இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Monday 16 October 2023

வகுப்பு: 8 இருப்பிடச் சான்று வேண்டிக் கடிதம்

 இருப்பிடச் சான்று வேண்டி வட்டாட்சியருக்கு விண்ணப்பம் எழுதுக.

அனுப்புநர்
சா.முகிலா,
த/பெ. ஆ. சங்கர்
34, குறிஞ்சி நகர்,

கடையநல்லூர்– 627751.


பெறுநர்
உயர்திரு. வட்டாட்சியர் அவர்கள்,
வட்டாட்சியர் அலுவலகம்,
கடையநல்லூர்.


மதிப்புக்குரிய அய்யா,


       பொருள் : இருப்பிடச் சான்றிதழ் வேண்டுதல் சார்பாக.

 வணக்கம்.

      கடையநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கின்றேன். 34, குறிஞ்சி நகர், கடையநல்லூர் – 627751 என்ற முகவரியில் பத்து ஆண்டுகளாக நாங்கள் வசித்து வருகின்றோம். அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இருப்பிடச் சான்றிதழ் தேவைப்படுகின்றது. இத்துடன் குடும்ப அட்டை நகலும் ஆதார் அட்டை நகலும் இணைத்துள்ளேன். ஆகவே, எனக்கு இருப்பிடச் சான்றிதழ் வழங்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி!

இடம் : கடையநல்லூர்
நாள் : 25.10.2023

இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
சா. முகிலா.

உறைமேல் முகவரி:
பெறுநர்


உயர்திரு. வட்டாட்சியர் அவர்கள்,
வட்டாட்சியர் அலுவலகம்,

கடையநல்லூர்.

No comments:

Post a Comment