செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Wednesday, 19 November 2025

வகுப்பு - 7 - இயல் 2 கூடுதல் மீட்டறி வினாக்கள்

1➤ ஒவ்வொரு எழுத்துக்கும் அதை ஒலிப்பதற்குரிய கால அளவு.........
=> மாத்திரை
,
2➤ தமக்குரிய கால அளவை விட குறைந்து ஒலிக்கும் எழுத்துக்கள்....... எனப்படும்
=> குறுக்கங்கள்
,
3➤ குறுக்கங்கள் எத்தனை வகைப்படும்?
=> 4
ஐகாரக்குறுக்கம் 2.ஔகாரக் குறுக்கம் 3.மகர குறுக்கம் 4. ஆய்தக் குறுக்கம்
,
4➤ இரண்டு மாத்திரையில் இருந்து குறுகி ஒலிக்கும் ஐகாரம் ..... எனப்படும்
=> ஐகார குறுக்கம்
,
5➤ ஐகாரக் குறுக்கம் எங்கு எங்கு குறுகும் ?
=> மொழிக்கு முதலில் ,இடையில் ,கடையில்
மொழிக்கு முதலில் 1 1/2 மாத்திரை, இடையிலும் கடையிலும் 1 மாத்திரை
,
6➤ ஒள என்னும் எழுத்து மொழிக்கு முதலில் வரும் போது எத்தனை மாத்திரையாகக் குறைந்து ஒலிக்கும்?
=> 11/2 மாத்திரையாக
எ.கா. வெளவால், ஒளவையார் (குறிப்பு மொழிக்கு இடையிலும் கடையிலும் வராது)
,
7➤ ஆயுத எழுத்து தனக்குரிய அரை மாத்திரை அளவில் இருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பது
=> ஆய்தக் குறுக்கம் எனப்படும்.
எ.கா முள் + தீது = முஃடீது , கல்+தீது = கஃ றீது. , குறிப்பு :
,
8➤ வேட்கை என்னும் சொல்லில் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரையின் அளவு .......
=> ஒரு மாத்திரை
,
9➤ சொல்லின் முதலில் மட்டுமே இடம்பெறும் குறுக்கம் ....
=> ஔகாரக் குறுக்கம்
,
10➤ மகரக் குறுக்கத்திற்கு இரண்டு எடுத்துக்காட்டு......
=> போலும் - போனம், மருளும் - மருணம்
,
11➤ சமையல் - என்ற சொல்லில் காணப்படும் குறுக்கம்.
=> ஐகாரக் குறுக்கம்
மொழிக்கு இடையில்
,
12➤ மகரம் எங்கு எங்கு குறுகும் ?
=> 1 ன், ண் என்ற மெய்யெழுத்திற்குப் பின் மகரம் வந்தால் 2. மகரத்தைத் தொடர்ந்து வ் - என்ற மெய் வந்தால் குறுகும்.குறுகும். 2 -
எதா 1 . போனம், மருணம் எகா 2. வரும் + வண்டி
,
13➤ எழுத்திலும் பேச்சிலும் சொற்களை பயன்படுத்தும் முறை...... எனப்படும்
=> வழக்கு
,
14➤ வழக்கு எத்தனை வகைப்படும்?
=> இரண்டு வகைப்படும்
1. இயல்பு வழக்கு 2. தகுதி வழக்கு
,
15➤ இயல்பு வழக்கு என்றால் என்ன ?
=> ஒரு பொருளை அதற்கே உரிய இயல்பான சொற்களால் கூப்பிடுவது
,
16➤ இயல்பு வழக்கின் வகைகள் எத்தனை ? அவை யாவை?
=> மூன்று வகைப்படும்
1. இலக்கணம் உடையது 2 இலக்கணப் போலி 3.ம௹ உ
,
17➤ இலக்கணம் உடையது என்றால் என்ன ?
=> இலக்கண நெறி மாறாமல் முறையாக அமைந்த சொல் இலக்கணம் உடையது எனப்படும்
எடுத்துக்காட்டு : நிலம், மரம், அருவி .......
,
18➤ இலக்கணப் போலி என்றால் என்ன ?
=> இலக்கண முறைப்படி அமையாவிடினும் இலக்கணம் உடையவை போலவே ஏற்றுக்கொள்ளப்படும் சொற்கள் இலக்கணப் போலி எனப்படும்
புறநகர் - நகர்ப்புறம் தசை - சதை
,
19➤ இலக்கணப் போலி எவற்றைக் குறிக்கும் ....
=> சொற்களின் முன் பின் மாறி வருவதை
தசை -> சதை கால்வாய் - வாய்க்கால்
,
20➤ மரூஉ - என்றால் என்ன ?
=> இலக்கண நெறியில் இருந்து பிறழ்ந்து சிதைந்து வழங்கும் சொற்கள் ..... எனப்படும்
மரூஉ எனப்படும்
,
21➤ ம௹ உ - சொற்களுக்கு எடுத்துக்காட்டுத் தருக.
=> தஞ்சாவூர் - தஞ்சை , கும்பகோணம் - குடந்தை
,
22➤ தகுதி வழக்கு என்றால் என்ன ?
=> ஏதேனும் ஒரு காரணத்தினால் பிறரிடம் சொல்லத் தகுதியற்ற சொற்களைத் தகுதியான வேறு சொற்களால் குறிப்பிடுவது தகுதி வழக்கு எனப்படும்
,
23➤ தகுதி வழக்கின் வகைகள் யாவை?
=> மூன்று வகைப்படும்.
இடக்கரடக்கல் 2 மங்கலம் 3. குழூஉக்குறி
,
24➤ இடக்கரடக்கல் என்றால் என்ன ?
=> பிறரிடம் வெளிப்படையாகச் யார்கிட்ட இருக்கு சொல்லத் தகாத சொற்களைத் தகுதி உடைய வேறு சொற்களால் கூறுவது.
எ.கா . மலம் கழுவினான் - என்பதை கால் கழுவினான் எனக் குறிப்பிடுவது.
,
25➤ மங்கலம் என்றால் என்ன ?
=> மங்கலம் இல்லாத சொற்களைக் மங்கலமான வேறு சொற்களால் குறிப்பிடுவது.
எ.கா செத்தார் - என்பதை துஞ்சினார் என்பது
,
26➤ குழூஉக் குறி என்றால் என்ன ?
=> ஒரு குழுவினர் ஒரு பொருள் அல்லது செயலைக் குறிக்கத் தமக்குள் பயன்படுத்திக் கொள்ளும் சொற்கள் குழு உக் குறி எனப்படும்
,
27➤ குழு உக் குறிக்கு எடுத்துக்காட்டு
=> பொன்னைப் பறி என்றல்
,
28➤ போலி என்றால் என்ன ?
=> சொல்லின் முதலிலோ இடையிலோ கடையிலோ இறுதியாக இருக்கவேண்டிய ஓர் எழுத்துக்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து இடம்பெற்று அதே பொருளைத் தருவது போலி எனப்படும்
,
29➤ போலி எத்தனை வகைப்படும் ?
=> மூன்று வகைப்படும்
முதற்போலி 2 இடைப்போலி 3. கடைப் போலி
,
30➤ முதற் போலி என்றால் என்ன ?
=> .சொல்லின் முதலில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறு ஒர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது முதற்போலி ஆகும்
எகா பசல் - பைசல் மஞ்சு - மைஞ்சு
,
31➤ இடைப்போலி என்றால் என்ன ?
=> சொல்லின் இடையில் இருக்க வேண்டிய எழுத்திற்கு பதிலாக வேறு சொல் அமைந்து அதே பொருளைத் தருவது.
எ.கா . அமச்சு - அமைச்சு இலஞ்சி - இலைஞ்சி
,
32➤ கடைப் போலி என்றால் என்ன ?
=> செல்லில் இறுதியில் இருக்க வேண்டிய இடத்திற்கு பதிலாக வேறு ஒரு சொல் இருந்து அதே பொருளைத் . தருவது கடைப்பொருள் எனப்படும்
அகம் - அகன் எனவும் நிலம் - நிலன் எனவும் மாற்றிக் கூறுவது
,
33➤ ஒரு சொல்லில் இயல்பாக அமைந்த எழுத்துக்களுக்குப் பதிலாக எழுத்துக்கள் அனைத்து வேறுபட்டாலும் குரல் மாறாமல் இருப்பது ........எனப்படும்
=> முற்றுப்போலி எனப்படும்
எ.கா ஐந்து - என்பது அஞ்சு என மாறி ஒலிப்பது
,
34➤ முதற்போலிக்கு சில எடுத்துக்காட்டுகள் தருக
=> பசல் - பைசல் மஞ்சு - மைஞ்சு மயல் - மையல் தயல் - தையல் நண்டு - ஞண்டு நமன் - ஞமன்
,
35➤ இடைப் போலிக்கு சில எடுத்துக்காட்டுகள் தருக
=> அமச்சு - அமைச்சு இலஞ்சி - இலைஞ்சி அரயர் - அரையர் தலமை - தலைமை கிழமை - கிழைமை பழமை - பழைமை
,
36➤ கடைப்போலிக்கு சில எடுத்துக்காட்டுகள் தருக.
=> அகம் - அகன் நிலம் - நிலன் முகம், - முகன் பந்தல் - பந்தர் கலம் - கலன் . புலம் - புலன் குடல் - குடர்
,
37➤ வாய்மை எனப்படுவது ......
=> தீங்கு தராத சொற்களைப் பேசுதல்
,
38➤ ........ செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்
=> பொறாமை உள்ளவன்
,
39➤ உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவன் யார் ?
=> பொய் இல்லாமல் வாழ்பவன்
,
40➤ அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி... இப்பாடலில் குறிப்பிடப்படும் இலக்கிய நூல் எது ?
=> திருக்குறள்
,
41➤ சிறந்த அரசின் செயலாக வள்ளுவர் எத்தனை செயல்களைக் குறிப்பிடுகிறார்?
=> நான்கு செயல்கள்
1.பொருள் வரும் வழிகளை அறிதல் 2-சேர்த்தல் 3.பாதுகாத்தல் 4.பிரித்து செலவு செய்தல்
,
42➤ செந்நாப் போதா என்று குறிப்பிடப்படுபவர்
=> திருவள்ளுவர்
,
43➤ அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள் எத்தனை?
=> 38
,
44➤ பொருட்பாலில் உள்ள அதிகாரங்கள் எத்தனை ?
=> 70
,
45➤ இன்பத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள் எத்தனை ?
=> 25
,
46➤ சான்றோர்கள் ஆராயப்படுபவை என வள்ளுவர் குறிப்பிடுவது
=> பொறாமை கொண்டவர்களுடைய செல்வமும் பொறாமை இல்லாதவருடைய வறுமையும்
,
47➤ திருக்குறளுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் யாவை?
=> முப்பால் |தெய்வ நூல்,பொய்யாமொழி
,
48➤ யாருடைய வாழ்வில் துன்பமில்லை என வள்ளுவர் குறிப்பிடுகிறார்?
=> தன்னுடைய குற்றத்தை காண்பவருடைய வாழ்வில் துன்பமில்லை
,
49➤ வாய்மை எனப்படுவது .....
=> ஒருபோதும் தீங்கு தராத சொற்கள்
,
50➤ அழுக்காறு என்ற சொல்லின் பொருள் ..........
=> பொறாமை இல்லாத

No comments:

Post a Comment