செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Wednesday, 10 September 2025

இயல் 1 வகுப்பு 9 மீட்டறி வினாக்கள்

1➤ திணை பால் எண் ஆகியவற்றை உணர்த்தும் பால் காட்டும் விகுதிகள் இல்லாத திராவிட மொழி எது
=> மலையாளம்
,
2➤ தமிழ்விடு தூது ..... என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தது
=> சிற்றிலக்கியம்
,
3➤ சிந்தாமணி என்பதன் இலக்கணக் குறிப்பு
=> ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
,
4➤ இரண்டு இரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடக்கப்படும் செய்யுள் வகை ..... எனப்படும்
=> கண்ணி
,
5➤ அளபடை எத்தனை வகைப்படும்?
=> இரண்டு வகைப்படும்
உயிரளபெடை ஒற்றளபெடை
,
6➤ மூன்று என்னும் என் பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம்பெற்றுள்ளது?
=> தமிழ் - மூன்று, மலையாளம் மூணு : தெலுங்கு - மூடு , கன்னடம் - மூரு, துளு - மூஜி
,
7➤ ஆறாம் திணை சிறுகதையை எழுதியவர்
=> அ. முத்துராமலிங்கம்
,
8➤ Linguistics - பொருத்தமான தமிழ்ச்சொல்
=> மொழி ஆராய்ச்சி
,
9➤ Literature - பொருத்தமான தமிழ்ச்சொல்
=> இலக்கியம்
,
10➤ Philologist - பொருத்தமான தமிழ்ச்சொல்
=> மொழி ஆராய்ச்சியாளர்
,
11➤ polyglot - பொருத்தமான தமிழ்ச்சொல்
=> பொன்மொழியாளர்கள்
,
12➤ phonologist - பொருத்தமான தமிழ்ச்சொல்
=> ஒலியனியல் வல்லுநர்
,
13➤ Phonetics -
=> ஒலிப்பியல்
,
14➤ Comparative grammar - பொருத்தமான தமிழ்ச்சொல்
=> ஒப்பிலக்கணம்
,
15➤ vowels - பொருத்தமான தமிழ்ச்சொல்
=> உயிரொலிகள்
,
16➤ Lexicon - பொருத்தமான தமிழ்ச்சொல்
=> பேரகராதி
,
17➤ . Consonants - பொருத்தமான தமிழ்ச்சொல்
=> மெய்யொலிகள்
,
18➤ தமிழ்விடு தூது குறிப்பிடும் வண்ணங்கள்
=> 100
,
19➤ தமிழ்விடு தூது குறிப்பிடும் குணங்கள்
=> 10
,
20➤ தமிழ்விடு தூது குறிப்பிடும் வனப்பு.....
=> 8
,
21➤ தமிழ்விடு தூது குறிப்பிடும் நவரசம் ......
=> 9
,
22➤ தமிழ்விடு தூது நூலை முதலில் பதிப்பித்தவர்
=> உ வே சாமிநாத ஐயர் (உ.வே.சா
,
23➤ சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை
=> 96
,
24➤ தமிழ்விடு தூதில் அமைந்துள்ள கண்ணிகளின் எண்ணிக்கை
=> 268
,
25➤ தமிழ்விடு தூது ...... பாவினால் பாடப்பட்டது
=> கலி வெண்பா
,
26➤ வனப்பு என்பதன் பொருள் .....
=> அழகு
,
27➤ வாயில் இலக்கியம் - என அழைக்கப்படுவது
=> தூது இலக்கியம்
,
28➤ சிந்து என்பது ......
=> ஒருவகை இசைப் பாடல்
,
29➤ தமிழ்விடு தூதுதின் ஆசிரியர் .....
=> அறியப்படவில்லை
,
30➤ முத்திக்கனி - இலக்கணக் குறிப்பு
=> உருவகம்
,
31➤ தமிழ்விடு தூது இலக்கியத்தைப் பதிப்பித்த ஆண்டு
=> 1930
,
32➤ முத்தமிழ் - தொகைச் சொற்களை விரித்து எழுது
=> இயல், இசை, நாடகம்
,
33➤ மூவகைப் பா
=> துறை தாழிசை விருத்தம்
,
34➤ தேவர்கள் பெற்ற மூன்று குணம்
=> சத்துவம் இராசசம், தாமசம்
,
35➤ தூது இலக்கியத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்
=> வாயில் இலக்கியம், சந்து இலக்கியம்
,
36➤ தூதுக்கு பயன்படுபவை ......
=> அன்னம் முதல் வண்டு ஈறாக பத்து
,
37➤ இந்திய நாடு மொழிகளின் காட்சி சாலை எனக் குறிப்பிட்டவர்
=> ச . அகத்தியலிங்கம்
,
38➤ திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் வெளியிடப்பட்ட ஆண்டு
=> 1856 (வெளியிட்டவர் கால்டுவெல் )
,
39➤ ஐரோப்பிய மொழியோடு தொடர்புடையது வடமொழி என்று முதலில் கூறியவர்
=> வில்லியம் ஜோன்ஸ்
,
40➤ தமிழ் வடமொழியின் மகளன்று ; தனி குடும்பத்திற்கு உரியது என்று கூறியவர்
=> கால்டுவெல்
,
41➤ தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகள் , தென்னிந்திய மொழிகள் எனப் பெயரிட்டவர்
=> பிரான்சிஸ் எல்லீஸ்
,
42➤ வட , தென் , நடு திராவிட மொழிகள் என எவ்வகையில் குறிக்கப்பட்டது
=> பரவிய நில அடிப்படையில் பிரிக்கப்பட்டது
,
43➤ இந்தியாவில் பேசப்படும் மொழிக் குடும்பங்கள் எத்தனை?
=> 4
இந்தோ ஆசிய மொழிகள், திராவிட மொழிகள், ஆஸ்திரோ - ஆசிய மொழிகள், சீன திபெத்திய மொழிகள்
,
44➤ தமிழ் என்ற சொல் எவ்வாறு பிறந்தது என ஹீராஸ் பாதிரியார் குறிப்பிடுகிறார்
=> தமிழ் -> தமிழா -> தமிலா -> டிரமிலா -> ட்ரமிலா -> த்ராவிடா -> திராவிடா
,
45➤ திராவிட மொழிகளின் பழமையான இலக்கண நூல்கள்....
=> தமிழ் தொல்காப்பியம், மலையாளம் - லீலா திலகம், கன்னடம் - கவி ராஜமார்க்கம், தெலுங்கு - ஆந்திர பாஷா பூஷணம்
மேற்கண்டவை இலக்கண நூல்கள்
,
46➤ ஈரோடு தமிழன்பனின் சாகித்தியஅகாதமி விருது பெற்ற நூல்
=> வணக்கம் வள்ளுவ
,
47➤ இனிமையும் நேர்மையும் தமிழ் எனல் ஆகும் - இத்தொடர் இடம்பெற்ற நூல்
=> பிங்கல நிகண்டு
,
48➤ தமிழை ஆட்சி மொழியாக கொண்ட நாடுகளில் ஒன்று...
=> சிங்கப்பூர்
,
49➤ தமிழோவியம் என்னும் கவிதை நூலின் ஆசிரியர் யார்?
=> ஈரோடு தமிழன்பன்
,
50➤ வணக்கம் வள்ளுவர் என்ற நூலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்ட ஆண்டு ......
=> 2004
,
51➤ உலக தாய்மொழி நாள்
=> பிப்ரவரி 21
,
52➤ யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் - என்று பாடியவர்
=> பாரதியார்
,
53➤ காலமும் - என்பதன் இலக்கணக் குறிப்பு...
=> முற்றும்மை
,
54➤ ஈரோடு தமிழன்பனின் தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்......
=> தமிழன்பன் கவிதைகள்
,
55➤ மானிட மேன்மையைச் சாதித்திடத் ...... மட்டுமே போதுமே.
=> திருக்குறள்
,
56➤ ராபின்சன் குரு சோ என்ற நூலின் ஆசிரியர்
=> டேனியல் டி ஃபோ
,
57➤ கடல் புறா என்னும் நூலின் ஆசிரியர் யார்?
=> சாண்டில்யன்
,
58➤ தமிழர் பாரம்பரிய நாள் எது ?
=> ஜனவரி 14
,
59➤ உலகின் 2 வது பெரிய தேசம் எது ?
=> கனடா
,
60➤ ஜி.யு. போப் பிறந்த நாடு எது?
=> கனடா
,
61➤ சூரியன் மறையாத அரசு என அழைக்கப்பட்ட அரசு எது?
=> பிரிட்டன்
,
62➤ அ முத்துலிங்கத்தின் சிறுகதைத் தொகுப்பில் இலங்கை அரசின் சாகித்யப் பரிசினைப் பெற்ற நூல் எது?
=> வடக்கு வீதி
,
63➤ ஆறாம் திணை எது ?
=> பனியும் - பனி சார்ந்த இடமும்
,
64➤ கொக்குவில் கிராமத்தில் காணப்பட்ட பறவை
=> ஆறு மணிக்குருவி - காகம்
,
65➤ ஒவ்வொரு திணைக்கும் 100 பாடல்களைக் கொண்ட நூல் எது ?
=> ஐங்குறுநூறு

No comments:

Post a Comment