செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Friday 30 July 2021

வாராந்திர தேர்வு- வகுப்பு 10- தமிழ் ( மொழிபெயர்ப்புக்கல்வி, பொது இலக்கணம்,திருவிளையாடற்புராணம்)

 

அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி

கடையநல்லூர்.

வாராந்திர தேர்வு

பத்தாம் வகுப்பு (தமிழ்)

நாள்-02-08-21                    நேரம்- 3-00 மணி முதல் 4-00 மணிவரை

மொத்த மதிப்பெண் 20

கீழ்க்காணும் வினாக்களில் ஏதேனும் 10 க்கு விடையளி (20 மதிப்பெண்)

 

1.திணை எத்தனை வகைப்படும்?

2. மரபு வழுவமைதியை விளக்கு?

3. வழு என்றால் என்ன?

4. மொழிபெயர்ப்பின் இன்றியமையாமையை குறிப்பிடுக

5. ஒரு நாட்டின் பண்பாட்டு அறிவினை எதனைக் கொண்டு மதிப்பிடுகிறார்கள்?

6. சதாவதானம் என்றால் என்ன?

7. செய்குதம்பிப் பாவலர் – சிறு குறிப்பு வரைக

8. திருவிளையாடற்புராணம் சிறு குறிப்பு வரைக

9. பரஞ்சோதி முனிவர் – சிறுகுறிப்பு வரைக.

10.இடைக்காடனார் இறைவனிடம் கூறியது யாது?

11. பாண்டிய மன்னன் இறைவனிடம் கூறியது யாது?

12. இறைவன் பாண்டிய மன்னனிடம் கூறியது யாதுஃ

13. மொழிபெயர்ப்பு – என்றால் என்ன?

14. மொழிபெயர்ப்பு பற்றி தொல்காப்பியர் குறிப்பிடுவது யாது?

15. திணை வழுவமைதி விளக்குக.

வாராந்திர தேர்வு- வகுப்பு 9- ( திராவிட மொழிக்குடும்பம், திருக்குறள், இயந்திரங்களும் இணையவழிப்பயண்பாடுகளும்)

 

அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி

கடையநல்லூர்.

வாராந்திர தேர்வு

ஒன்பதாம் வகுப்பு (தமிழ்)

நாள்-02-08-21                    நேரம்- 3-00 மணி முதல் 4-00 மணிவரை

                                   மொத்த மதிப்பெண் 20

கீழ்க்காணும் வினாக்களில் ஏதேனும் 10 க்கு விடையளி (20 மதிப்பெண்)

1.   தீயைவிடக் கொடியது எது? என வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

2.   சிறந்த செல்வமாக எதனை வள்ளுவர் குறிப்பிடுகின்றார்

3.   தீராத துன்பம் தருவன எது என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

4.   வாழ்வில் உயர நினைப்பவர் எதனை புறந்தள்ளுதல் வேண்டும் என வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

5.   பசுமண் கலத்துநீர்- உவமையால் விளக்கப்படும் கருத்து யாது?

6.   கனவிலும் இனிமை நட்பு – என வள்ளுவர் குறிப்பிடுவது யாது?

7.   பேதையின் பேதையார் இல்- பாடல் மூலம் வள்ளுவர் குறிப்பிடுவது யாது?

8.   திருவள்ளுவருக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் யாவை?

9.   திருக்குறளுக்கு உரை எழுதிய உரையாசிரியர்கள் பெயரினைக்குறிப்பிடுக.

10. ஆளறி சோதனைக் கருவியின் பயன் யாது?

11. இணையவழிப் பதிவு எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

12. பள்ளி மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளால் நடத்தப்படும் தேர்வுகள் யாவை?

13. மொழிகளின் காட்சிசாலை என குறிப்பிடுபவர் யார்?ஏன்?

14. தென்திராவிட மொழிகள் யாவை?

15. திராவிட மொழிகளின் பொதுப்பண்புகள் யாவை?

16. தமிழ்மொழியின் பழமையான இலக்கியம் எது?

17. தமிழ்மொழியின் பழமையான இலக்கண நூல் எது?

18. ஐந்து என்ற சொல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் எவ்வாறு அழைக்கப்படுகிறது

19. தமிழின் தனித்தன்மைகள் ஏதாவது இரண்டினைக் குறிப்பிடுக.

20. வடதிராவிட மொழிகள் யாவை?


Thursday 29 July 2021

வகுப்பு -8 - தமிழ்- எழுத்துக்களின் பிறப்பு ( வினா-விடைகள்)

 Question 1.

‘ஆய்தம்’ – இச்சொல்லில் உள்ள ஒவ்வோர் எழுத்தின் வகையையும், அது பிறக்கும் இடத்தையும் பட்டியல் இடுக.
Answer:
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.5 ஏழுத்துகளின் பிறப்பு 1

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 

Question 1.
இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் ……………….
அ) இ, ஈ
ஆ) உ, ஊ
இ) எ, ஏ
ஈ) அ, ஆ
Answer:
ஆ) உ, ஊ

Question 2.
ஆய்த எழுத்து பிறக்கும் இடம் …………..
அ) மார்பு
ஆ) கழுத்து
இ) தலை
ஈ) மூக்கு
Answer:
இ) தலை

Question 3.
வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் ……………
அ) தலை
ஆ) மார்பு
இ) மூக்கு
ஈ) கழுத்து
Answer:
ஆ) மார்பு

Question 4.
நாவின் நுனி, அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள். ………………..
அ) க், ங்
ஆ) ச், ஞ்
இ) ட், ண்
ஈ) ப், ம்
Answer:
இ) ட், ண்

Question 5.
கீழ்இதழும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து …………
அ) ம்
ஆ) ப்
இ) ய்
ஈ) வ்
Answer:
ஈ) வ்

பொருத்துக

1. க், ங் – நாவின் இடை, அண்ணத்தின் இடை
2. ச், ஞ் – நாவின் நுனி, மேல்வாய்ப்பல்லின் அடி
3. ட், ண் – நாவின் முதல், அண்ண த்தின் அடி
4. த், ந் – நாவின் நுனி, அண்ணத்தின் நுனி
Answer:
1. க், ங் – நாவின் முதல், அண்ண த்தின் அடி
2. ச், ஞ் – நாவின் இடை, அண்ணத்தின் இடை
3. ட், ண் – நாவின் நுனி, அண்ணத்தின் நுனி
4. த்,ந் – நாவின் நுனி, மேல்வாய்ப்பல்லின் அடி

சிறுவினா

Question 1.
எழுத்துகளின் பிறப்பு என்றால் என்ன?
Answer:
உயிரின் முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது மார்பு, தலை, கழுத்து, மூக்கு ஆகிய நான்கு இடங்களுள் ஒன்றில் பொருந்தி இதழ், நாக்கு, பல், மேல்வாய் ஆகிய உறுப்புகளின் முயற்சியினால் வேறு வேறு ஒலிகளாகத் தோன்றுகின்றன.

Question 2.
மெய் எழுத்துகள் எவற்றை இடமாகக் கொண்டு பிறக்கின்றன?
Answer:
மெய் எழுத்துகளின் இடப்பிறப்பு :
(i) வல்லின மெய்கள் க் ச்ட்த்ப்ற் ) – மார்பு
(ii) மெல்லின மெய்கள் (ங் ஞ் ண் ந்ம்ன் ) – மூக்கு
(iii) இடையின மெய்கள் (யார் ல் வ் ழ் ள்) – கழுத்து


Question 3.
ழகர, லகர, ளகர மெய்களின் பிறப்பு முயற்சி பற்றி எழுதுக.
Answer:
(i) ழகரம் – மேல்வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறக்கும்.
(ii) லகரம் – மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறக்கும்.
(iii) ளகரம் – மேல்வாயை நாக்கின் ஓரங்கள் தடித்துத் தடவுதலால் பிறக்கும்.

மொழியை ஆள்வோம்

கேட்க :

Question 1.
தமிழ்மொழியை வாழ்த்திப் பாடிய வேறு கவிஞர்களின் பாடல்களைக் கேட்டு மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே தமிழ்மொழியை வாழ்த்தி பாடிய வேறு கவிஞர்களின் பாடல்களை கேட்டு மகிழ வேண்டும்.

கீழ்க்காணும் தலைப்புகளில் இரண்டு நிமிடம் பேசுக

Question 1.
தமிழ் எழுத்துகளின் தோற்றமும் வளர்ச்சியும்
Answer:
அவையோர்க்கு வணக்கம்!
நாம் செந்தமிழில் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுகிறோம். இதற்கெல்லாம் அடிப்படையாக அமைந்த எழுத்துகள் எவ்வாறு தோன்றி வளர்ந்தன என்பதனைப் பார்ப்போம்.

மனிதன் தன் கருத்தைப் பிறருக்கு அறிவிக்க மொழியைக் கண்டுபிடித்தான். மொழியை நிலைபெறச் செய்ய எழுத்துகளை உருவாக்கினான். மனிதன் தோன்றிய காலத்தில் தனது தேவைகளையும் கருத்துகளையும் மற்றவர்களுக்குத் தெரிவிக்கச் சைகைகளைப் பயன்படுத்தினான். காலப்போக்கில் சிறிது சிறிதாகச் சொற்களைச் சொல்லக் கற்றுக்கொண்டான். பிறகு அவை பண்பட்டு பேச்சுமொழி உருவானது.

மனிதன் வருங்காலத் தலைமுறையினருக்குக் கருத்துகளைத் தெரிவிக்க பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான். அங்குத் தோன்றியது எழுத்து வடிவத்தின் தொடக்கநிலை. பின்பு ‘ஓவிய எழுத்து’ என்றும் ‘ஒலி எழுத்து நிலை’ என்றும் பெயர் பெற்றது.

காலந்தோறும் தமிழ் எழுத்துகளின் வரிவடிவங்கள் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வளர்ச்சி அடைந்துள்ளன. அச்சுக்கலை தோன்றிய பிறகு எழுத்துகள் நிலையான வடிவத்தைப் பெற்றுள்ளன. பழைய வரிவடிவங்களான வட்டெழுத்து, தமிழெழுத்துகளைக் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் காணலாம்.

சேர, பாண்டிய மண்டலங்களில் எட்டாம் நூற்றாண்டு முதல் பதினொன்றாம் நூற்றாண்டு வரை கிடைக்கும் சாசனங்களில் வட்டெழுத்துகளே காணப்படுகின்றன. பதினொன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு கிடைக்கும் கல்வெட்டுகளில் பழைய தமிழெழுத்துகள் காணப்படுகின்றன. கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் கண்ணெழுத்துகள் என்றழைக்கப்பட்டன.

எழுத்துகள் காலத்திற்கேற்பப் பல உருவ மாற்றங்களைப் பெற்றுத்தான் இக்கால வடிவத்தை அடைந்திருக்கின்றன. எழுத்துகளில் மாற்றங்கள் ஏற்பட எழுதப்படும் பொருள்களின் தன்மை, அழகுணர்ச்சி போன்றவை காரணங்களாக அமைகின்றன. பழங்காலத்தில் கற்பாறை, செப்பேடு, ஓலை போன்றவற்றில் எழுதினர்.

ஓலைகளில் நேர்கோடுகளையும் புள்ளிகளையும் எழுதுவது கடினம் என்பதால் வளைகோடுகளை அதிகமாகப் பயன்படுத்தினர். சில எழுத்துகளுக்கு மேற்பகுதியில் குறுக்குக்கோடு இடப்பட்டது. பின்னர் அவை நிலையான வடிவங்களாக அமைந்துவிட்டன.

எழுத்துகளை வேறுபடுத்திக்காட்ட எழுத்துகளின் மேலும் எழுத்துகளுக்கு பக்கத்திலும் புள்ளிகளைப் பயன்படுத்தினர். நெடிலைக் குறிக்க துணைக்கால், ஐகார உயிர்மெய்யைக் குறிக்க இணைக்கொம்பு, ஒளகார உயிர்மெய்யைக் குறிக்க கொம்புக்கால் ஆகியவை புள்ளிகளுக்குப் பதிலாக தற்காலப் பயன்பாட்டில் உள்ளன.

ஓலைச்சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் புள்ளிபெறும் எழுத்துகளை எழுதும்போது அவை சிதைந்துவிடும் என்பதால் புள்ளி இடாமல் எழுதினர். இதனால் எழுத்துகளை அறிவதில் சிக்கல் இருந்தது. இவ்விடர்பாட்டைக் குறைக்க எழுத்துச் சீர்திருத்தம் வேண்டியதாயிற்று.

வீரமாமுனிவர் தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தத்தைச் செய்தார். எகர, ஒகர வரிசை எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை அவர் களைந்தார். உயிர்மெய் நெடில் எழுத்துகளைக் குறிக்க இரட்டைக் கொம்பு, இரட்டைக் கொம்புடன் கால் சேர்த்து புதிய வரி வடிவத்தை அறிமுகப்படுத்தினார்.

இவரைத்தொடர்ந்து ஈ.வெ.ரா. பெரியார் அவர்களால்ணா , றா, னா ஆகிய எழுத்துகளும் ணை, லை, ளை, னை ஆகிய எழுத்துகளும் உருவாயின. அச்சுக் கோப்பதில் இருந்த இடர்களைக் களைந்தார்.

காலந்தோறும் ஏற்பட்ட இவ்வாறான வரிவடிவ வளர்ச்சி காரணமாகத் தமிழ்மொழியைப் பிற மொழியினரும் எளிதில் கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்மொழி கணினிப் பயன்பாட்டிற்கு ஏற்ற மொழியாகவும் உருவாகியுள்ளது.


இன்னும் பல மாற்றங்களைப் பெற்று தமிழ்மொழி. நாளுக்கு நாள் வளர்ச்சி பெறும் எனக் கூறி என் உரையை முடித்துக் கொள்கிறேன்.
நன்றி!

வகுப்பு-9- தமிழ் - திராவிட மொழிக்குடும்பம் - வினா- விடைகள்.

                                             பாடநூல் வினாக்கள்

குறுவினா

Question 1.
நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது?
Answer:
நான் பேசும் மொழியான தமிழ், தென் திராவிட மொழிகளுள் ஒன்றாக இருக்கிறது.


சிறுவினா

Question 1.
திராவிட மொழிகளின் பிரிவுகள் யாவை? அவற்றுள் உங்களுக்குத் தெரிந்த மொழிகளின் சிறப்பியல்புகளை விளக்குக.
Answer:

  • திராவிட மொழிக்குடும்பம், மொழிகள் பரவிய நில அடிப்படையில் தென்திராவிட மொழிகள், நடுத் திராவிட மொழிகள், வடதிராவிட மொழிகள் என மூன்று பிரிவுகளை உடையது.
  • மலையாள மொழியில் திணை, பால், எண் ஆகியவற்றைக் காட்டும் பாலறி கிளவிகள் இல்லை. தனிச் சொற்களாலேயே ஆண், பெண் பகுப்பை அறிந்து கொள்ள முடியும்.
  • தமிழ்மொழி, திராவிட மொழிகள் சிலவற்றின் தாய்மொழியாகக் கருதப்படுகிறது. இந்தியாவின் தொன்மையான கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழிலேயே அமைந்துள்ளன.

Question 2.
மூன்று என்னும் எண்ணுப் பெயர் பிறதிராவிட மொழிகளில் எவ்வாறு இடம் பெற்றுள்ளது?
Answer:
திராவிட மொழிகளில் எண்ணுப் பெயர்கள் ஒன்றுபோலவே அமைந்துள்ளன. மூன்று என்னும் தமிழ் எண்ணுப் பெயர் பிற திராவிட மொழிகளில் பின்வருமாறு அமையும்.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.1 திராவிட மொழிக்குடும்பம் - 1

நெடுவினா

Question 1.
திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந்துணையாக இருக்கிறது என்பதை
எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
Answer:
முன்னுரை :
திராவிட மொழிகளுள் முதன்மையாக விளங்குவது தமிழ். எத்தகைய காலமாற்றத்திலும் மாறிவரும் புதுமைகளுக்கும் ஈடு கொடுத்து இயங்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு. தமிழாய்ந்த அயல்நாட்டவரும் செம்மொழித் தன்மையைத் தரணியெங்கும் எடுத்துரைத்து வருகின்றனர். திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந்துணையாக இருக்கிறது என்பது பற்றி இக்கட்டுரையில் காண்போம்.


திராவிட மொழிகளின் பொதுப்பண்புகள் :
சொற்களின் இன்றியமையாப் பகுதி வேர்ச்சொல் ஆகும். இதற்கு அடிச்சொல் என்றும் பெயர். திராவிட மொழிகளின் சொற்களை ஆராய்ந்தால், அவை பொதுவான அடிச்சொற்களைக் காணமுடிகிறது.

சான்று :
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.1 திராவிட மொழிக்குடும்பம் - 2

திராவிட மொழிகளின் எண்ணுப் பெயர்களும் ஒன்று போலவே அமைந்துள்ளன.

சான்று :
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.1 திராவிட மொழிக்குடும்பம் - 3

திராவிட மொழிகளுள் பிறமொழித் தாக்கம் மிகவும் குறைந்ததாகக் காணப்படும் மொழி தமிழே ஆகும். தமிழ் மொழி திராவிட மொழிகள் சிலவற்றின் தாய் மொழியாகக் கருதப்படுகிறது. தமிழின் பல அடிச் சொற்களின் ஒலியன்கள், ஒலி இடம் பெயர்தல் என்ற விதிப்படி பிற திராவிட மொழிகளின் வடிவம் மாறியிருக்கின்றன. சுட்டுப்பெயர்களும் மூவிடப் பெயர்களும் பெரும்பாலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைப் பெற்றிருக்கின்றன.

நிறைவுரை :
திராவிட மொழிக்குடும்பத்தின் மூத்த மொழியாகத்திகழ்கின்ற தமிழ், பிற திராவிட மொழிகளை விட ஒப்பியல் ஆய்வுக்குத் துணையாக அமைந்துள்ளது.


கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
இந்திய மொழிக் குடும்ப வகைகள் …………………
அ) 8
ஆ) 18
இ) 6
ஈ) 4
Answer:
ஈ) 4

Question 2.
பொருந்தாததைத் தேர்ந்தெடு.
அ) மூன்று – தமிழ்
ஆ) மூணு – மலையாளம்
இ) மூடு – தெலுங்கு
ஈ) மூரு – துளு
Answer:
ஈ) மூரு – துளு

Question 3.
பொருத்துக.
அ) தெலுங்கு – i) பாரதம்
ஆ) மலையாளம் – ii) கவிராஜ மார்க்கம்
இ) தமிழ் – iii) சங்க இலக்கியம்
ஈ) கன்ன டம் – iv) இராமசரிதம்
1) அ. ii) ஆ. i) இ. iv) ஈ. iii)
2) அ. i) ஆ. iv) இ. iii) ஈ. ii)
3) அ. iv) ஆ. ii) இ. i) ஈ. iii)
4) அ. iii) ஆ. ii) இ. i) ஈ. iv)
Answer:
2) அ.i) ஆ.iv) இ.i) ஈ.ii)


Question 4.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை ஒப்புமைப்படுத்தி ஆய்ந்த முதல்
அறிஞர் ………….
அ) மாக்சுமுல்லர்
ஆ) எமினோ
கால்டுவெல்
ஈ) பிரான்சிஸ் எல்லிஸ்
Answer:
ஈ) பிரான்சிஸ் எல்லிஸ்

Question 5.
இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை ………..க்கும் மேற்பட்டது.
அ) 1200
ஆ) 1300
இ) 800
ஈ) 1000
Answer:
ஆ) 1300

Question 6.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளோடு மால்தோ, தோடா, கோண்டி
முதலான மொழிகள் பற்றிய ஆய்வை மேற்கொண்டவர் ………..
அ) கமில் சுவலபில்
ஆ) கால்டுவெல்
இ) ஹோக்கன்
ஈ) ஆந்திரனோவ்
Answer:
இ) ஹோக்கன்


Question 7.
‘தமிழியன்’ என்று தென்னக மொழிகளை பெயரிட்டு அழைத்தவர் ……….
அ) கால்டுவெல்
ஆ) மாக்ஸ்முல்லர்
இ) ஸ்டென்கனோ
ஈ) ஹோக்கன்
Answer:
ஈ) ஹோக்கன்

நிரப்புக

8. மொழிக் குடும்பத்தின் வகைகள் எத்தனை ………?
Answer:
நான்கு

9. ‘இந்திய நாடு மொழிகளின் காட்சிச் சாலை’ யாகத் திகழ்கிறது என்றவர் …………
Answer:
அகத்தியலிங்கம்

10. ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்னும் நூலின் ஆசிரியர் ……………
Answer:
கால்டுவெல்

11. ‘திராவிடம்’ என்ற சொல்லை முதலில் குறிப்பிட்டவர் ………..
Answer:
குமரிலப்பட்டர்

12. திராவிட மொழிகள் மொத்தம் ……….
Answer:
28


13. தமிழ்மொழியின் பழமையான இலக்கண நூல் எது?
Answer:
தொல்காப்பியம்

14. ‘லீலாதிலகம்’ – எம்மொழியின் பழமையான இலக்கண நூல்?
Answer:
மலையாளம்


குறுவினா

Question 1.
மொழிக்குடும்பம் எவ்வாறு பிரிக்கப்படுகிறது?
Answer:
உலகத்திலுள்ள மொழிகளின் பிறப்பு, தொடர்பு, அமைப்பு, உறவு ஆகியவற்றின் அடிப்படையில்
மொழிக்குடும்பம் பிரிக்கப்படுகிறது.

Question 2.
திராவிட மொழிகள் பொதுவான அடிச்சொல் பெற்றிருப்பதை விளக்கு.
Answer:
சொற்களின் இன்றியமையாப் பகுதி அடிச்சொல் அல்லது வேர்ச்சொல் எனப்படும். திராவிட மொழிகள் பொதுவான அடிச்சொல் பெற்றுள்ளன.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.1 திராவிட மொழிக்குடும்பம் - 4

Question 3.
தென்திராவிட மொழிகள் யாவை?
Answer:
தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு, கோத்தா, தோடா, கொரகா, இருளா ஆகியவை தென் திராவிட மொழிகள்.