இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Tuesday 10 October 2023

வகுப்பு 8 -இசைக்கருவிகள்



 உடுக்கை


.

 


உடுக்கை என்பது எடை சுருங்கிய ஒரு கைப்பறை நாட்டுப்புறச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். கிராமப்புற கோயில்களிலும் முக்கியமாக மாரியம்மன் கோவில் சமயச் சடங்குகளிலும் இது ஒலிக்கப்படும். தோல் இசைக்கருவியான இதைக் கைகளைக் கொண்டு இசைக்கலாம்.


குடமுழா

குட முழா இசைக்கப்படும் விதம்.
 



 குழல் :

 காடுகளில் வளரும் மூங்கிலில் வண்டுகள் துளையிடும் அவற்றின் வழியாகக் காற்று வீசும்போது இன்னிசை எழும்பும் இதனைக் கேட்டு மகிழ்ந்த நம் முன்னோர் அமைத்துக் கொண்டவையே குழல்கள் ஆகும்.





ஏழு துளைகளை உடையதாக இருக்கும்.சுமார் 20 விரல் நீளம் உடையதாக இருக்கும்.

கொம்புக் கருவி







சங்கு கருவி

 இது ஒரு இயற்கைக் கருவி

வலம்புரிச் சங்கு இடம்புரிச் சங்கு என சங்கு பல வகைப்படும்.

சங்கின் ஒளியைச் சங்க நாதம் என்பர்.

சங்க இலக்கியங்களில் பணிலம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


சாலரா

  இது பித்தளை அல்லது வெண்கலத்தால் செய்யப்பட்டு இருக்கும் அதன் உட்புறம் குவிந்து இருக்கும் இதனை ஒன்றோடு ஒன்று பொருத்தியும் விளிம்பின் மீது தட்டியும் தாளத்தின் தேவைக்கு ஏற்ப இசைப்பார்.

 இதனைப் பாண்டில் எனவும் அழைப்பர்.


சேகண்டி

   வட்ட வடிவமான மணி வகையைச் சார்ந்தது சேகண்டி. இதனைக் குச்சியாலோ அல்லது இரும்பு துண்டாலோ அடித்து ஒலி எழுப்புக இதனை சேமங்கலம் என்றும் அழைப்பர்.



 



No comments:

Post a Comment