செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Thursday 13 October 2022

தமிழ் திறனறித் தேர்வு-இயல் 3

 

1➤ கப்பித்தான் என்னும் சொல் குறிக்கும் பொருள்

=> தலைமை மாலுமி அல்லது கேப்டன்

2➤ தொங்கான் என்னும் சொல் குறிக்கும் பொருள்

=> கப்பல்

3➤ வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறை தொடங்கப்பட்ட ஆண்டு

=> 2000

4➤ புயல்களுக்குப் பெயர் வைக்க மொத்தம் எத்தனை பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளது

=> 64

5➤ இடம்புரி புயல்கள் எந்தெந்த நாடுகளை தாக்குகின்றன

=> அமெரிக்கா , ஜப்பான்

6➤ வலம்புரி புயல் தாக்கும் நாடுகள்

=> ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரை, மற்றும் ஹவாய் தீவுகள்

7➤ கடற்கூத்து என்னும் நூலினை எழுதியவர்

=> ப. சிங்காரம்

8➤ புலம் பெயர்ந்து தமிழர்கள் பற்றிய முதல் புதினம்

=> புயலிலே ஒரு தோணி

9➤ பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி- என்னும் சொல் இடம் பெறும் நூல்

=> அகநானூறு

10➤ 90 சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர்

=> சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்

11➤ கலிங்கத்துப் பரணியை இயற்றியவர்

=> ஜெயங்கொண்டார்

12➤ விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுன்ன - இவ்வடிகள் இடம்பெற்றுள்ள நூல்

=> கலிங்கத்துப்பரணி

13➤ உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர் -இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல்

=> புறநானூறு ஆசிரியர் (கடலுள் மாய்ந்த இடம் பெரும் வழுதி)

14➤ அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் - இடம்பெற்றுள்ள நூல்

=> நற்றிணை

15➤ காலில் ஏழடி அடி பின் சென்று - இவ் வடிகள் இடம் பெற்றுள்ள நூல்

=> பொருநராற்றுப்படை

16➤ குரல் உணங்கு விதைத்தினை உரல்வாய் பெய்து- இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல்

=> புறநானூறு

17➤ கருங்கோட்டு சீரியா ழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் செய்தி கூறும் நூல்

=> புறநானூறு

18➤ நெருநை வந்து விருந்திற்கு மற்றுத்தன் இரும்புடைப் பழவாள் வைத்தனன் - அடிகள் இடம் பெறும் நூல்

=> புறநானூறு

19➤ விதைத்த நெல்லை விருந்தளிக்க அரித்து வந்த செய்தி குறிப்பிடப்படும் புராணம்_

=> பெரியபுராணம்

20➤ மருந்தே ஆயினும் விருந்தோடு உண் -இவ் அடிகள் இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர்

=> கொன்றை வேந்தன், அவ்வையார்

21➤ பலர் புகு வாயில் அடைப்பக் கடவுளர் வருவீர்-இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல்

=> குறுந்தொகை

22➤ வாழையிலை விருந்து விழாவினை ஆண்டுதோறும் கொண்டாடும் தமிழ்ச் சங்கம்

=> மின சோட்டா அமெரிக்க தமிழ்ச் சங்கம்

23➤ காசிக் காண்டம்_ எழுதியவர்

=> அதிவீரராம பாண்டியர்

24➤ விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கத்தின் எண்ணிக்கை

=> ஒன்பது (வொன்பான் ஒழுக்கமும் வழிபடும் பண்ப)

25➤ ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி- இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல்

=> விவேக சிந்தாமணி

26➤ வெற்றிவேற்கை -என்று அழைக்கப்படும் நூல்

=> நறுந்தொகை

27➤ வெற்றி வேற்கையை எழுதியவர்

=> அதிவீர ராம பாண்டியர்

28➤ சீவலமாறன் என்ற பட்ட பெயர் பெற்ற புலவர்

=> அதிவீர ராம பாண்டியன்

29➤ அதிவீரராம பாண்டியர் எழுதிய நூல்கள்

=> நைடதம்,லிங்க புராணம்,வாயு சம்கிதை,திருக்கருவை அந்தாதி,கூர்ம புராணம்

30➤ மலைபடுகடாம்_நூலினை இயற்றியவர்

=> பெருங்கௌசிகனார்

31➤ குரு உக்கண் இறடிப்பொம்மல் பெறுகுவீர்-இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல்

=> மலைபடுகடம் (பெருங்கௌசிகனார்)

32➤ சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி - இவ் அடிகள் இடம் பெற்றுள்ள நூல்

=> மலைபடுகடம் (பெருங்கௌசிகனார்)

33➤ பொம்மல் - என்னும் சொல் குறிக்கும் பொருள்

=> சோறு

34➤ இருடி என்னும் சொல் குறிக்கும் பொருள்

=> தினை

35➤ பரிசு பெற்ற கூத்தன் நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம் பெற்று வாழ்வாயாக என்று கூறுங்கள்

=> ஆற்றுப்படை

36➤ மலைபடுகடம் எந்த நூல்களில் ஒன்று

=> பத்துப்பாட்டு

37➤ மலைபடுகடம் எத்தனை அடிகளைக் கொண்ட பாடல் உடையது

=> 583 அடிகள்

38➤ கூத்தராற்றுப்படை என்று அழைக்கப்படக்கூடிய நூல்

=> மலைபடுகடம்

39➤ மலைபடுகடாம் பாடலின் தலைவன்

=> நன்னன் பாடியவர் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார்

40➤ மலையை யானையாக உருவம் செய்து பாடக்கூடிய நூல்

=> மலைபடுகடம்

41➤ மலையில் எழும் ஓசைகள் மலைபடுகடாமில் எவ்வாறு கற்பனை செய்யப்படுகிறது

=> யானையின் மதங்களாக

42➤ கோபல்லபுரத்து மக்கள் நூலின் ஆசிரியர்

=> கி. ராஜநாராயணன்

43➤ கோவில்பட்டியை சுற்றியவட்டார ப்பகுதியில் தோன்றிய இலக்கிய வடிவம்

=> கரிசல் இலக்கியம்

44➤ கரிசல் மண்ணின் படைப்பாளி என அழைக்கப்படுபவர்

=> கு. அழகிரிசாமி

45➤ கரிசல் இலக்கியத்தை நிலை நிறுத்தியவர்

=> கி ராஜநாராயணன்

46➤ ராஜநாராயணனுக்கு முன்பே கரிசல இலக்கியத்தை எழுதத் தொடங்கியவர்

=> கு அழகிரிசாமி

47➤ பாச்சல் என்னும் வட்டார வழக்கு சொல் குறிக்கும் பொருள்

=> பாத்தி

48➤ கோபல்லபுரத்து மக்கள் எந்த ஆண்டு சாகித்திய அகாதமி விருதுநிலை பெற்றது

=> 1991

49➤ கரிசல் வட்டாரச் சொல் அகராதியை உருவாக்கியவர்

=> கி.ராஜநாராயணன்

50➤ கி ரா என்று குறிப்பிடப்படுபவர்

=> கி.ராஜநாராயணன்

No comments:

Post a Comment