1➤ முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் முதன் முதலில் தொடங்கப்பட்ட ஆண்டு ?
,=> 2022 செப்டம்பர் 15 (அண்ணா பிறந்தநாள்)
2➤ முதலமைச்சரின் காலை உணவுத் ரு திட்டம் எந்தப் பள்ளியில் முதன் முதலில் தொடங்கப்பட்டது
,=> மதுரை மாவட்டம் சிம்மக்கல்லில் உள்ள ஆதிமூலம் தொடக்கப் பள்ளி
SEP 15
SEP 15
3➤ முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஆரம்பத்தில் எத்தனை தொடக்கப் பள்ளிகளில் தொடங்கப்பட்டது?
,=> 1545
4➤ முதலமைச்சரின் காலை உணவ ு திட்டம் விரிவாக்கம் எப்பொழுது நடைபெற்றது ?
,=> 2023 ஆகஸ்ட் 25
அனைத்து அரசு பள்ளிகள்
அனைத்து அரசு பள்ளிகள்
5➤ முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கம் எந்தப் பள்ளியில் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது ?
,=> நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சார்ந்த திருக்குவளையில்ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
கலைஞர் கருணாநிதி பிறந்த ஊர்
கலைஞர் கருணாநிதி பிறந்த ஊர்
6➤ முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கத்தின் சிறப்பு என்ன?
,=> நாட்டிலேயே ஒரு மாநிலத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் இலவச காலை உணவு வழங்கப்படுவதுஇதுவே முதல் முறை
7➤ முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கு எந்த நாள் முதல் வழங்கப்படுகிறது
,=> 2024 July 15
8➤ முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கு எந்த மாவட்டத்தில் உள்ள பள்ளியில் முதன் முதலாகத் துவங்கப்பட்டது
,=> திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி
9➤ கலைஞர் மகளிர் உரிமைச் சட்டத்தின் மூலம் மாதாந்திர நிதி உதவி எவ்வளவு வழங்கப்படுகிறது?
,=> 1000 ரூபாய்
10➤ கலைஞர் மகளிர் உரிமைச் திட்டம் எந்தத் தேதியில் துவங்கப்பட்டது
,=> 2023 செப்டம்பர் 15
11➤ கலைஞர் மகளிர் உரிமைச் சட்டம் எந்த மாவட்டத்தில் முதன் முதலில் தொடங்கப்பட்டது
,=> காஞ்சிபுரம்
அண்ணா பிறந்த மாவட்டம்
அண்ணா பிறந்த மாவட்டம்
12➤ கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் உரிமைத் தொகை பெற வயது எவ்வளவு?
,=> 21 வயது (பெண்கள் மற்றும் திருநங்கைகள்)
13➤ கலைஞர் மகளிர் உரிமை திட்டம் பெறுவதற்கு ஆண்டு வருமானம் எவ்வளவு இருக்க வேண்டும்?
,=> 2.5 லட்சம்
14➤ கலைஞர் மகளிர் உரிமைச் சட்டம் பெற எத்தனை ஏக்கர் இடம் உச்சவரம்பாக நிர்ணயம் செய்யப்பட்டது
,=> உலர் நிலம் 10 ஏக்கர் (or) சதுப்பு நிலம் 5 ஏக்கர்
15➤ கலைஞர் மகளிர் உரிமைச் சட்டத்தின் மூலம் பணம் பெறுவதற்கு ஒரு வருடத்திற்கு எத்தனை யூனிட்டுக்கு மிகக் கூடாது
,=> 3600 யூனிட் (ஆண்டுக்கு)
300 (மாதத்திற்கு )
300 (மாதத்திற்கு )
16➤ கலைஞர் மகளிர் உரிமைச் திட்டம் மூலம் பணம் பெறுவதற்கு தகுதியற்றவர்களாக நிர்ணயம் செய்யப்பட்டவர்கள் யார் ?
,=> 1. அரசு ஊழியர்கள் 2. ஓய்வூதியதாரர்கள் 3. வருமான வரி செலுத்துவோர் 4. தொழில் முறை வரி செலுத்துவோர் 5. உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் 6. நாலு சக்கர வாகனங்களில் உரிமையாளர்கள் .
17➤ விடியல் பயணத் திட்டம் என்றால் என்ன ?
,=> மகளிர் மற்றும் திருநங்கைகள் பேருந்தில் இலவசமாக பயணம் செய்யும் திட்டம்
எத்தனை முறை வேண்டுமானாலும்
எத்தனை முறை வேண்டுமானாலும்
18➤ விடியல் பயணத்திட்டம் எந்த ஆண்டு தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு செய்யப்பட்டது
,=> 2024- 25 பட்ஜெட்
19➤ விடியல் பயணத்திட்டம் எந்த ஆண்டு துவங்கப்பட்டது
,=> 2021 மே 8. ஆம் தேதி (8.5. 2021)
20➤ மக்களைத் தேடி மருத்துவ திட்டம் எந்த ஆண்டு துவங்கப்பட்டது?
,=> 05.08. 2021
21➤ மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் எந்த மாவட்டத்தில் தொடங்கப்பட்டது
,=> கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சமணப்பள்ளி கிராமம்
22➤ மக்களை தேடி மருத்துவம் என்றால் என்ன?
,=> வீடு வீடாகச் சென்று நீரழிவு நோய் ரத்த அழுத்தம் சிறுநீரக நோய்களுக்கு பரிசோதனை செய்தல் 2. பிறப்பு குறைபாடுகளை கண்டறிவதற்கான பரிசோதனைகள்
23➤ பாதம் பாதுகாப்போம் திட்டம் என்றால் என்ன ?
,=> சர்க்கரை நோயாளி ஏற்படும் பாத பாதிப்புகளை பரிசோதனைகள் மூலம் கண்டறிதல்
இதன்மூலம் கால் இழப்புகளை தடுத்தல்
இதன்மூலம் கால் இழப்புகளை தடுத்தல்
24➤ பாதம் பாதுகாப்போம் திட்டம் எந்த ஆண்டு துவங்கப்பட்டது ?
,=> 2024 July 15 ( 15. 07. 2024)
காமராஜர் பிறந்த தினம்
காமராஜர் பிறந்த தினம்
25➤ தொழிலாளர்களை தேடி மருத்துவம் திட்டம் என்றால் என்ன ?
,=> தொழிற்சாலைகளின் பணியாற்றும் தொழிலாளர்களின் தொற்றா நோய்களுக்கான சிகிச்சை
26➤ தொழிலாளர்களை தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் பரிசோதனை செய்ய நிர்ணயிக்கப்பட்ட இலக்கு எவ்வளவு ?
,=> 50 இலட்சம் தொழிலாளர்கள்
27➤ தொழிலாளர்களை தேடி மருத்துவத் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?
,=> 2024 ஜனவரி 10
28➤ புற்றுநோய் பரிசோதனைத் திட்டம் எந்த ஆண்டு துவங்கப்பட்டது?
,=> 22 ஜனவரி 2024
(மனித வாழ்வில் தேசிய புனித தினம்)
(மனித வாழ்வில் தேசிய புனித தினம்)
29➤ புற்றுநோய் பரிசோதனை திட்டத்தின் கீழ் எந்த வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த திட்டம் பொருந்துகிறது ?
,=> 18 வயது
30➤ புற்றுநோய் பரிசோதனை திட்டத்தின் கீழ் எந்தெந்த புற்று நோய்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது?
,=> 1 .வாய் புற்றுநோய் 2. கருப்பை வாய்ப் புற்றுநோய் 3. மார்பக புற்று நோய்
31➤ புற்றுநோய் பரிசோதனை திட்டம் எந்தெந்த மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டது ?
,=> ஈரோடு ராணிப்பேட்டை கன்னியாகுமரி திருப்பத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனை, மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில்
32➤ மக்களைத் தேடி ஆய்வக சேவை திட்டம் என்றால் என்ன?
,=> அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 63 வகையான மாதிரிகளுக்கு ஆய்வு பரிசோதனை செய்தல்
33➤ மக்களைத் தேடி ஆய்வக சேவை திட்டத்தின் கீழ் எத்தனை வகையான மாதிரிகளுக்கு ஆய்வு பரிசோதனை செய்யப்படுகிறது ?
,=> 63
34➤ மக்களைத் தேடி ஆய்வக சேவை திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது
,=> 05-02. 2024
35➤ இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 என்ற திட்டத்தின் சிறப்பு யாது ?
,=> தமிழ்நாடு எல்லைக்குள் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மாநில நாட்டு வேறுபாடு இன்றி மருத்துவ சேவை பெறுதல்
36➤ என்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 தொடங்கப்பட்ட நாள்
,=> 18 - 12. 2021 (டிசம்பர் 18 )
சர்வதேச புலம் பெயர்ந்த தினம்
சர்வதேச புலம் பெயர்ந்த தினம்
37➤ இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 செயல்பாடு என்ன?
,=> சாலை விபத்துகளில் காயம் அடைந்தவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்குள் மருத்துவ சேவை மற்றும் ஒரு லட்சம் வரை பயன்
38➤ இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 எத்தனை மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படுகிறது ?
,=> 692 மருத்துவமனைகள் ( 237 அரசு 455 தனியார் )
39➤ கர்ப்பிணிப் பெண்களைக் கண்காணிக்க வழங்கப்பட்ட தொலைபேசி எண் என்ன
,=> 102
40➤ கர்ப்பிணி பெண்களை கண்காணிக்க தொலைபேசி எண் 102 எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?
,=> 19. ஆகஸ்ட் 2024 (19.8.2024)
உலக மனிதாபிமானம் தினம் மற்றும் உலக புகைப்பட தினம்
உலக மனிதாபிமானம் தினம் மற்றும் உலக புகைப்பட தினம்
41➤ கர்ப்பிணி பெண்களை கண்காணிக்க துவங்கப்பட்ட சேவை மையத்தில் எத்தனை ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்?
,=> 50
42➤ கர்ப்பிணிப் பெண்களைக் கண்காணிக்க 102 திட்டத்தின் மூலம் ஒருவரை எத்தனை முறைக்கு மேல் தொடர்பு கொள்வர்?
,=> 5 முறைகளுக்கு மேல் தொடர்பு கொள்வர்
43➤ தமிழகத்தில் ஒரு லட்சம் பிரசவத்தில் எத்தனை சதவிகிதம் இழப்பு உள்ளதாக 2023- 24 ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது
,=> 45.5
44➤ ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டம் என்றால் என்ன?
,=> ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மற்றும் சிறப்பு சிகிச்சை மேற்கொள்வது
45➤ ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
,=> 21 மே 2021 (21.05.2021)
46➤ ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டம் எந்த மாவட்டத்தில் தொடங்கப்பட்டது
,=> நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டபெட்டா ஊராட்சி குழந்தைகள் மையத்தில் துவங்கப்பட்டது
47➤ ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டம் எந்த வயது குழந்தைகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
,=> 6 மாதம் முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான திட்டம்.
48➤ நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் தொடங்கப்பட்ட நாள்?
,=> 04 Nov 2023 (04-11.2023)
49➤ நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தை துவங்கி வைத்தவர் யார் ?
,=> உதயநிதி ஸ்டாலின்
50➤ நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் துவங்கப்பட்ட இடம்
,=> சென்னை அடையாறில் உள்ள முத்துலட்சுமி பூங்கா
51➤ நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் முக்கிய நோக்கம்
,=> தினமும் 30 நிமிடங்கள் நடைபெற்று செய்வதால் ஏற்படும் 20 நன்மைகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தல்
பள்ளி கல்லூரி மற்றும் இளைஞர்களுக்கு
பள்ளி கல்லூரி மற்றும் இளைஞர்களுக்கு
52➤ ஆருயிர் - அனைவரும் உயிர் காப்போம் திட்டம் துவங்கப்பட்ட ஆண்டு ?
,=> 06.07.2024
53➤ ஆருயிர் அனைவருக்கும் உயிர் காப்போம் திட்டம் தொடங்கிய இடம்
,=> சென்னையில் உள்ள தலைமைச் செயலகம்
54➤ ஆருயிர் அனைவரும் உயிர் காப்போம் திட்டத்தினை செயல்படுத்தும் அமைப்பு
,=> இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளை
55➤ ஆருயிர் அனைவரும் உயிர் காப்போம் திட்டம் மூலம் வழங்கப்படும் பயிற்சி
,=> CPR பயிற்சி - ( 42 ஆயிரம் மருத்துவர் மூலம் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி
56➤ CPR - என்றால் என்ன?
,=> Cardiopulmonary resuscitation
இதய இயக்கத்தை தூண்டும் முயற்சி (பயிற்சி)
இதய இயக்கத்தை தூண்டும் முயற்சி (பயிற்சி)
57➤ நட்புடன் உங்களோடு மனநல சேவை திட்டம் தொடங்கப்பட்ட நாள்
,=> 27.0CT. 2022 (27.10.2022)
58➤ நட்புடன் உங்களோடு மனநல சேவைத் திட்டம் துவங்கப்பட்ட நோக்கம்
,=> மன அழுத்தத்துக்கு ஆளானவர்கள் தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது
59➤ நட்புடன் உங்களோடு மனநல சேவை திட்டம் எங்கே துவங்கப்பட்டது?
,=> சென்னை தேனாம்பேட்டையில் உள்ள DMS வளாகம்
60➤ நட்புடன் உங்களோடு மனநல சேவை திட்டம் - பயன்பெறும் இடங்கள்
,=> அனைத்து மருத்துவ மையம் ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வரை
61➤ நட்புடன் உங்களோடு மனநல சேவைத் திட்டத்தின் உதவி மைய எண்
,=> 14416
62➤ மாணவர்களின் மனநிலை பேணுவதற்காக துவங்கப்பட்ட திட்டம்?
,=> மனம் - திட்டம்
63➤ மனம் திட்டம் துவங்கப்பட்ட நாள்
,=> 22. டிசம்பர் 2022 (22-12.22)
தேசிய கணித தினம்
தேசிய கணித தினம்
64➤ மனநல நல்லாதரவு மன்றங்கள் எத்தனை மருத்துவ கல்லூரிகளில் வழங்கப்பட்டது?
,=> 36 மருத்துவக் கல்லூரிகளில்
65➤ மனம் - திட்டத்தின் தொலைபேசி எண்
,=> 14416
66➤ மனம் திட்டம் தொடங்கப்பட்ட இடம்
,=> சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகம்
67➤ VEERA - ( வீரா திட்டம் ) யாரால் செயல்படுத்தப்படுகிறது?
,=> சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறையால்
68➤ VEERA - திட்டத்தின் விரிவாக்கம்
,=> Vehicle for Extrication in emergency Rescue and accident
69➤ சாலை விபத்தில் சிக்கியவர்களை விபத்துக்குள்ளான வாகனங்களில் இருந்து மீட்கும் திட்டத்தின் பெயர் என்ன ?
,=> VEERA திட்டம்.
70➤ VEERA திட்டம் துவங்கப்பட்ட நாள்
=> 08.09. 2023 (8 செப்டம்பர் 23)