1➤ சார்பெழுத்துக்கள் மொத்தம் எத்தனை வகைப்படும்?
,=> 10
2➤ அளபெடுத்தல் என்பது ........ எனப்படும்
,=> நீண்டு ஒலித்தல்
3➤ உயிரளபெடை எத்தனை வகைப்படும் ?
,=> மூன்று
4➤ செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய நெட் எழுத்துக்கள் அளபெடுப்பது
,=> செய்யுளிசை அளபெடை எனப்படும்.
5➤ செய்யுளிசை அளபெடையின் மற்றொரு பெயர் ........
,=> இசைநிறை அளபெடை
6➤ ஓஒதல் , உறாஅர்க்கு, படாஅ .... பயின்று வரும் அளபெடை
,=> செய்யுளிசை அளபெடை
7➤ செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக குறில் நெடிலாகி அளவெடுப்பது
,=> இன்னிசை அளபெடையாகும்.
8➤ இன்னிசை அளபெடைக்கு எடுத்துக்காட்டு?
,=> கெடுப்பதூஉம் , எடுப்பதூஉம்
9➤ செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்ச சொல்லாக திரிந்து அளவெடுப்பது
,=> சொல்லிசை அளபெடை
10➤ சொல்லிசை அளபெடைக்கு எடுத்துக்காட்டு .........
,=> உரனசை இ, வரனசை இ
11➤ நசை - என்ற சொல்லின் பொருள்
,=> விருப்பம்
12➤ செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய ஒற்றெழுத்துக்கள் அளவு எடுப்பது
,=> ஒற்றளபெடை எனப்படும்
13➤ ஒற்றளபெடைக்கு எடுத்துக்காட்டு
,=> எங்ங்கிறைவன், எஃஃ கிலங்கிய
14➤ ஓர் எழுத்து தனித்தோ ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்கள் சேர்ந்து வந்து பொருளை உணர்த்துமானால் அது ........ எனப்படும்
,=> சொல்
15➤ சொல்லின் வேறு பெயர்கள்
,=> பதம், மொழி ,கிளவி
16➤ பதம் எத்தனை வகைப்படும்?
,=> இரண்டு வகைப்படும். (பகு, பகா)
17➤ பிரித்தால் பொருள் தராத சொல் .......
,=> பகாப்பதம் எனப்படும் ( மரம், உண், பிற , சால)
18➤ பிரிக்கக் கூடியதும் பிரித்தால் பொருள் தருவதுமான சொல் ..........
,=> பகுபதம்
19➤ பகுபதம் எத்தனை வகைப்படும்?
,=> 2 வகைப்படும். (பெயர்ப் பகுபதம், வினைப் பகுபதம்)
20➤ பெயர் பகுபதத்திற்கு எடுத்துக்காட்டு....
,=> வேலன் (வேல்+ அன் )
21➤ வினைப் பகுபதத்திற்கு எடுத்துக்காட்டு?
,=> செய்தான்.. (செய் + த் + ஆன்)
22➤ பகுபத உறுப்புக்கள் எத்தனை வகைப்படும் அவை யாவை?
,=> 6வகைப்படும். (பகுதி, விகுதி ,இடைநிலை, சந்தி,சாரியை ,விகாரம்
23➤ பகுதியை .....என்றும் அழைப்பர்
,=> முதனிலை, (வினைச்சொல்லில் ஏவலாக அமையும்)
24➤ விகுதி என்பது சொல்லின் .........நிற்கும்
,=> இறுதியில் (கடைநிலை) ( திணை, பால், எண், இடம் ஆகியவற்றைக் காட்டும்)
25➤ பெயரெச்ச விகுதிகள் எது ?
,=> அ, உம்
26➤ வினையெச்ச விகுதிகள் எது ?
,=> உ , இ
27➤ வியங்கோள் வினைமுற்று விகுதி எது ?
,=> க, இய, இயர்
28➤ தொழிற்பெயர் விகுதி எது ?
,=> தல், அல், ஐ, கை, சி, பு
29➤ பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வருவது ........
,=> இடைநிலை ( காலம் காட்டும் இடைநிலை என்று அழைப்பர்)
30➤ நிகழ்கால இடைநிலைகள் யாவை?
,=> கிறு, கின்று, ஆநின்று
31➤ இறந்த கால இடைநிலைகள் யாவை?
,=> ர், ட், ற், இன்
32➤ எதிர்கால இடைநிலைகள் யாவை?
,=> ப், வ்
33➤ எதிர்மறை இடைநிலைகள் யாவை ?
,=> இல், அல், ஆ
34➤ பெயர் இடைநிலைகள் யாவை?
,=> ஞ் , ந், வ், ச், த் .
35➤ பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வருவது
,=> சந்தி
36➤ இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வருவது ......
,=> சாரியை
37➤ உடம்படுமெய் ......
,=> ய், வ்
38➤ பகுபத உறுப்புகளில் பகுதியிலும் சந்தியிலும் ஏற்படும் வடிவ மாற்றமே.......
,=> விகாரம் (இது தனி உறுப்பு அன்று)
39➤ பகுபத உறுப்புகளில் அடங்காமல் பகுதிக்கும் விகுதிக்கும் நடுவில் காலத்தை உணர்த்தாமல் வரும் மெய்யெழுத்து ....... ஆகும்
,=> எழுத்துப் பேறு எனப்படும்
40➤ எழுத்துப்பேறில் பெரும்பாலும் வரும் எழுத்து .......
,=> த்
41➤ சாரியை இடத்தில் (த் ) வந்தால் .....
,=> அது எழுத்துப்பேறு எனப்படும்
42➤ எழுத்துப் பேறுக்கு எடுத்துக்காட்டு......
=> செய்யாதே... ( செய் + ய் + ஆ + த் + ஏ ) த் என்பது எழுத்துப் பேறு
No comments:
Post a Comment