செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Thursday 29 July 2021

வகுப்பு -10 - தமிழ்- திருவிளையாடற்புராணம். ( வினா-விடைகள்)

                                                    பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் ……………………. இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர்…………………
அ) அமைச்சர், மன்னன்
இ) இறைவன், மன்னன்
ஆ) அமைச்சர், இறைவன்
ஈ) மன்னன், இறைவன்
Answer:
ஈ) மன்னன், இறைவன்

குறுவினா

Question 1.
“கழிந்த பெரும்கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால்
பொழிந்த பெரும் காதல்மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென்சொல்”

                        – இவ்வடிகளில் கழிந்த பெரும் கேள்வியினான் யார்?
காதல் மிகு கேண்மையினான் யார்?


Answer:
கழிந்த பெரும் கேள்வியினான் (மிகுந்த கல்வியறிவு உடையவர்) – குலேசபாண்டியன்.
காதல்மிகு கேண்மையினான் (கபிலரிடம் நட்பு கொண்டவர்) – இடைக்காடனார்.


Question 2.
அமர்ந்தான் – பகுபத உறுப்பிலக்கணம் தருக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 5.3 திருவிளையாடற் புராணம் - 2

சிறுவினா

Question 1.
மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்பு செய்தது ஏன்? விளக்கம் தருக.
Answer:

  • குலேச பாண்டியன் தமிழ்ப் புலமை வாய்ந்தவன்.
  • அவன் அவையில் புலவர் இடைக்காடனார் பாடிய பாடலை மன்னன் பொருட்படுத்தாமல் அவமதித்தான்.
  • இடைக்காடனார் கடம்பவனத்து இறைவனிடம் முறையிட்டார்.
  • இறைவன் கடம்பவனம் கோயிலை விட்டு நீங்கி வைகை ஆற்றின் தெற்கே கோயில் உருவாக்கி அமர்ந்தார்.
  • இதையறிந்த மன்னன் யான் என்ன தவறு செய்தேன்? ஏன் இங்கு அமர்ந்தீர்? என்று வருந்தினான்.
  • இறைவன், இடைக்காடனார் பாடலை இகழ்ந்த குற்றமே தவிர, வேறு எந்த தவறும் இல்லை என்றார்.
  • தன் தவறை உணர்ந்த மன்னன் இடைக்காடனாரை அழைத்து மங்கல ஒப்பனை செய்து, பொன் இருக்கையில் அமர்த்தி, பணிந்து வணங்கி தம் தவறைப் பொறுத்தருள வேண்டினான்.

நெடுவினா

Question 1.
இறைவன் புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 5.3 திருவிளையாடற் புராணம் - 3

மன்னனின் அவையில் இடைக்காடனார் :
வேப்பமாலை அணிந்த குலேச பாண்டியன் மிகுந்த கல்வியறிவு உடையவன். இதைக் கேள்வியுற்ற இடைக்காடனார் குலேசனின் அவைக்குச் சென்று தான் இயற்றிய கவிதையைப் படித்தார்.


இடைக்காடனாரின் புலமையை அவமதித்தல் :
வேப்பமாலை அணிந்த குலேசபாண்டியன் மிகுந்த கல்வியறிவு உடையவன். தமிழறியும் பெருமான், அடியார்க்கு நல்நிதி போன்றவன், பொருட்செல்வமும் கல்விச் செல்வமும் உடையவன் என்று கேட்டுணர்ந்து தாங்கள் முன் சுவை நிரம்பிய கவிதை பாடினார் இடைக்காடனார். பாண்டியன் சிறிதேனும் பாடலைப் பொருட்படுத்தாமல் புலவரின் புலமையை அவமதித்தான்.

இடைக்காடனார் இறைவனிடம் முறையிடுதல் :
இறைவா! பாண்டியன் என்னை இகழவில்லை. சொல்லின்வடிவான பார்வதியையும், பொருளின் வடிவான உம்மையும் அவமதித்தான் என்று சினத்துடன் இறைவனிடம் கூறினார்.

இறைவன் கோவிலை விட்டு வெளியேறுதல் :
இடைக்காடனாரின் வேண்டுகோளை ஏற்று வைகை ஆற்றின் தெற்கே கோயில் அமைத்துக் குடிகொண்டார் இறைவன். உடனே கபிலரும் மகிழ்ந்து இடைக்காடனாரோடு வெளியேறினார்.

இறைவனிடம் மன்னன் வேண்டுதல் :
இதையறிந்த மன்னன் இறைவனிடம் என் படைகளால், பகைவரால், கள்வரால், விலங்குகளால் தங்களுக்கு இடையூறு ஏற்பட்டதா? மறையவர் ஒழுக்கம் குறைந்தாரோ? தவமும், தானமும் சுருங்கியதோ? இல்லறமும், துறவறமும் தத்தம் வழியில் தவறினவோ? தந்தையே நான் அறியேன் என்றார் குலசேகரபாண்டியன்.

இறைவனின் பதில் :
‘வயல் சூழ்ந்த கடம்பவனத்தைவிட்டு ஒருபோதும் நீங்கமாட்டோம்.’ ‘இடைக்காடனார் பாடலை இகழ்ந்த குற்றம் தவிர உன்னிடம் குற்றம் இல்லை’ என்றார். ‘இடைக்காடன் மீது கொண்ட அன்பினால் இங்கு வந்தோம்’ என்றார்.

பிழையைப் பொறுத்தருள இறைவனிடம் வேண்டுதல் :
வானிலிருந்து ஒலித்த இறைவனின் சொல் கேட்டான் குலேச பாண்டியன். மகிழ்ந்து, பரம்பொருளே! புண்ணியனே! சிறியவரின் குற்றம் பொறுப்பது பெரியவர்க்குப் பெருமை என்று குற்றத்தைப் பொறுக்க வேண்டினான்.


மன்னன் இடைக்காடனாருக்குப் பெருமை செய்தல் :
மன்னனின் மாளிகை வாழை, சாமரை இவற்றாலான விதானமும் விளக்கும் உடையது. பூரண கும்பம் மாலை, கொடி இவற்றால் ஒப்பனை செய்யப்பட்டது. புலவர்கள் சூழ இடைக்காடனாரை மங்கலமாக ஒப்பனை செய்து பொன் இருக்கையில் அமர்த்தினான்.

மன்னன் புலவரிடம் வேண்டுதல் :
மன்னன் புலவர்களிடம், தான் இடைக்காடனாருக்குச் செய்த குற்றத்தைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றான். புலவர்களும், நீர் கூறிய அமுதம் போன்ற சொல்லால் எங்கள் சினம் தணிந்துவிட்டது என்றனர்.

இலக்கணக் குறிப்பு.

கேள்வியினான் – வினையாலணையும் பெயர்
காடனுக்கும் கபிலனுக்கும் – எண்ணும்மை
கழிந்த – பெயரெச்சம்

No comments:

Post a Comment