செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Wednesday 6 December 2023

மீட்டுணர் வினா வகை - வகுப்பு 8- தமிழ் - செய்யுள் 1-5 இயல்

1➤ பாரதியார் நடத்திய இதழ்களின் பெயர்

=> இந்தியா, விஜயா

2➤ பாரதி எழுதிய உரைநடை நூல்கள்

=> சந்திரிகையின் கதை , தராசு

3➤ பாரதியாருக்கு வழங்கும் வேறு பெயர்கள்

=> சிந்துக்குத் தந்தை,செந்தமிழ்த்தேன், புதிய அறம் பாட வந்த அறிஞர்,மறம் பாட வந்த மறவன்
மேற்கண்டவாறு பாராட்டியவர் பாரதிதாசன்

4➤ மொழிக்குரிய ஒழுங்குமுறை ..... எனப்படும்.

=> மரபு

5➤ செய்யுளுக்கும் மரபுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி கூறும் நூல்......

=> தொல்காப்பியம்

6➤ மரபு நிலை திரிதல் செய்யுட்கு இல்லை- வரிகள் இடம் பெற்ற நூல்

=> தொல்காப்பியம்

7➤ மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும் - வரிகள் இடம்பெற்ற நூல்

=> தொல்காப்பியம்

8➤ தமிழ் மொழிச் சொற்களை வழங்குவதில் மரபு மாறினால் .......மாறிவிடும்

=> பொருள்

9➤ உலகத்துப் பொருட்களை இரு திணைகளாகவும் ஐம்பால்களாகவும் பாகுபடுத்திக் கூறுதல் ...... மரபு

=> தமிழ் மொழியின் மரபு

10➤ உயிர் எழுத்துக்கள் நீண்டு ஒலிப்பது...

=> உயிரளபெடை

11➤ தொல்காப்பியத்தின் ஆசிரியர்

=> தொல்காப்பியர்

12➤ தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல்

=> தொல்காப்பியம்

13➤ தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்கள்

=> 3
எழுத்து ,சொல் ,பொருள்

14➤ தமிழகத்தின் 'வேர்ட்ஸ் வொர்த் எனப் புகழப்படுபவர்

=> கவிஞர் வாணிதாசன்

15➤ வாணிதாசனின் இயற்பெயர்

=> அரங்கசாமி என்கிற எத்திராசலு

16➤ வாணிதாசனுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்

=> கவிஞரேறு, பாவலர் மணி

17➤ வாணிதாசனுக்கு பிரெஞ்சு அரசு வழங்கிய விருது

=> செவாலியர்

18➤ வாணிதாசன் எழுதிய வேறு நூல்கள்

=> தமிழச்சி ,கொடி முல்லை, தொடுவானம் , எழிலோவியம், குழந்தை இலக்கியம்

19➤ கோணக் காத்துப் பாட்டினை எழுதியவர்

=> வெங்கம்பூர் சாமிநாதன்

20➤ பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் மக்கள் பட்ட துயரங்களை மையமாகக் கொண்டு ........ பாடல்களாக பாடினார்

=> கும்மிப் பாடல்கள்

21➤ கும்மிப் பாடல்கள்...... எனவும் அழைக்கப்பட்டன.

=> பஞ்சக் கும்மிகள்

22➤ வள்ளுவருக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்

=> பெருநாவலர் முதற் பாவலர், நாயனார்

23➤ அறத்துப்பாலில் உள்ள இயல்களின் எண்ணிக்கை

=> 4
பாயிரவியல் இல்லறவியல் துறவறவியல் ஊழியல்

24➤ பொருட்பாலில் உள்ள இயல்களின் எண்ணிக்கை

=> 3
அரசியல் அமைச்சியல் ஒழிபியல்

25➤ இன்பத்துப்பாலில் உள்ள இயல்களின் எண்ணிக்கை

=> 2
களவியல், கற்பியல்

26➤ ஐஞ்சிறு காப்பியங்கள் யாவை ?

=> உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி

27➤ நீலகேசி ...... சமயக் கருத்துக்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது

=> சமண சமயக்

28➤ நீலகேசி நூல் எத்தனை சருக்கங்களை உடையது

=> 10 சருக்கம்

29➤ பிறவித் துன்பத்தை நீக்கும் மருந்துகள் எத்தனை என நீலகேசி குறிப்பிடுகிறது?

=> மூன்று
நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம்

30➤ கவிமணி எனப் போற்றப்படுபவர்

=> தேசிக விநாயகனார்

31➤ தேசிய விநாயகம் எழுதிய கவிதை நூல்கள் யாவை ?

=> மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை
(கவிதை நூல்கள் என்பது குறிப்பிடப்பட்டது )

32➤ திகை விநாயகனார் மொழி பெயர்த்த நூல்கள் யாவை

=> உமர் கய்யாம் பாடல்கள்

33➤ மனிதர்களுக்கு உண்மையான அழகு சேர்ப்பது கல்வி எனக் கூறும் நூல்......

=> நீதி நெறி விளக்கம்

34➤ மக்களின் வாழ்வுக்குத் தேவையான நீதிகளைச் சுட்டும் நூல்

=> நீதி நெறி விளக்கம்

35➤ நீதிநெறி விளக்கத்தில் உள்ள வெண்பாக்களின் எண்ணிக்கை

=> 102
கடவுள் வாழ்த்து உட்பட

36➤ குமரகுருபரர் எழுதிய நூல்கள் ......

=> கலிவெண்பா,கயிலைக் கலம்பகம்,சகலகலாவல்லி மாலை,மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்,முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்

37➤ கல்வி அழகே அழகு என்னும் பாடலை எழுதியவர்

=> குமரகுருபரர்
நீதிநெறி விளக்கம்

38➤ புத்தியைத் தீட்டு - பாடலை எழுதியவர்

=> ஆலங்குடி சோமு

39➤ திருக்கேதாரம் பாடலை எழுதியவர்

=> சுந்தரர்

40➤ சுந்தரருக்கு வழங்கும் வேறு பெயர்கள்

=> நம்பியாரூரர்,தம்பிரான் தோழர்

41➤ சுந்தரர் பாடிய பாடல்கள் ...... திருமுறைகளாக வைக்கப்பட்டுள்ளன

=> ஏழாம் திருமுறை

42➤ திருத்தொண்டர் தொகையை ழுதியவர்

=> சுந்தரா

43➤ பெரிய புராணத்தை எழுதியவர்

=> சேக்கிழார்

44➤ திருத்தொண்டர் தொகையை முதல் நூலாகக் கொண்டு எழுதப்பட்ட நூல்

=> பெரிய புராணம்
எழுதியவர் சேக்கிழார்

45➤ மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பு

=> தேவாரம்
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்

46➤ தேவாரத்தை தொகுத்தவர்

=> நம்பியாண்டார் நம்பி

47➤ பதிகம் என்பது ...... பாடல்களைக் கொண்டது

=> 10

48➤ கலித்தொகை_ ....... பாடல்களைக் கொண்டது

=> 150 பாடல்கள்

49➤ கலித்தொகையை தொகுத்தவர்......

=> நல்லந்துவனார்

50➤ கலித்தொகை ........வகை பாவால் ஆனது

=> கலிப்பா

No comments:

Post a Comment