செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Monday 5 February 2024

வகுப்பு 8 - அயோத்திதாசர் சிந்தனைகள் - மீட்டுணர் வினாக்கள்

1➤ அயோத்திதாசர் வாழ்ந்த காலம்

=> 19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியும்

2➤ தென்னிந்தியச் சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை எனப் போற்றப்படுபவர் யார் ?

=> அயோத்திதாசப் பண்டிதர்

3➤ அயோத்திதாசர் எந்த ஆண்டு பிறந்தார் ?

=> 1845 மே 20

4➤ அயோத்திதாசப் பண்டிதரின் இயற்பெயர் என்ன ?

=> காத்தவராயன்

5➤ அயோத்திதாசப் பண்டிதர் என பெயர் வரக் காரணம்

=> தனது ஆசிரியர் அயோத்திதாசர் மீது கொண்ட பற்றுதலால்

6➤ அயோத்திதாசப் பண்டிதர் தொடங்கிய இதழின் பெயர் என்ன ?

=> ஒரு பைசாத் தமிழன் (1907- காலணா விலை )

7➤ அயோத்திதாசர் பதிப்பித்த நூல்கள் யாவை ?

=> போகர் எழுநூறு,அகத்தியர் இருநூறு,சிமிட்டு ரத்தினச் சுருக்கம், பால வாகடம்

8➤ "என் பகுத்தறிவு பிரச்சாரத்திற்கும் சீர்திருத்தக் கருத்துக்களுக்கும் முன்னோடியாகத் திகழ்ந்தவர்கள் அயோத்திதாசரும் தங்க வயல் அப்பாதுரையும் எனக் கூறியவர்

=> தந்தை பெரியார்

9➤ அயோத்திதாசர் எழுதிய நூல்கள்

=> புத்தரது ஆதி வேதம், இந்திரர் தேச சரித்திரம்,விவாக விளக்கம்,புத்தர் சரித்திரப்பா

10➤ திருவள்ளுவர். ஔவையார் ஆகியோரின் படைப்புகளுக்கு பௌத்த கோட்பாடுகளின் அடிப்படையில் விளக்கம் எழுதியவர்

=> அயோத்திதாசர்

11➤ திராவிட மகாஜன சங்கம் ஆரம்பித்தவர் யார்? எப்போது?

=> அயோத்திதாசர் 1892
ஒடுக்கப்பட்டோர் உரிமைகளை பாதுகாக்கவும் கொள்கைகளை வலியுறுத்தவும்

12➤ விடுதலை என்பது ஆட்சி மாற்றம் மட்டுமல்ல மக்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதாக அமைய வேண்டும் எனக் கூறியவர்

=> அயோத்திதாசர்

13➤ அயோத்திதாசரை முன்னோடிகளாக ஏற்றுக் கொண்டவர்கள் யார் ?

=> தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும்

14➤ அயோத்திதாசர் அறிந்திருந்த மொழிகள் யாவை ?

=> பாலி, வடமொழி, ஆங்கிலம்

15➤ ஒரு மனிதன் அறிவு வளர்ச்சி பெற வேண்டுமானால் கல்வி அறிவு அவசியம் என்று கூறியவர்

=> அயோத்திதாசர்

No comments:

Post a Comment