செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Friday, 12 September 2025

வகுப்பு - 9 இயல் 2 மீட்டறி வினாக்கள்

1➤ பல வகையில் பயன்படும் நீர்த்தேக்கம்
=> இலஞ்சி
,
2➤ உலகச் சுற்றுச்சூழல் நாள் கொண்டாடப்படுவது
=> ஜூன் 5
,
3➤ மக்கள் பருகு நீர் உள்ள நீர் நிலைக்குப் பெயர்
=> ஊருணி
,
4➤ மணப்பங்கான இடத்தில் தோண்டிச் சுடுமண் வளையம் இட்ட கிணறு ....
=> உறைக்கிணறு
,
5➤ முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கட்டியவர்
=> பென்னிகுவிக்
,
6➤ நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவை - யார் கூற்று
=> தோ. பரமசிவன்
,
7➤ தெளலிஸ்வரம் அணை கட்டப்பட்ட ஆண்டு ?
=> 1873
,
8➤ இந்திய நீர் பாசனத்தின் தந்தை
=> ஆர்தர் காட்டன்
,
9➤ சனி நீராடு என்பது ...... உனக்கு.
=> அவ்வை
,
10➤ மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் - என்று பாடியவர்
=> இளங்கோவடிகள்
,
11➤ தெய்வச் சிலைகள் குளிக்க வைப்பது.....என்பர்
=> திருமஞ்சனம் ஆடல்
,
12➤ குள்ளக் குளிரக் குடைந்து நீராடி - என்று கூறியவர்
=> ஆண்டாள்
,
13➤ கல்லணையின் மற்றொரு பெயர் ......
=> கிராண்ட் அணைக்கட்டு
,
14➤ கிராண்ட் அணைக்கட்டை நிறுவியவர் ......
=> சர் ஆர்தர் காட்டன்
,
15➤ சர் ஆர்தர் காட்டன் கல்லணைக்கு ...... என்று பெயரைச் சொல்லினார்
=> கிராண்ட் அணைக்கட்டு.
,
16➤ தௌலீஸ்வரம் அணைக்கட்டு......... ஆற்றங்கரையின் மேல் கட்டப்பட்டுள்ளது
=> கோதாவரி
,
17➤ டௌலிஸ்வரம் அணைக்கட்டு எந்த ஆண்டு கட்டப்பட்டது !
=> 1873
,
18➤ கல்லணையின் கட்டுமான உத்தியைக் கொண்டு கட்டப்பட்ட அணை எது ?
=> தெளலிஸ்வரம் அணைக்கட்டு
,
19➤ நில மட்டத்திற்கு மேல் கொப்பளித்து வரும் ஊற்று
=> குமுளி ஊற்று
,
20➤ விதைத்த விதை மழையால் ஆயிரமாக பெருகுகிறது எனக் கூறியவர்
=> மாங்குடி மருதனார்
,
21➤ முந்நீர் விரித்து எழுதுக
=> மூன்று + நீர் ( ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர்)
,
22➤ பாண்டி மண்டலத்து நிலப்பகுதியில் ஏரியைக்...... என்ப
=> கண்மாய்
,
23➤ காவிரி பாசனப் பகுதிக்கு தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் ......
=> சர் ஆர்தர் காட்டன் (1829)
,
24➤ நம்பியாண்டார் நம்பி எழுதிய நூல்....
=> திருத்தொண்டர் திருவந்தாதி
,
25➤ அடியவர் பெருமையை ஓர் அடியில் கூறும் நூல்..........
=> திருத்தொண்டர் தொகை
,
26➤ சேக்கிழார் காலம் .......நூற்றாண்டு
=> 12
,
27➤ எருமைக்கடா - இப் பொருளுக்குரிய சொல்
=> பகடு
,
28➤ திருத்தொண்டர் புராணம் ...... நாட்டின் சிறப்பைப் பாடும் நூல் .....
=> சோழ
,
29➤ சேக்கிழார் பெருமான் பாடியது .......
=> திருத்தொண்டர் புராணம்
,
30➤ பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப்பாடிய கவி வலவ " , எனப் பாடியவர்
=> மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்
,
31➤ சுந்தரர் எழுதியது ........
=> திருத்தொண்டத் தொகை
,
32➤ நாயன்மார்களின் எண்ணிக்கை ........
=> 63
,
33➤ மேதி - என்பதன் பொருள்
=> எருமை
,
34➤ திருநாட்டில் மலை போலக் குவிந்து கிடந்தவை....
=> நெற்கட்டுகள் , மீண்கள்,சங்குகள், தேன்வடியும் மலர்கள்
,
35➤ பக்திச் சுவை நனி . சொட்டச் சொட்டப் பாடிய கவி வளவ எனப் பாராட்டு பெறுபவர் ......
=> சேக்கிழார்
பெற்றோர் இட்ட பெயர் அருண் மொழித் தேவர் அநபாய சோழனிடம் தலைமை அமைச்சர்
,
36➤ திருத்தொண்டத் தொகையையும் , திருத்தொண்டர் திருவந்தாதியையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நூல்
=> திருத்தொண்ட புராணம்
திருத்தொண்ட தொகை - சுந்தர், திருத்தொண்ட திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பி
,
37➤ மல்லல் மூதூர் வய வேந்தே ... இச்சொல்லில் மூதூர் என்பதன் இலக்கண குறிப்பு......
=> பண்புத்தொகை
,
38➤ பண்டைத் தமிழர்களின் பண்பாட்டுக் கருவூலமாகத் திகழும் நூல் .......
=> புறநானூறு
,
39➤ முப்பொருளின் உறுதி தரும் தன்மையைக் கூறுவது ......
=> முதுமொழிக்காஞ்சி
,
40➤ பாண்டிய நெடுஞ்செழியனை புகழ்ந்து பாடிய புலவர் ......
=> குடபுலவியனார்
,
41➤ குறைவில்லாத புகழுடையவர் ......... எனக் குடபுலவியனார் குறிப்பிடுகிறார்
=> குழிந்த இடங்களில் நீர் நிலையை பெருகச் செய்தவர்
,
42➤ சான்றோர் தெளிவாக ஆராய்ந்து தெளிந்த பொருட்களை பிறருக்கு பயன்பெறுமாறு எடுத்துரைப்பது......
=> பொருண் மொழிக் காஞ்சித்துறை
,
43➤ பதம் எத்தனை வகைப்படும்?
=> 2
,
44➤ பகுபதம் எத்தனை வகைப்படும்?
=> 2
,
45➤ பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும் ?
=> 6
,
46➤ எழுத்துப்பேறாக வரும் எழுத்து ....
=> த்
,
47➤ பகுபத உறுப்புகளில் அடங்காமல் பகுதி விடுதிக்கு நடுவில் காலத்தை உணர்த்தாமல் வரும் மெய் எழுத்து ....
=> எழுத்துப் பேறு எனப்படும். (த்)
,
48➤ ஏறு தழுவுதலை கண்ணுடையம்மன் பள்ளு - என்ற நூல் எவ்வாறு குறிப்பிடுகிறது
=> எருது கட்டி
,
49➤ ஏறு தழுவுதலை புறப்பொருள் வெண்பா மாலை மற்றும் சிலப்பதிகாரம் எவ்வாறு குறிப்பிடுகிறது?
=> ஏறு கோள்
,
50➤ பழமணல் மாற்று மின் ; புது மணல் பரப்பு மின் - வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
=> மணிமேகலை விழா வறைக் காதை
,
51➤ கீசு கீசு என்று எங்கும் ஆணைச் சாத்தான் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ - வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
=> (திருப்பாவை)யில் ஆண்டாள் கூறியது
,
52➤ கார் அறுத்தான் - இலக்கணக் குறிப்பு
=> காலவாகுபெயர்
,
53➤ அளவையாகு பெயர்களின் வகைகள் எத்தனை ?
=> 4
,
54➤ தாய்மைக்கு வறட்சி இல்லை - கதையை எழுதியவர்
=> சு. சமுத்திரம்
,
55➤ Hero Stone - ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்
=> நடுகல்
,
56➤ Excavation - ஆங்கிலச் செல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல்
=> அகழாய்வு
,
57➤ Archacology - ஆங்கிலச் சொல் குறிக்கும் தமிழ் சொல்
=> தொல்லியல்
,
58➤ Cultural Identity - ஆங்கிலச் சொல் குறிக்கும் தமிழ்ச்சொல்
=> பண்பாட்டு அடையாளம்
,
59➤ Embossed Sculpture -ஆங்கிலச் சொல் குறிக்கும் தமிழ்ச்சொல்
=> புடைப்புச் சிற்பம்
,
60➤ பரவை - என்ற சொல் குறிக்கும் பொருள்
=> கடல்

No comments:

Post a Comment