தலைமை ஆசிரியர் தலைமை உரையில் இலக்கியத்தில் பாடுபொருள் எவ்வாறெல்லாம் காலத்திற்கேற்றாற் போல் மாறி வந்திருக்கிறது என்பதை எடுத்துக்காட்டிப் பேசினார்.

சிறப்புச் சொற்பொழிவாற்றிய சிறப்பு விருந்தினர் அவர்கள், ஒன்பான் சுவைகளை விளக்கி நகைச்சுவை உணர்வோடு “இலக்கியத்தில் இன்பச்சுவை” எனும் தலைப்பில் இலக்கிய விருந்து படைத்தார்.

நிறைவாக, இலக்கியமன்றச் செயலர் 12ஆம் வகுப்பு மாணவி அன்புச் செல்வி நன்றியுரை ஆற்றினார்.