செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Tuesday 2 February 2021

வகுப்பு 9 - இயல் -1. தமிழ்விடுதூது- வினாவிடைப்பகுதிகள்

 பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
தமிழ்விடு தூது ……………என்னும் இலக்கியத்தைச் சார்ந்தது.
அ) தொடர்நிலைச் செய்யுள்
ஆ) புதுக்கவிதை
இ) சிற்றிலக்கியம்
ஈ) தனிப்பாடல்
Answer:
இ) சிற்றிலக்கியம்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.3 தமிழ்விடு தூது

Question 2.
விடுபட்ட இடத்திற்குப் பொருத்தமான விடை வரிசையைக் குறிப்பிடுக.
i) ………………. இனம்
ii) வண்ணம்…………………..
iii) …………… குணம்
iv) வனப்பு …………………….
அ) மூன்று, நூறு, பத்து, எட்டு
ஆ) எட்டு, நூறு, பத்து, மூன்று
இ) பத்து, நூறு, எட்டு, மூன்று
ஈ) நூறு, பத்து, எட்டு, மூன்று
Answer:
அ) மூன்று, நூறு, பத்து, எட்டு

Question 3.
அழியா வனப்பு, ஒழியா வனப்பு சிந்தா மணி – அடிக்கோடிட்ட சொற்களுக்கான இலக்கணக் குறிப்பு
அ) வேற்றுமைத்தொகை
ஆ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
இ) பண்புத்தொகை
ஈ) வினைத்தொகை
Answer:
ஆ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.3 தமிழ்விடு தூது

குறுவினா

Question 1.
கண்ணி என்பதன் விளக்கம் யாது?
Answer:
இரண்டிரண்டு பூக்களை வைத்துத் தொடுக்கப்படும் மாலையைப் போல செய்யுளில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுளுக்கு கண்ணி என்று பெயர்.

நெடுவினா

Question 1.
‘தூது அனுப்பத் தமிழே சிறந்தது’ – தமிழ்விடு தூது காட்டும் காரணங்களை விளக்கி எழுதுக.
Answer:
முன்னுரை :
தொண்ணூற்று ஆறு சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று தூது ஆகும். வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்றும் இதனை அழைப்பர். தலைவர் தலைவியர்களுள் காதல் கொண்ட ஒருவர் மற்றொருவர் பால் அன்பு காட்டுவர். அதற்கு அடையாளமாக மாலை வாங்கி வருமாறு அன்னம் முதல் வண்டு ஈறாகப் பத்தையும் தூது விடுவதாகப் பாடுவது ஆகும். இது கலிவெண்பாவால் பாடப்படுவதாகும். தமிழ்விடு தூது, மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண், தன் காதலைக் கூறிவருமாறு தமிழைத் தூது விடுவதாகப் பாடப்படுவதாகும். கலிவெண்பாவால் பாடப்படும். இந்நூல் 268 கண்ணிகளைக் கொண்டது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.3 தமிழ்விடு தூது

விண்ணப்பம் உண்டு விளம்பக் கேள் :
தெளிந்த அமுதமாய் அந்த அமிழ்தினும் வீடுபேற்றைத் தரும் கனியே! இயல், இசை, நாடகம் என முத்தமிழாய் சிறந்து விளங்கும் தமிழே! அறிவால் உண்ணப்படும் தேனே! உன்னிடம் மகிழ்ந்து விடுக்கும் விண்ணப்பம் ஒன்றுள்ளது அதைக்

கேட்பாயாக. மூவகைப் பாவினங்களிலும் உறவு உண்டோ ?
தமிழே, உன்னிடமிருந்து குறவஞ்சி, பள்ளு என்ற நூல்களைப் பாடிப் புலவர்கள் சிறப்புப் பெற்றனர். நீயும் படிக்கக் கொடுப்பாய். அதனால் தாழிசை, துறை, விருத்தம் என்னும் பாவினங்களிலும் உறவு உண்டோ ?

‘சிந்து’ என்றழைப்பது தகுமோ?
தமிழ்ப்பாவகை அனைத்தும் பொருந்தி நின்று என்றுமே சிந்தாமணியாய் இருக்கும் உன்னை , சிந்து என்றழைப்பது உன் பெருமைக்குத் தகுமோ? அவ்வாறு கூறிய நா இற்று விழும்.

பத்துக் குணங்கள் பொருந்திய தமிழே!
வானத்தில் வசிக்கும் முற்றும் உணர்ந்த தேவர்கள் கூட சத்துவம் (அமைதி) இராசசம் (தீவிரமான குணம்) தாமசம் (சோம்பல்) மூன்று குணங்கள் பெற்றுள்ளார்கள். ஆனால் நீயோ பத்துக் குற்றங்கள் இல்லாமல் செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்மை , காந்தம், வலி, சமாதி எனும் பத்துக் குணங்களைப் பெற்றுள்ளாய்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.3 தமிழ்விடு தூது

நூறு வண்ணங்கள் கொண்ட வண்டமிழே:
மனிதர்களால் உண்டாக்கப்பட்ட வண்ணங்கள் வெண்மை, செம்மை, கருமை, பொன்மை (பொன் நிறம்) பசுமை என ஐந்தே. நீயோ, புலவர்கள் தெளிந்த குறில், அகவல், தூங்கிசை, வண்ணம் முதலாக இடை மெல்லிசை வண்ணம் ஈறாக நூறு வண்ணங்களைக் கொண்டுள்ளாய்.

எட்டழகு பெற்ற கட்டழகுத் தமிழே :
நாவினால் அறியும் சுவைகள் ஆறு. நீயோ, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, சமனிலை பெற்றுள்ளாய். தமிழை அறியாதவர்களுக்கு அழகு ஒன்றே ஒன்று என்றில்லாமல் அதிகம் உண்டோ ? நீயோ நீங்காத அம்மை முதலிய அழகு எட்டினைப் பெற்றுள்ளாய்.

No comments:

Post a Comment