பாட அறிமுகம்
வேர்களில் இருந்து பிரிக்கப்பட்டு, உலகின் பல்வேறு திசைகளில் பரவி வாழ்ந்தாலும், தாய்மண்ணின் நினைவுகளையும் தமிழ் மொழியையும் நெஞ்சில் சுமந்து வாழும் புலம்பெயர் தமிழர்களின் வலியை உணர்த்தும் ஒரு சிறு கவிதை இதோ:
வேர் தேடும் பறவைகள்
மண்ணை விட்டுப் பிரிந்தாலும்
மனதை விட்டுப் பிரியவில்லை,
அந்நிய தேசத்து குளிரிலும்
அம்மாவின் வெந்நீர் நினைவு!
பணத்தைத் தேடி ஓடினாலும்
பாசத்தைத் தேடுது நெஞ்சம்,
வாழும் நாடோ மொழிகள் பல
சுவாசிக்கும் காற்றோ தமிழ்மட்டும்!
முகவரி மாறிய பறவைகளாய்
சிறகடித்துப் பறக்கின்றோம்,
என்றோ ஒருநாள் சொந்தக் கூட்டை
அடைந்திடுவோம் என்ற நம்பிக்கையில்!
கூடுகள் மாறலாம்...
ஆனால், எங்கள் தமிழ் வேர்கள் மாறாது!
ஆறாம் திணை
எழுதியவர் : அ. முத்துலிங்கம்
🌻பனியும் பனி சார்ந்த நிலமும்
ஆறு மணிக் குருவி உவமையாகக் கூறப்பட்டுள்ளது.
🌻 ஜனவரி 12 - அயலகத் தமிழர் தினம் தாய் மண் திட்டம் )
கதையின் போக்கு
இலங்கை - மவுண்லவினியா இடம்
ப்ரீஸ் - வீட்டின் முதலாளி
அகதி முகாமுக்கு செல்லும் போது எடுத்துச் சென்ற புத்தகம்
ராபின்சன் குரூசோ
முகாமின் நிகழ்வுகள்
இலவச உடை
தட்டேந்தி உணவு
சந்தித்த தமிழ் இளைஞரின் திறமை
👍இலங்கை மற்றும் பாங்காங் சிறை
👍 ரஷ்யா - பனிப்புதைவில் தப்பியது
👍 சிங்கப்பூரில் பிரம்படி
👍 அமெரிக்காவில் கை மற்றும் காலில் இரும்புக் குண்டுடன் கூடிய சங்கிலி
👍 18 இண்டர் வியூ
👍
புலம்பெயர் இலக்கியம்
நற்றிணை 153 ஆவது பாடல்
வெஞ்சின வேந்தன் பகை அலைக் கலங்கி ,
அறிவைச் சாகடித்துவிட்டால் மனிதன் செத்துவிடுவான்
- ஃபாரன் ஹூட் 451 நூல்
ஜனவரி 14 - தமிழர் பாரம்பரிய நாள்
வன்னி வீதி உள்ள இடம் - கனடா ( ஈழத்தமிழரின் புலம் பெயர் வரலாற்றை தாங்கி நிற்கிறது)
எழுத்தாளரின் குறிப்பு
அ. முத்துலிங்கம்
இலங்கை யாழ்ப்பாணம் - கொக்குவில் கிராமம்
சிறுகதைத் தொகுப்பு:
1 அக்கா
2. மகாராஜாவின் ரயில் வண்டி
3. திகடசக்கரம்
தமிழக அரசின் பரிசு பெற்ற நூல் - வம்ச 🌻விருத்தி
இலங்கை அரசின் சாகித்திய பரிசு - வடக்கு வீதி