1➤ நெறி என்று சொல்லின் பொருள்
,=> வழி
2➤ எங்கள் தமிழ் - நூலை எழுதியவர்
,=> நாமக்கல் கவிஞர் ராமலிங்கனார்
3➤ ஒன்றல்ல இரண்டல்ல - நூலை எழுதியவர்
,=> உடுமலை நாராயணகவி
4➤ பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம்
,=> பரணி
5➤ வானில் ........கூட்டம் திரண்டால் மழை பொழியும்
,=> முகில்
6➤ ஒன்றல்ல இரண்டல்ல - பாடலில் இடம்பெற்றுள்ள வள்ளல்கள் ...... ........
,=> வள்ளல் வேள்பாரி, குமண வள்ளல்
முல்லைக்கு தேர்ந்த பாரி, புலவரின் சொல்லுக்காக தன் தலையைத் தந்த குமண வள்ளல்
முல்லைக்கு தேர்ந்த பாரி, புலவரின் சொல்லுக்காக தன் தலையைத் தந்த குமண வள்ளல்
7➤ தமிழுக்கு வளம் சேர்க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர் கூறுவது
,=> 1 பரணி 2. பரிபாடல், கலம்பக நூல்கள் எட்டுத்தொகை, 3.திருக்குறள் 4.சங்க இலக்கியங்கள்
8➤ வெள்ளை மயிர் பிடரி குதிரைகளை எல்லாம் புலவர்களுக்குத் தந்தவன்
,=> காரி மன்னன். - சிறுபாணாற்றுப்படை - நல்லூர் நத்தத்தனார்
9➤ பகுத்தறிவு கவிராயர் எனப் புகழப்படுபவர் ........
,=> உடுமலை நாராயணகவி
10➤ வான் புகழ் கொண்ட நூல் -----என அழைக்கப்படுவது
,=> திருக்குறள்
11➤ அகம் ,புறம் ஆகியவற்றை மெய்ப்பொருளாகக் கொண்டு பாடப்பட்டது
,=> சங்க இலக்கியங்கள்
12➤ தமிழ்த் திரைப்படப் பாடல் ஆசிரியராகவும் நாடக எழுத்தாளராகவும் புகழ்பெற்றவர் .......
,=> உடுமலை நாராயணகவி
13➤ முல்லைக்குத் தேர் ஈந்தவர் .....
,=> வள்ளல் வேள் பாரி
14➤ நாட்டுப்புற இசையின் எளிமையைக் கையாண்டு கவிதைகள் எழுதியவர் .....
,=> உடுமலை நாராயணகவி
15➤ அற்புதம் என்ற சொல்லின் பொருள் ......
,=> வியப்பு
16➤ புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தவன்
,=> குமண வள்ளல்
17➤ கடையேழு வள்ளல்கள் எத்தனை பேர்?
,=> 7
பேகன், பாரி, காரி, ஆய் அண்டிறன், அதியமான், நள்ளி, ஓரி,
பேகன், பாரி, காரி, ஆய் அண்டிறன், அதியமான், நள்ளி, ஓரி,
18➤ மயிலுக்குப் போர்வை தந்தவன்.......
,=> பேகன்
ஆவியர் குடியின் தலைவன், பழனி மலையைச் சுற்றி ஆட்சி புரிந்தவன்
ஆவியர் குடியின் தலைவன், பழனி மலையைச் சுற்றி ஆட்சி புரிந்தவன்
19➤ பாரி மன்னன் - சிறு குறிப்பு
,=> பறம்பு மலையை ஆண்டவன் , கபிலரின் நண்பன், ஒளவையை ஆதரித்தவன்,
நாகமலையில் உள்ள முல்லைக்குத் தேர் ஈந்தவன்
நாகமலையில் உள்ள முல்லைக்குத் தேர் ஈந்தவன்
20➤ காரி மன்னன் - சிறு குறிப்பு தருக
,=> 1. வாள் வீச்சில் பகைவர்களை வெல்பவன் 2. வெள்ளை மயிர் பிடரி குதிரைகளை புலவர்களுக்கு வழங்கியவன்.
சிறுபாணாற்றுப்படை -நல்லூர் நத்தத்தனாரால் சிறப்பிக்கப்படுகிறது -
சிறுபாணாற்றுப்படை -நல்லூர் நத்தத்தனாரால் சிறப்பிக்கப்படுகிறது -
21➤ ஆய் அண்டிறன் - சிறு குறிப்பு தருக
,=> 1. பொதிய மலைப்பகுதியை ஆண்டவன். 2. கையில் வில்லும் அம்பும் கொண்டு திரிபவன் 3. நாகத்தின் உடையை புலவர்களுக்குக் கொடுத்தவன்.
22➤ "தென் தோள் ஆய நன்மொழி ஆய்" எனப் புகழப்பெற்றவன்
,=> ஆய் அண்டிறன்
23➤ நெல்லிக்கனியை அவ்வையாருக்கு வழங்கிய மன்னன் .....
,=> அதியமான்
24➤ அதியமான் சிறுகுறிப்பு தருக
,=> 1. தகடூரை ஆண்டவன் 2.வேல் வீச்சில் வல்லவன் 3அவ்வையாரை நண்பராகக் கொண்டவன்
25➤ மக்களுக்கும் புலவர்களுக்கும் வேண்டிய பொருளைக் கொடுத்தவன் ........
,=> நள்ளி
26➤ நள்ளி மன்னன் -சிறு குறிப்பு தருக
,=> நெடுங்கோடு மலைமுகட்டை ஆட்சி செய்தவன். 2.ஊட்டி மக்களின் தலைவன்
27➤ மலைமான் திருமுடிக்காரியை வென்றவன் யார் ?
,=> வல்வில் ஓரி
வென்ற குறும்பறை நாட்டை பாணர்களுக்கு தந்தவன். (சிறுபாணாற்றுப்படை)
வென்ற குறும்பறை நாட்டை பாணர்களுக்கு தந்தவன். (சிறுபாணாற்றுப்படை)
28➤ குமண வள்ளல் எந்தப் புலவர்க்கு தன் தலையைப் பரிசாகத் தர முன்வந்தான்
,=> பெருஞ்சித்திரனார் என்னும் புலவர்க்கு
29➤ மொழியின் முதல் நிலை..... மற்றும் ......
,=> பேசுதல், கேட்டல்
30➤ ஒலியின் வரி வடிவம் ..... ஆகும்
,=> எழுத்து
31➤ பேச்சு மொழியை ..... வழக்கு என்றும் கூறுவர்.
,=> உலக
32➤ ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்கள் ....... எனப்படும்
,=> வட்டார மொழி
33➤ பேச்சு மொழி ....... வழக்கு
,=> உலக
34➤ எழுத்து மொழி........ வழக்கு
,=> இலக்கிய
35➤ கிளை மொழிகள் உருவாகக் காரணம் .........
,=> வாழும் இடத்தின் இட அமைப்பு, இயற்கைத் தடைகள், மக்களின் தொடர்பு குறைதல்
36➤ இலக்கியங்கள் காலம் கடந்தும் அழியாமல் இருப்பதற்கு காரணம் .....
,=> எழுத்து வடிவம்
37➤ ஒரு மொழி உயிரோடு வாழ்வதற்கு .......தேவைப்படுகிறது.
,=> பேச்சு மொழி
38➤ வேறு வகை மொழி நிலைகள் பற்றி கூறியவர் யார் ?
,=> மு. வரதராஜனார்
39➤ இரட்டை வழக்கு மொழி என்றால் என்ன?
,=> பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால் அது இரட்டை வழக்கு மொழி எனப்படும்.
40➤ தமிழ் இரட்டை மொழி வழக்கு காரணம் ......
,=> பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு உண்டு.
41➤ சிறு சிறு தொடர்களாக வட்டாரப் பேச்சு வழக்கில் வருபவை ......
,=> சொலவடைகள்
42➤ ....... உடைஞ்சு போன வெள்ளம் அழுதாலும் வராது
,=> அணை
43➤ விளைச்சலுக்கும் .......க்கும் சென்மப் பகை
,=> வெள்ளாடு
44➤ ஆயிரம் ............நெல்லுக்கு ஒரு அந்து பூச்சி போதும்.
,=> கலம்
45➤ குற்றியலுகரம் - பிரித்து எழுதுக
,=> குறுமை + இயல் + உகரம்
46➤ குற்றியலிகரம் - பிரித்து எழுதுக
,=> குறுமை + இயல் + இகரம்
47➤ தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம் .......
,=> குற்றியலுகரம்
ஒரு மாத்திரையில் இருந்து அரை மாத்திரையாக
ஒரு மாத்திரையில் இருந்து அரை மாத்திரையாக
48➤ தனக்குரிய ஒரு மாத்திரை அளவில் இருந்து குறுகி ஒலிக்கும் இகரம்
,=> குற்றியலிகரம்
49➤ குற்றியலுகரம் ....... வகைப்படும்
,=> ஆறு
50➤ குறில் எழுத்துக்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் எழுத்துச் சாரியை ------ ஆகும்
=> கரம்
No comments:
Post a Comment