மாதிரிக் கடிதம்
அன்புள்ள தோழி,
நானும் என் பெற்றோரும் நலம். அதுபோல நீயும் உன் பெற்றோரும் நலமா?
பள்ளிக்கல்வித் துறையால் நடத்தப்படும் கலைத்திருவிழாப் போட்டிகளில் கிராமியப் பாடல் பிரிவில் மாநில அளவில் நீ முதல் பரிசு பெற்றுள்ளாய் என்பதை அறிந்தேன். சிறுவயதில் இருந்தே உனக்கு இசையில் மிகுந்த ஈடுபாடு உண்டு என்பது எனக்குத் தெரியும். நீ அடிக்கடி பாடல்களைப் பாடிப் பயிற்சி செய்வதையும் நான் பார்த்திருக்கிறேன். உனது முயற்சியும் முறையான பயிற்சியும்தான் உனக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளன. உன்னை மனமார நான் பாராட்டுகிறேன். நீ இன்னும் பல பரிசுகளைப் பெற்று வாழ்வில் சிறக்க வாழ்த்துகிறேன்.
இப்படிக்கு,
உன் அன்புத் தோழி,
சி. தமிழினி.
No comments:
Post a Comment