செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Friday 14 October 2022

தமிழ் திறனறித் தேர்வு இயல் 8

1➤ கவிதை வாழ்க்கையின் திறனாய்வு என்று கூறியவர்

=> ஆர்னால்டு

2➤ சங்க காலத்திற்குப் பிந்தைய அற இலக்கியங்களின் காலம் .......என்று அழைக்கப்படுகிறது

=> அறநெறிக்கால அறங்கள்

3➤ இம்மைச் செய்வது மறுமைக்கு ஆம் எனும் -இவ்வடிகள் இடம் பெற்ற நூல்

=> புறம் (புறநானூறு)

4➤ அறவிலை வணிகன் ஆஅய் அல்லன் -இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல்

=> புறம் ( புறநானூறு)

5➤ சங்கப் பாக்களில் அறம் பற்றிய அறிவுரைகள் ........ முதன்மைப்படுத்தியே கூறப்பட்டுள்ளன

=> அரசர்களை

6➤ அரசனின் கடமையாக இலக்கியங்களில் சுட்டப் பெறுவது

=> நீர்நிலை பெருக்கம், நிலவளம் உணவு பெருக்கம்

7➤ குற்றங்களை அறத்தின் அடிப்படையில் ஆய்ந்து தண்டனை வழங்க வேண்டும் என்று குறிப்பிடுபவர்

=> ஊன் பொதி பசங்குடையார்

8➤ நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர்க கடமை எனக் கூறும் நூல்

=> மதுரைக்காஞ்சி

9➤ காவிரி மக்கள் -என்று குறிப்பிடப்படுவோர்

=> அமைச்சர்கள் (மதுரைக்காஞ்சியில் மாங்குடி மருதனாரால்)

10➤ அறம் அறக்கண்ட நெறிமான் அவையம் என்று குறிப்பிடும் நூல்

=> புறநானூறு

11➤ .... ஊரில் இருந்து அவையும் தனி சிறப்பு உள்ளது என்று புறநானூறு குறிப்பிடுகிறது

=> உறையூர்

12➤ துலாக்கோல் போல் நடுநிலையாக இருந்த அவையம்

=> உறையூரில் இருந்த அற அவையம்

13➤ தம்மை விட வலிமை குறைந்தவரோடு போர் செய்யக்கூடாது என்று குறிப்பிடுபவர

=> ஆவூர் மூலங்கிழார்

14➤ எறியார் எறிதல் யாவனது எறிந்தோர்-வடிகள் இடம்பெற்றுள்ள நூல் மற்றும் நூலாசிரியர்

=> புறநானூறு (ஆவூர் மூலங்கிழார் )

15➤ செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்போம் எனினே தப்புந பலவே எனப் பாடியவர்

=> மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார்

16➤ கடையேழு வள்ளல்கள் எழுவரைப்பற்றி குறிப்பிடும் நூல்

=> சிறுபாணாற்றுப்படை

17➤ கொடை இலக்கியங்கள் என்ற சிறப்புக்குரிய நூல்கள்

=> ஆற்றுப்படை இலக்கியங்கள்

18➤ சேர அரசர்களின் கொடை ச்சிறப்பினைக் கூறும் நூல்

=> பதிற்றுப்பத்து

19➤ இல்லோர் ஒக்கல் தலைவன், பசிப்பிணி மருத்துவன் என்று போற்றப்படுபவர்கள்

=> வள்ளல்கள். கொடையாளர்கள்

20➤ வழங்குவதற்கு பொருள் உள்ளதா? என்று கூட பார்க்காமல் வாரி வாரி வழங்குபவன் பிடவூர்க் கிழார் மகன் பெரும் சாத்தான் என பாராட்டுபவர்

=> நக்கீரனார்

21➤ வள்ளலின் பொருள் இரவலனின் பொருள் j வள்ளலின் வறுமை இரவலனின் வறுமை, என குறிப்பிடுபவர்

=> பெரும்பதுமனார்

22➤ உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியமான் என குறிப்பிடுபவர்

=> அவ்வையார்

23➤ இரவலர்களைத் தேடி வர வைத்துக் கொடுப்பவன்

=> ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் (நச்சொள்ளையார்)

24➤ மறுமை நோக்கி கொடுக்காதவன் பேகன் என குறிப்பிடுபவர்

=> பரணர்

25➤ தன்னை நாடியவனுக்கு பொருள் கொடுக்காமல் இருப்பது நாட்டை இழந்த துன்பத்தை விட பெருந்தன்பம் என்று வருந்துவதாக பெருந்தலைச் சாத்தனாரால் குறிப்பிடப்படுபவன்

=> குமணன்

26➤ எல்லாவற்றையும் கொடுப்பவன் மலையமான் திருமுடிக்காரி என்று பாராட்டுபவர்

=> கபிலர்

27➤ ஈயாது வாழ்தலை விட உயிரை விட்டு விடுதல் மேலானது -இக்கருத்து காணப்படும் நூல்

=> கலித்தொகை

28➤ தான் பெற்றதை பிறருக்கு வழங்குபவன் புலவன் பெருஞ்சித்திரனார் எனக்குறிப்பிடும் நூல்

=> புறநானூறு

29➤ உதவி செய்ததை " உதவியாண்மை என்ற சொல்லால் குறிப்பவர்

=> ஈழத்துப் பூதன் தேவனார்

30➤ பிற நோயும் தம் நோய் போல் போற்றி என்ற சொல் காணப்படும் நூல் மற்றும் ஆசிரியர் பெயர்

=> கலித்தொகை நல்லந்துவனார்

31➤ கலித்தொகையை எழுதியவர்

=> நல்லந்துவனார்

32➤ உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பது தான் என்று கூறுபவர்

=> நல்வேட்டனார்

33➤ உறவினர்கெட, வாழ்பவனின் பொலிவு அழியும் என்று கூறுபவர்

=> பெருங்கடுங்கோ

34➤ சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கண் அஞ்சும்-என்று பாடியவர்

=> பெருங்கடுங்கோ

35➤ நிறைவடைகிறவனே செல்வன் என்று குறிப்பிடும் நூல்

=> சீன நாட்டுத் தாவோவியம்

36➤ வாய்மையை 'பிழையா நன்மொழி ' என்று குறிப்பிடும் நூல்

=> நற்றிணை

37➤ காஞ்சி மாநகரத்து சிற்றரசர் சீனாவிற்கு சென்றபோது வழங்கப்பட்ட பெயர்

=> போதிதர்மன்

38➤ பௌத்த சமய தத்துவத்தின் வழியாகபோ போதிதர்மர் போதித்த தத்துவம்

=> ஜென் தத்துவம்

39➤ ஞானம் என்ற கவிதையின் ஆசிரியர்

=> தி சொ. வேணுகோபாலன்
தி. சொ வேணுகோபாலன்

40➤ தி சொ. வேணுகோபாலன் எழுதிய கவிதை தொகுப்புகள்

=> கோடை வயல், மீட்சி விண்ணப்பம்

41➤ மாற்றம் எனது மானிட தத்துவம்,நானே தொடக்கம் நானே முடிவு,செல்வரிடம் கையில் சிறை படமாட்டேன்- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர்

=> காலக்கணிதம் ( கண்ணதாசன்)

42➤ கண்ணதாசன் பிறந்த ஊர் மற்றும் இயற்பெயர்

=> சிறுகூடல்பட்டி -.முத்தையா

43➤ கண்ணதாசன் எழுதிய எந்த புதினத்திற்கு சாகித்திய அகாதமி விருது கிடைக்கப்பெற்றது

=> சேரமான் காதலி

44➤ கவிச்சக்கரவர்த்தி, கவியரசு என்று அழைக்கப்படுபவர்கள்

=> கண்ணதாசன் மற்றும் வைரமுத்து

45➤ நாளுக்கு ஒருமுறை மலர்வது ஆண்டுக்கு ஒரு முறை மலர்வது 12 ஆண்டுக்கு ஒரு முறை மலர்வது வரிசையாக குறிப்பிடு

=> செண்பகம், பிரம்ம கமலம் ,குறிஞ்சி மலர்

46➤ சிவகங்கை மாவட்டத்தின் பிரான்மலை எவ்வாறு அழைக்கப்படுகிறது

=> பறம்பு மலை

47➤ இருவர் உரையாடுவது போன்ற ஓசை

=> செப்பலோசை

48➤ வருவது பேசுவது போன்று, சொற்பொழிவாற்றுவது போன்ற ஓசை

=> அகவலோசை

49➤ கன்றினைப் போல் துள்ளி தாழ்ந்து உயர்ந்து வரும் ஓசை

=> துள்ளலோசை

50➤ சீர் கோரும் துள்ளாது தூங்கிவரும் ஓசை. தாழ்ந்தே வருவது

=> தூங்கலோசை

51➤ யாப்பின் உறுப்புக்கள்

=> 6

52➤ பாக்கள் மொத்தம் எத்தனை

=> 4 (வெண்பா .ஆசிரியப்பா ,கலிப்பா .வஞ்சிப்பா)

53➤ வெண்பாவிற்கு உரிய ஓசை

=> செப்பலோசை

54➤ ஆசிரியப்பாவிற்கு உரிய ஓசை

=> அகவல் ஓசை

55➤ குறள் மற்றும் நாலடியாரில் காணப்படும் பாவகை

=> வெண்பா

56➤ இலக்கணக் கட்டுக்கோப்புக் குறைவாகவும் கவிதை வெளியீட்டுக்கு எளிதாகவும் உள்ளப் பா வகை

=> ஆசிரியப்பா (அகவற்பா,

57➤ சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை ஆகிய காப்பியங்களில் காணப்படும் பாவகை

=> அகவற்பா

58➤ துள்ளல் ஓசை யில்.அமைந்துள்ள பாவகை

=> கலிப்பா

59➤ வஞ்சிப்பாவுக்கு உரிய ஓசை

=> தூங்கல் ஒசை

60➤ வெண்பா எத்தனை வகைப்படும்?

=> 5 வகை. (குறள், சிந்தியல். நேரிசை ,இன்னிசை, பஃறொடை வெண்பா)

61➤ ஈற்றடி முச்சிராகவும், ஏனைய அடிகள் நாற்சீராகவும் வருவது

=> வெண்பா

62➤ ஈரசைச் சீர் மிகுதியாகவும் காய்ச்சீர் குறைவாகவும் வருவது

=> ஆசிரியப்பா

63➤ மூன்றடி முதல் எழுதுபவர் மனநிலைக்கு ஏற்ப அடிகள் அமைவது

=> ஆசிரியப்பா

64➤ இரண்டடி முதல் 12 அடி வரை அமையும் பா

=> வெண்பா

65➤ 13 அடிக்கும் மேற்பட்டு வரும் பா

=> கலிப்பா

66➤ ஏகாரத்தில் முடியும் பா

=> ஆசிரியப்பா

67➤ வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று இரண்டு அடிகளாய் வரும் முதலடி நான்கு சீராகவும் இரண்டாம் அடி மூன்று சீராக உள்ள பாவகை

=> குறள் நண்பா

68➤ அறமும் அரசியலும் -நூலின் ஆசிரியர்

=> முவ

69➤ எண்ணங்கள் - நூலின் ஆசிரியர்

=> எம் எஸ் உதயமூர்த்தி

70➤ காருகர் சொல் குறிக்கும் பொருள்

=> நெய்பவர் ( சாலியர்)

71➤ பாசவர்- சொல் குறிக்கும் பொருள்

=> வெற்றிலை விற்போர்

72➤ ஓசுரர்- சொல் குறிக்கும் பொருள்

=> எண்ணெய் விற்போர்

73➤ கண்ணுள் வினைஞர்_ சொல் குறிக்கும் பொருள்

=> ஓவியர்

74➤ வண்ணமும் சுண்ணமும் இலக்கணக் குறிப்புத் தருக

=> எண்ணும்மை

75➤ பொய்யுடையென வரைவேயே; போர் மலைவன எழுகழனியே - இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

=> ராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்தி

No comments:

Post a Comment