செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Wednesday 12 October 2022

வகுப்பு. 7 பயணங்கள் பல வகை

 முன்னுரை – பயணத்தின் தேவை – தரைவழிப்பயணம் – கடல்வழிப்

பயணம் – வான்வழிப் பயணம்

பயணங்கள் பலவகை

முன்னுரை:
பயணம் செய்வதில் இளஞ்சிறார்கள் முதல் முதியவர்கள் வரை பெருவிருப்பம் கொள்வார்கள். பயணம் தரைவழிப் பயணம், நீர்வழிப் பயணம், வான்வழிப் பயணம் என மூன்று வகையாகப் பிரிக்கலாம். இவற்றைப் பற்றி இங்கு ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பயணத்தின் தேவை :
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு . இது ஔவை சொன்ன அமுதமொழி. சுற்றுப்பயணம் மேற்கொண்டால் பல நாடுகளைப் பார்க்கலாம். அங்குள்ள கலைநயம் மிக்க சிற்பங்கள், கோயில்கள், இயற்கைக் காட்சிகள், கவின்மிகு கலைப்பொருட்கள் இவற்றினைக் கண்டு ரசிக்கலாம்.

தொழில் நிமித்தமாக பயணம் மேற்கொள்வதும் அங்குள்ள மக்களின் பழக்க வழக்கங்களையும் கலாச்சாரங்களையும் பற்றியும் அறிவுப்பூர்வமாக தெரிந்து கொள்ளலாம்.


தரைவழிப் பயணம்:
ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு பயணிப்பது பயணம் ஆகும். பேருந்து, சிற்றுந்து, மகிழுந்து, இரு சக்கர வாகனம் இவற்றின் மூலம் பயணம் செய்வது தரைவழிப் பயணம் ஆகும். தரைவழிப் பயணம் ஏழை எளியவர், நடுத்தர வகுப்பினர், உயர் தர வகுப்பினர் யாவரும் பயன்படுத்தும் பயணம் ஆகும். போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுவதால் இப்பயணத்தில் நேரம் விரயமாகிறது. மன உளைச்சல்களுக்கு ஆளாக வேண்டிய சூழல் ஏற்படுகிறது


'கடல்வழிப் பயணம்:


வானூர்திகள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் வெளிநாட்டுப் பயணத்திற்கு உதவியவை கப்பல்களே. கப்பல்கள் மூலம் பொருட்கள் துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்டன. இதற்கான ஆதாரங்கள் பட்டினப்பாலையில் தரப்பட்டுள்ளன. தோணி, ஓடம், படகு, புணை, மிதவை, தெப்பம் போன்றவற்றை சிறிய நீர்நிலைகளைக் கடக்கப் பயன்படுத்தினர். கலம், வங்கம், நாவாய் முதலியவை அளவில் பெரியவை. இவற்றைக் கொண்டு தமிழர்கள் கடல்பயணம் மேற்கொண்டனர். கடலில் செல்லும் கப்பல்களுக்குத் துறைமுகம் இருக்கும் இடத்தைக் காட்டுவதற்காக அமைக்கப்படுவது கலங்கரை விளக்கம் ஆகும்.


வான்வழிப் பயணம்:


மிக துரிதமாக ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு சேர்ப்பது வான்வழிப்பயணமே. வான்வழிப் பயணம் வந்த பிறகு கடல் வழிப்பயணம் குறைந்தது. கடல் வழிப் பயணத்தில் போக வேண்டிய இடத்திற்கு சில நாட்கள் ஆகும். வான்வழிப் பயணம் மூலமாக சில மணி நேரங்களில் போக வேண்டிய இடத்திற்கு போய் சேரலாம். மிக முக்கியமான அரசியல் பிரமுகர்கள், அரசுத் துறையில் இருப்பவர்கள், வியாபாரிகள்; தொழிலதிபர்கள் போன்றோர் வேலை நிமித்தமாக இந்த வான்வழிப் பயணத்தை மேற்கொள்கின்றனர்.


முடிவுரை:
பயணம் மனிதர்கள் வாழ்க்கையில் அன்றாடம் வந்து போகும் முக்கிய நிகழ்வு ஆகும். தரைவழிப் பயணத்தை யாவரும் பயன்படுத்துவர். கடல்வழிப்பயணத்தில் கனரகப் பொருள்களை ஏற்றிச் செல்ல கப்பல்கள் பயன்படுகின்றன. தொழில் ரீதியாக வான்வழிப் பயணத்தைச் சிலர் பயன்படுத்துகின்றனர்


No comments:

Post a Comment