1984-இல் அமெரிக்காவில் உள்ள “டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம்” பெற்றாள். 1988-இல் விண்வெளிப் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.
விண்வெளிப் பயணம் :
- நாசா ஆராய்ச்சிக் கூடத்தில் “ஓசெர்செட் மேதொட்ஸ் இன்க் இல்” துணைத்தலைவராக பொறுப்பேற்றார்.
- 1995-இல் நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்தார்.
- 1997 ஆம் ஆண்டு கொலம்பிய விண்வெளி ஊர்தியான STS-87ல் முதல் விண்வெளி பயணத்தைத் தொடங்கினார்.
- 372 மணி நேரம் விண்வெளியிலேயே இருந்து சாதனை படைத்தார்.
கொலம்பியா விண்கல நிகழ்வு :
- 16.01.2003ல் அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பியா விண்கலம் எஸ்.டி.எஸ் – 107 (STS – 107) விண்ணில் செலுத்தப்பட்டது.
- இந்த விண்கலத்தில் சாவ்லா உட்பட ஏழு பேர் பயணித்தனர்.
- பதினாறு நாட்கள் ஆய்வை முடித்துவிட்டு திரும்பிய போது, அமெரிக்காவின் டெக்ஸாஸ் வான் பரப்பில் அவ்விண்கலம் வெடித்துச் சிதறியது.
- சாவ்லா உட்பட ஏழு பேரும் பலியாகினர்.
விருதுகளும் அங்கீகாரங்களும் :
- இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க தமிழக அரசாங்கம் “கல்பனா சாவ்லா” விருதினை 2004 ஆம் ஆண்டிலிருந்து வழங்கி வருகிறது.
- நாசா ஸ்பேஸ் பிளைட் மெடல்.
- நாசா டிஸ்டிங்குவிஷ்ட் சர்வீஸ் மெடல்.
- நியூயார்க்கில் உள்ள ஒரு தெருவிற்குக் “கல்பனா (way)” எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
முடிவுரை :
பெண்ணினத்திற்கே பெருமை சேர்ந்தவர் கல்பனா.
“கனவுகளைக் கண்டு அந்தக் கனவுகளை நனவாக்குவதற்கு விடா முயற்சியோடும் முழுமனதோடும் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்” என்ற உண்மையை உலகிற்கு உணர்த்திச் சென்ற வீரப்பெண்ணை நாமும் போற்றுவோம்.
No comments:
Post a Comment