செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Thursday 4 February 2021

வகுப்பு 8.நோயும் மருந்தும்.

 சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
உடல்நலம் என்பது ……………………… இல்லாமல் வாழ்தல் ஆகும்.
அ) அணி
ஆ) பணி
இ) பிணி
ஈ) மணி
Answer:
இ) பிணி

Question 2.
நீலகேசி கூறும் நோயின் வகைகள் ……………………
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer:
ஆ) மூன்று

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 3.1 நோயும் மருந்தும்

Question 3.
‘இவையுண்டார்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_ ………………………
அ) இ + யுண்டார்
ஆ) இவ் + உண்டார்
இ) இவை + உண்டார்
ஈ) இவை + யுண்டார்
Answer:
இ) இவை + உண்டார்

Question 4.
தாம் + இனி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………………
அ) தாம் இனி
ஆ) தாம்மினி
இ) தாமினி
ஈ) தாமனி
Answer:
இ) தாமினி

குறுவினா

Question 1.
நோயின் மூன்று வகைகள் யாவை?
Answer:

  • மருந்தினால் நீங்கும் நோய்.
  • எதனாலும் தீராத தன்மையுடைய நோய் மற்றொரு வகை.
  • வெளியில் ஆறி உள்ளுக்குள் இருந்து துன்பம் தரும் நோய்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 3.1 நோயும் மருந்தும்

Question 2.
நீலகேசியில் பிறவித் துன்பத்தைத் தீர்க்கும் மருந்துகளாகக் கூறப்படுவன யாவை?
Answer:
நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம் என்பவையே பிறவித் துன்பத்தைத் தீர்க்கும் மருந்துகளாக நீலகேசி கூறுகின்றது.

சிறு வினா

Question 1.
நோயின் வகைகள் அவற்றைத் தீர்க்கும் வழிகள் பற்றி நீலகேசி கூறுவன யாவை?
Answer:

  • ஒளிபொருந்திய அணிகலன்களை அணிந்த பெண்ணே! நோயின் தன்மை பற்றி யார் வினவினாலும் அது மூன்று வகைப்படும் என அறிவாயாக.
  • மருந்தினால் நீங்கும் நோய்.
  • எதனாலும் தீராத தன்மையுடைய நோய் மற்றொரு வகை.
  • வெளியில் ஆறி உள்ளுக்குள் இருந்து துன்பம் தரும் நோய்.
  • அகற்றுவதற்கு அரியவை பிறவித் துன்பங்கள் ஆகும்.
  • இவற்றைத் தீர்க்கும் மருந்துகள் மூன்று. நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம் என்பவையே அம்மருந்துகள்.
  • இவற்றை ஏற்றோர் பிறவித்துன்பத்திலிருந்து நீங்கி உயரிய இன்பத்தை அடைவர்.

சிந்தனை வினா

Question 1.
துன்பமின்றி வாழ நாம் கைக்கொள்ள வேண்டிய நற்பண்புகள் யாவை?
Answer:
தருமம் செய்தல், கோபத்தைத் தணித்தல், முயற்சி செய்தல், கல்வி கற்றல், உலக நடையை அறிந்து நடத்தல், நல்ல நூல்களைப் படித்தல், பொறாமை படாமல் இருத்தல், பொய்சாட்சி சொல்லாமல் இருத்தல், இனிமையாகப் பேசுதல், பேராசையைத் தவிர்த்தல், நட்புடன் பழகுதல், பெரியோர்களை மதித்தல், ஒழுக்கம் தவறாமல் இருத்தல், நன்றியை மறவாமல் இருத்தல், காலத்தைக் கடைபிடித்தல், களவு செய்யாதிருத்தல், இழிவானதைச் செய்யாதிருத்தல், இரக்கம் கொள்ளுதல், பொய் சொல்லாதிருத்தல், ஆணவம் கொள்ளாதிருத்தல், சுறுசுறுப்புடன் இருத்தல், உடற்பயிற்சி செய்தல், அதிகாலையில் எழுந்திருத்தல் போன்றவை கைக்கொள்ள வேண்டிய நற்பண்புகள் ஆகும்

No comments:

Post a Comment