செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Friday 14 October 2022

தமிழ் திறனறித் தேர்வு இயல் 6

1➤ நீரற வரியா கரகத்து-இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல்

=> புறநானூறு

2➤ மாதவி ஆடிய ஆடல்களின் எண்ணிக்கை

=> 11 ஆடல்கள்

3➤ கரகாட்டத்தின் துணை ஆட்டமாக ஆடுவது

=> மயிலாட்டம்

4➤ காவடி ஆட்டத்தில் கா என்ற எழுத்திற்கு அர்த்தம்

=> பாரம் தாங்கும் கோல் என்று பொருள்

5➤ இலங்கை மலேசியா போன்ற நாடுகளில் காணப்படும்ஆட்டம்

=> காவடியாட்டம்

6➤ வானத்து தேவர்கள் ஆடிய ஆட்டம் என்று குறிப்பிடப்படுவது

=> தேவராட்டம்

7➤ தேவராட்டத்திற்குரிய இசைக்கருவி

=> தேவதூந்துபி உறுமி

8➤ தேவராட்டத்தில் ஆடுபவர்களின் எண்ணிக்கை

=> 8 முதல் 13 கலைஞர்கள்

9➤ தேவராட்டம்போன்று ஆடுப்படும் ஆட்டம்

=> சேர்வை ஆட்டம்

10➤ போலச் செய்தல் பண்புகளைப் பின்பற்றி நிகழ்த்தி காட்டும் கலை

=> பொய்க்கால் குதிரை ஆட்டம்

11➤ பொய்க்கால் குதிரை ஆட்டம் ராஜஸ்தானில் எவ்வாறு அழைக்கப்படுகிறது

=> கச்சிகொடி

12➤ பொய்க்கால் குதிரை ஆட்டம் கேரளத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது

=> குதிரைக் களி

13➤ தகக.தகதகக தந்தத்த...என்ற திருப்புகழ் நூலில்அருணகிரிநாதரால் குறிப்பிடப்படும் இசைக்கருவி

=> தப்பாட்ட இசைக்கருவி (பறை என்றும் அழைப்பர்)

14➤ அருணகிரிநாதரின் திருப்புகழ் தொல்காப்பியரின் தொல்காப்பியம் ஆகியவற்றில் குறிப்பிடப்படும் இசைக்கருவி

=> தப்பாற்ற இசை கருவி அல்லது பறை இசைக்கருவி

15➤ தெருக்கூத்தை தமிழ் கலையின் முக்கிய அடையாளமாகியவர்

=> ந.முத்துசாமி

16➤ கலை ஞாயிறு என்று அழைக்கப்படுபவர்

=> ந.முத்துசாமி

17➤ தெருக்கூத்துக் கலைக்காக தாமரைத் திரு விருதைப் பெற்றவர்

=> ந. முத்துசாமி

18➤ திரௌபதி அம்மன் வழிபாட்டின் ஒரு பகுதியாக விளங்கும் கலை

=> தெருக்கூத்து

19➤ இசை ,ஓவியம், நடனம் |நாடகம் ,பல குரல் ஆகியவை இணைந்து

=> தோற்ப்பாவை கூத்து

20➤ திருவாசகத்திலும் பட்டினத்தார் பாடலிலும் சுட்டப்படும் கலை

=> தோற்பாவைக் கூத்து

21➤ ராசராச சோழன் தெரு எங்கே உள்ளது

=> மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில்

22➤ பூத்தொடுத்தல் கவிதையின் ஆசிரியர்

=> உமா மகேஸ்வரி

23➤ நட்சத்திரங்களின் நடுவே, பெரும்பொழுது, கற்பவை ஆகிய கவிதை தொகுதிகளைப் படைத்தவர்

=> கவிஞர் உமா மகேஸ்வரி

24➤ முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழை இயற்றியவர்

=> குமரகுருபரர்

25➤ பிள்ளைத்தமிழின் பருவங்கள்

=> 10 பருவங்கள்

26➤ பிள்ளைத்தமிழில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

=> 100

27➤ குமரகுருபரின் காலம்

=> 17ஆம் நூற்றாண்டு

28➤ குமரகுருபரர் எழுதிய நூல்கள்

=> கந்தர் கலிவெண்பா, மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை. நீதி நெறி விளக்கம், திருவாரூர் மும்மணிக் கோவை

29➤ இரு பாலாருக்கும் பொதுவான பருவங்கள்

=> 7

30➤ ஆண்பால் பிள்ளைத் தமிழுக்கு மட்டும் உரிய பருவங்கள்

=> சிற்றில் சிறுபறை. சிறுதேர்

31➤ பெண்பாற்பிள்ளைத் தமிழின் கடைசி மூன்று பருவங்கள்

=> கழங்கு அம்மானை ஊசல்

32➤ காலில் அணியும் அணிகலன்

=> சிலம்பு ,கிண்கிணி

33➤ இடையில் அணிவது

=> அரை நாண்

34➤ நெற்றியில் அணிவது

=> சுட்டி

35➤ காதில் அணிவது

=> குண்டலம் , குழை

36➤ தலையில் அணிவது

=> சூழி

37➤ கம்பர் எழுதிய ராமாயணத்திற்கு கம்பர் இட்ட பெயர்

=> ராமாவதாரம்

38➤ கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை

=> 6

39➤ கம்பரை ஆதரித்த வள்ளல்

=> சடையப்ப வள்ளல்

40➤ கம்பராமாயணம் எவ்வகை பாக்களால் ஆனது

=> விருத்தப்பா

41➤ கம்பர் எழுதிய நூல்கள்

=> சரஸ்வதி அந்தாதி ,சடகோபர் அந்தாதி .திருக்கை வழக்கம். ஏர் எழுபது, சிலை எழுபது

42➤ பாய்ச்சல் சிறுகதையின் ஆசிரியர்

=> சா. கந்தசாமி

43➤ ஏழமை வேட னிறந்தில னென்றெனை யேசாரோ -ஏழ்மை வேடன் எனக் குறிக்கப்படுபவர்

=> குகன்

44➤ தோழமை என்ற வர் சொல்லிய சொல் அன்றோ- யார் கூறியது

=>குகன் (ராமனை நினைத்து)

45➤ பாலகண்டத்தில் குவளை மலர்கள் எதற்கு உவமையாக குறிப்பிடப்படுகிறது

=> கண்கள்

46➤ பால காண்டத்தில் நீர்நிலைகள் எழுப்பும் அலைகள் எதற்கு உவமையாகக் குறிப்பிடப்படுகிறது

=> திரைச்சீலை

47➤ விசாரணைக் கமிசன் என்னும் புதினத்தை எழுதியவர் யார்

=> சா.கந்தசாமி

48➤ தக்கையின் மீது நான்கு கண்கள் சிறுகதை தொகுப்பின் ஆசிரியர்

=> சா.கந்தசாமி

49➤ சார் கந்தசாமி எழுதிய எந்த நூலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது

=> விசாரணைக் கமிஷன்

50➤ நான் கந்தசாமி எழுதிய எந்த குறும்படத்திற்கு அனைத்து உலக விருது வழங்கப்பட்டது

=> சுடுமண் சிலைகள்

No comments:

Post a Comment