செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Thursday 13 October 2022

தமிழ் திறனறித் தேர்வு இயல் 7

1➤ மா பெர.சி பிறந்த ஆண்டு மற்றும் ஊர்

=> 1906 ஜூன் 26 (சென்னை ஆயிரம் விளக்கு சால்வை குப்பம்)

2➤ மா.பொ. சி பெற்றோர் பெயர்

=> பொன்னுச்சாமி- சிவகாமி

3➤ மா .பொ. சிக்கு பெற்றோர் இட்ட பெயர்

=> ஞானப்பிரகாசம்

4➤ சிவஞானி என்று மா.பொ.சியை அழைத்த பெரியோர் பெயர்

=> சரபையர்

5➤ காந்தி-இர்வின் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஆண்டு

=> 1931

6➤ "தமிழா துள்ளி எழு' துண்டறிக்கை வெளியிடப்பட்ட நாள்

=> 30.09.1932

7➤ சுந்தரிக்கை வெளியிட்டதற்காக ம.பொ.சி க்கு வழங்கப்பட்ட தண்டனை

=> 3 மாதம் சிறை 300 ரூ.அபராதம்

8➤ வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு

=> 1942 ஆகஸ்ட் 8 ம் தேதி

9➤ வடக்கு எல்லைப் போராட்டத்தை ஆரம்பித்த முதியோர்

=> ஆசிரியர் மங்கலங்கிழார்

10➤ தமிழரசுக் கழகத்தை தோற்றுவித்தவர்

=> ம.பொ.சி

11➤ வடக்கு எல்லை போராட்டத்திற்காக தமிழ் மக்களை ஒருங்கிணைத்தவர்

=> மங்கலங்கிழார்

12➤ வடக்கில்லை போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் உயிர் துறந்தவர்கள்

=> திருவாலங்காடு கோவிந்தராஜன்,மாணிக்கம்

13➤ யாருடைய தலைமையில் மொழிவாரி ஆணையம் மத்திய .அரசால் அமைக்கப்பட்டது

=> கே எம் பணிக்கர

14➤ சித்தூர் மாவட்டம் முழுவதையும் ஆந்திராவிற்கு கொடுக்க உத்தரவிட்ட ஆணையம்

=> கே எம் பணிக்கர் ஆணையம்

15➤ மாலவன் குன்றம் போனாலென்ன வேலவன் குன்றம் ஆவது எங்களுக்கு வேண்டும் என்று முழங்கியவர்

=> ம.பொ.சி

16➤ சிலம்புச் செல்வர் என அழைக்கப்படுபவர்

=> ம.பொ.சி

17➤ மாலவன் குன்றம் வேலவன் குன்றம் எனக் குறிக்கப்படும் இடத்தின் பெயர்கள்

=> திருப்பதி, திருத்தணி

18➤ திருத்தணியை மீண்டும் தமிழகத்துடன் இணைத்த ஆணையம்

=> படாஸ்கர் ஆணையம்

19➤ சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திராவைப் பிரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஆணையம்

=> நீதிபதி வாஞ்சு தலைமையிலான ஒரு நபர் ஆணையம்

20➤ ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்ட போது சென்னை மாநகராட்சியின் தலைவராக இருந்தவர்

=> செங்கல்வராயன் (மாநகரத் தந்தை)

21➤ ஆந்திர அரசின் தலைநகரம் ஆந்திர நாட்டின் எல்லைக்குள்ளே அமையும் என அறிவித்தவர்

=> பிரதமர் நேரு

22➤ தெற்கெல்லைப் போராட்டத்தின் போது உயிர் நீத்தவர்கள்

=> தேவ சகாயம் , செல்லையா

23➤ கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்த நாள்

=> 1956 நவம்பர் 1

24➤ மார்ஷல் நேசமணி வகித்த பதவிகள்

=> நாகர்கோவில் நகர மன்ற தலைவர், சட்டமன்ற உறுப்பினர் , நாடாளுமன்ற உறுப்பினர்

25➤ கல்குளம் ,விளவங்கோடு ,தோவாளை, அகத்தீஸ்வரம் , செங்கோட்டை ஆகிய பகுதிகளை தமிழகத்தோடு இணைத்த ஆணையம்

=> பசல் அலி ஆணையம்

26➤ எனது போராட்டம் - என்னும் தன் வரலாற்று நூலினை எழுதியவர்

=> ம.பொ.சி

27➤ வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்னும் நூலின் ஆசிரியர்

=> ம.பொ.சி

28➤ மா.பொ.சி எழுதிய எந்த நூலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது

=> வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு

29➤ ஏர் புதிதா என்ற நூலின் ஆசிரியர்

=> கு.பா ராஜகோபாலன்

30➤ இரண்டாம் இராஜராஜ சோழன் பெற்ற பட்டங்கள்

=> கோப்பரகேசரி, திருபுவனச்சக்கரவர்த்தி

31➤ மன்னனின் நாட்டின் வளத்தையும் ஆட்சி சிறப்பையும் உணர்த்துவதாக உள்ளது

=> மெய்க்கீர்த்தி

32➤ மெய்க்கீர்த்திகள் - ..... ல் வடிக்கப்பட்டுள்ளன.

=> கல்லில்

33➤ புலவர்களால் எழுதப்பட்டுக் கல்தச்சர்களால் கல்லில் பொறிக்கப்படுபவை

=> மெய்க்கீர்த்திகள்

34➤ ராஜராஜன் கால தமிழ் கல்வெட்டு எந்த நூற்றாண்டில் எங்கே காணப்படுகிறது

=> 11 ஆம் நூற்றாண்டில் தஞ்சை பெரிய கோவில்

35➤ இந்தி ரன் முதற் திசா பாலர் எண் மரும் ஒருவடிவாகி இவ்வடிகள் இடம் பெற்றுள்ளது

=> ராஜ ராஜனின் மெய்க்கீர்த்தியில்

36➤ சிலப்பதிகாரத்தினை இயற்றியவர்

=> இளங்கோவடிகள்

37➤ திருமால் குன்றம் என்று அழைக்கப்படுவது

=> அழகர் மலை

38➤ கோவலனையும் கண்ணகியையும் அழைத்துச் சென்றவர்

=> கவுந்தியடிகள்

39➤ நெடுவேள் குன்றம் என்று அழைக்கப்படுவது

=> சுருளி மலை

40➤ உரைப்பாட்டு மடை என்பது

=> உரைநடை பாங்கில் அமைந்திருக்கும் பாட்டு

41➤ முத்தமிழ்க் காப்பியம் என்று குறிக்கப்படுவது

=> சிலப்பதிகாரம்

42➤ குடிமக்கள் காப்பியம் என்று அழைக்கப்படுவது

=> சிலப்பதிகாரம்

43➤ சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை

=> 3 (புகார்க் காண்டம் மதுரைக் காண்டம் வஞ்சிக் காண்டம்)

44➤ சிலப்பதிகாரத்தில் எத்தனை காதைகள் உள்ளன

=> 30

45➤ இரட்டைக் காப்பியம் என்று அழைக்கப்படுவது

=> சிலப்பதிகாரமும் மணிமேகலையும்

46➤ மணிமேகலையின் ஆசிரியர்

=> சீத்தலைச் சாத்தனார்

47➤ ' அடிகள் நீரே அருளுக 'என்று யார் யாரிடம் கூறியது

=> சீத்தலைச் சாத்தனார் இளங்கோவிடம்

48➤ நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள் - என யார் யாரிடம் கூறினார்

=> இளங்கோவடிகள் சீத்தலைச்சாத்தனாரிடம்ம்

49➤ நகர் பகுதியில் இடம்பெறும் ஊர்

=> பட்டினப்பாக்கம்

50➤ கடற் பகுதியில் காணப்படும் ஊர்

=> மருவூர்ப்பக்கம்

51➤ சிலப்பதிகார காண்டங்களில் உள்ள காதைகளின் எண்ணிக்கை

=> புகார்க்காண்டம் 10, மதுரைக்காண்டம் 13 வஞ்சிக் காண்டம் 7

52➤ இளங்கோவடிகளின் பெற்றோர் பெயர்

=> இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் - நற்சோனை

53➤ இந்திர விழவு ஊரெடுத்த காதை கொண்டாடப்படும் நாள்

=> சித்திரை முழு நிலவு

54➤ ஹெலன் கெல்லரால் பாராட்டப்பட்ட வீணை இசைக்கலைஞர்

=> எம் எஸ் சுப்புலட்சுமி (மதுரை சண்முக வடிவு சுப்புலட்சுமி)

55➤ எம் எஸ் சுப்புலட்சுமி அவர்களுக்கு தாமரையணி விருது எந்த ஆண்டு வழங்கப்பட்டது

=> 1954

56➤ எம் எஸ் சுப்புலட்சுமி அவர்களுக்கு மகசேசே விருது வழங்கப்பட்ட ஆண்டு

=> 1974 (இவ்விருது பெறும் முதல் இசை கலைஞர் இவரே)

57➤ குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா என்ற பாடலை பாடியவர்

=> எம் எஸ் சுப்புலட்சுமி

58➤ எம் எஸ் சுப்புலட்சுமிக்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த விருது

=> இந்திய மாமணி

59➤ நடனத்திற்காக தாமரைச்செவ்வினி விருது பெற்றவர்

=> பால சரஸ்வதி

60➤ ஜன கணமன- தேசிய பாடலுக்கு நடனம் ஆடியவர் மற்றும் இடம்

=> பால சரஸ்வதி சென்னையில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் கண்காட்சியில்

61➤ பேருக்கு நீர் என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதமி விருது பெற்றவர்

=> ராஜம் கிருஷ்ணன் (முதல் பெண் எழுத்தாளர்)

62➤ பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி - என்னும் வரலாற்றுப் புதினத்தை எழுதியவர்

=> ராஜம் கிருஷ்ணன்

63➤ உப்பளம் தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு ராஜம் கிருஷ்ணனால் எழுதப்பட்ட புதினம்

=> கரிப்பு மணிகள்

64➤ நீலகிரி வடுகர் இன மக்களின் வாழ்வில் மாற்றங்கள் குறித்து ராஜம் கிருஷ்ணனால் எழுதப்பட்ட புதினம்

=> குறிஞ்சித்தேன்

65➤ கடலோர மீனவர் வாழ்வின் சிக்கல்கள் குறித்து ராஜம் கிருஷ்ணனால் எழுதப்பட்ட புதினம்

=> அலைவாய்க் கரையில்

66➤ அமைப்பு சாரா வேளாண் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவதை பற்றி எழுதப்பட்ட புதினங்கள்

=> சேற்றில் மனிதர்கள் , வேருக்கு நீர்

67➤ தீப்பெட்டி தொழில்- குழந்தைகளை மையமாகக் கொண்டு ராஜம் கிருஷ்ணனால் எழுதப்பட்ட புதினம்

=> கூட்டுக் குஞ்சுகள்

68➤ பெண் குழந்தைகளின் கொலைக்கான காரணங்களை ஆராய்ந்து எழுதப்பட்ட புதினம்

=> மண்ணகத்துப் பூந்துளிகள்

69➤ மதுரையின் முதல் பட்டதாரி பெண்

=> கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

70➤ கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் பெற்ற விருதுகள்

=> இந்திய அரசின் தாமரைத்திரு விருது, ஸ்வீடன் அரசின் வாழ்வுரிமை விருது,சுவிட்சர்லாந்து அரசின் காந்தி அமைதி விருது

71➤ பூதான இயக்கத்தில் பணிபுரிந்தவர்

=> கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்

72➤ உழுபவருக்கே நில உரிமை இயக்கம், -தொடங்கியவர்

=> கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

73➤ காந்தியடிகள் மற்றும் வினோபாவுடன் பணியாற்றியவர்

=> கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

74➤ களஞ்சியம்,- என்னும் குழுவினை ஆரம்பித்தவர்

=> மதுரை சின்னப்பிள்ளை

75➤ ஸ்திரீ சக்தி புரஸ்கார் (பெண் ஆற்றல் விருது).பெற்றவர்

=> மதுரை சின்னப்பிள்ளை (களஞ்சியம் மகளிர் சுய உதவி குழுவுக்காக)

76➤ தமிழக அரசின் ஒளவை விருதினை பெற்றவர்

=> மதுரை சின்னப்பிள்ளை

77➤ தூர்தர்ஷன் சார்பாக பொதிகை விருதினைப் பெற்றவர்

=> மதுரை சின்னப்பிள்ளை

78➤ மகளிரின் வாழ்வு மேம்பாட்டுக்காக தாமரைத்திரு விருது பெற்றவர்

=> மதுரை சின்னப்பிள்ளை

79➤ என் கதை - என்ற நூலின் ஆசிரியர்

=> நாமக்கல் கவிஞர் வெ இராமலிங்கம்

80➤ நாற்காலிக்காரர் - என்ற நூலின் ஆசிரியர்

=> நா முத்துசாமி

81➤ புறத்திணை எத்தனை வகைப்படும்

=> 12 வகைப்படும்

82➤ ஆ நிரை கவர்தல் ...... என்று அழைக்கப்படும்

=> வெட்சித்திணை

83➤ ஆநிரைகளை மீட்டல் ........ எனப்படும்

=> கரந்தைத் திணை

84➤ மண்ணாசை கருதி பகைவர் நாட்டைக் கைப்பற்ற செல்பவர் சூடுவது

=> வஞ்சித் திணை

85➤ தன் நாட்டை கைப்பற்ற வந்த மாற்று அரசனோடு எதிர்த்து போரிடுவது

=> காஞ்சித் திணை

86➤ கோட்டையை முற்றுகையிட்ட மன்னனை எதிர்த்து போரிடுவது

=> நொச்சித் திணை

87➤ மாற்று அரசனின் கோட்டையை கைப்பற்ற சுடுவது

=> உழிஞைப்பூ (உழிஞைத்திணை)

88➤ பகை அரசர்கள் இருவரும் நேர் நின்று போரிடுவது

=> தும்பைத்திணை எனப்படும்

89➤ போரில் வெற்றி பெற்ற மன்னன் சூடுவது

=> வாகைத் திணை

90➤ பாடுவதற்கு தகுதியுடைய ஓர் ஆளுமையின் கல்வி வீரம் செல்வம் புகழ் கருணை முதலியவற்றை போற்றி பாடுவது

=> பாடான் திணை

91➤ வெற்றி முதல் படம் திணை வரை உள்ள புறத்திணைகளில் பொதுவான வற்றவையும் கூறப்படாதவனவற்றையும் கூறுவது

=> பொதுவியல் திணை

92➤ ஒரு தலைக்காமம் என்பது

=> கைக்கிளை

93➤ பொருந்தாக் காமம் என்பது

=> பெருந்தினை

94➤ உழிஞைப் பூ என்பது....... என அழைக்கப்படுகிறது

=> முடக்கத்தான் (முடக்கொற்றான்,

95➤ வெட்சிப்பூ என்பது ........ என்று அழைக்கப்படுகிறது

=> இட்லிப் பூ

96➤ மாணிக்கமும் தொழிலும் ஒழுங்கு முறையுடன் சிறந்திருந்ததாக சிலப்பதிகாரத்தால் சுட்டிக்காட்டப்படும் ஊர்

=> மருவூர்ப் பாக்கம்

97➤ ராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்திகள் ஒன்றில் காணப்படும் அடிகளின் எண்ணிக்கை

=> 91 அடிகள்

98➤ சோழ நாட்டில் பிணிக்கப்படுவன

=> யானைகள்

99➤ சோழநாட்டில் அடைக்கப்படுவன

=> புனல்கள்
புனல்கள்

100➤ ம.பொ.சி வகித்த பதவிகள்

=> சட்டமன்ற மேலவை உறுப்பினர் ( 1952 - 1954), சட்டமன்ற மேலவைத் தலைவர் (1972 - 1978)

No comments:

Post a Comment