விடை


அ) பெட்டிச் செய்தி
ஆ) விழாக் குழு
இ) கிளிப் பேச்சு
ஈ) தமிழ்த் தேன்
உ) தைப் பூசம்
ஊ) கூடக் கொடு
எ) கத்தியை விடக் கூர்மை
ஏ) கார்ப் பருவம்


வினா 2.
தொடர் தரும் பொருளைக் கூறுக.


விடை:


அ) சின்னக்கொடி – சின்னம் வரையப்பட்ட கொடி
சின்ன கொடி – சிறிய கொடி


ஆ) தோப்புக்கள் தோப்பிலிருந்து இறக்கிவரப்பட்ட கள்
தோப்புகள் – தென்னந்தோப்புகள் பலவுண்டு


இ) கடைப்பிடி கொள்கையைக் கடைப்பிடிப்பது

கடைபிடி – வாணிகம் தொடங்கக் கடை பிடித்தார்


ஈ) நடுக்கல் – அடையாளமாக நடுவது;

நடுக்கல் – ஊன்றினோம் நினைவுச் சின்னம்


உ) கைம்மாறு – செய்த உதவி
கைமாறு – கையில் உள்ள மாறு(விளக்குமாறு)


ஊ) பொய்ச்சொல் – நீ சொன்னது பொய்ச்சொல்
பொய் சொல் – பொய் சொல்வது தவறு

வினா 3.


சிந்தனை வினா:


நாளிதழ்கள் சிலவற்றில் வல்லினம் மிகவேண்டிய இடத்தில் மிகாமல் எழுதி வருவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவ்வாறு எழுதுவது மொழிக்கு வளம் சேர்க்குமா? வல்லினம் மிக வேண்டியதன் முக்கியத்துவத்தை எழுதுக.


கடைபிடித்தல் – கடைப்பிடித்தல்

கடைபிடித்தல் – கடையைப் பிடித்தல்
கடைப்பிடித்தல் – பின்பற்றுதல்


இதில் கடைபிடி என்பது கடையைப்பிடி என்று பொருள், அதே சொல்லில் வல்லினம் மிகுந்து ‘கடைப்பிடி’ என வரும் போது பின்பற்றுதல் என்னும் பொருள் தரும்.


எ.கா: சேகர் புதிதாக வாணிகம் தொடங்கக் கடை பிடித்தார்.
நாங்கள் என்றும் தூய்மையைக் கடைப்பிடிப்போம்.
எனவே வல்லினம் இட்டு எழுதுவதில் கவனம் தேவை!


Question 4.
உரிய இடங்களில் வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக.
Answer:
பழங்கால மக்களின் நாகரிகம், பண்பாடு தொடர்பான வரலாறுகளை அகழாய்வில் கிடைக்கின்றப் பொருள்களும் உறுதிபடுத்துகின்றன. பல்வேறு இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வகையில் ஆய்வு நடைபெறுகின்ற இடங்களில் கீழடியும் ஒன்று.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 3.4 வல்லினம் மிகும் இடங்கள் - 1