இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Wednesday 15 November 2023

வகுப்பு. 8 மழைச் சோறு - வினா விடைகள்

 1 மழைச்சோறு பாடலில் உழவர் படும் வேதனை எவ்வாறு கூறப்படுகிறது?

விடை:
* செடிகள், பயிர்கள் மழையில்லாமல் வாடிப்போனது. 
*பெற்றெடுத்த குழந்தைகளின் பசியைத் தீர்க்க முடியவில்லை .
*கலப்பை பிடிப்பவரின் கை சோர்ந்து விட்டது, 
*ஏற்றம் இறைப்பவரின் மனம் தவிக்கிறது என்றும் இதற்குக் காரணம் மழை இல்லாமையே இன்று உழவர் வேதனைப் படுகின்றனர்.

2.மக்கள் ஊரைவிட்டு வெளியேறக் காரணம் என்ன?

விடை:    *மழை இல்லாததால் உழவுத் தொழில் செய்ய முடியவில்லை. எனவே மக்கள் ஊரை விட்டு வெளியேறுகின்றனர்.

சிறுவினா

 1. கோலம் கரையாத நிலையை மழைச்சோறு பாடல் எவ்வாறு விளக்குகிறது?
விடை:

  • வாளியில் கரைத்த மாவால் வாசலில் கோலம் போட்டனர்.
  • இந்தக் கோலத்தைக் கரைக்க மழை வரவில்லை !
  • பானையில் மாவைக் கரைத்து, பாதை எல்லாம் கோலம் போட்டனர்.
  • அந்தக் கோலம் கரைக்கவும் மழை வரவில்லை .
  •  2.மழையின்மையால் செடிகள் வாடிய நிலையை விளக்குக.
  • விடை:

    • கல் இல்லாத காட்டில் கடலைச் செடி நட்டு வளர்த்தார்கள். அதற்கும் மழை பெய்யவில்லை.
    • முள் இல்லாத காட்டில் முருங்கைச் செடி நட்டு வளர்த்தார்கள். அதற்கும் மழை வரவில்லை .
    • கருவேலங்காடும் மழையில்லாமல் பூக்கவில்லை.
    • மழை இல்லாததால் காட்டு மல்லியும் பூக்கவில்லை.

     3.மழைச்சோறு எடுத்தபின் எவ்வாறு மழை பெய்தது?
    Answer:

    • மழைச் சோறு எடுத்தபின், பேய் மழையாக ஊசிபோல கால் இறங்கி உலகமெல்லாம் பெய்கிறது.
    • சிட்டுப் போல மின்னி மின்னி ஊரெங்கும் பெய்கிறது.
    • ஊரெங்கும் செல்ல மழை பெய்கிறது.

No comments:

Post a Comment