செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Monday 5 February 2024

வகுப்பு 10 - அணி, பா. வகை |- தானே மதிப்பிடும் மீட்டுணர் வகை வினாக்கள்

1➤ இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது

=> தற்குறிப்பேற்ற அணி எனப்படும்

2➤ போருழந் தெ டுத்த ஆரெயில் - இடம்பெற்றுள்ள அணிவகை

=> தற்குறிப்பேற்ற அணி

3➤ தீவகம் என்ற சொல்லுக்கு .......என்று பொருள்

=> விளக்கு

4➤ செய்யுளின் ஓரிடத்தில் நின்ற ஒரு சொல் அச்செய்திளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்தி வருவது...... அணி எனப்படும்

=> தீவக அணி

5➤ தீவக அணி எத்தனை வகைப்படும் ?

=> 3 வகைப்படும் (முதல் நிலைத் தீபகம் இடைநிலைத் தீவகம் கடைநிலைத்தீவகம்

6➤ சேந்தன வேந்தன் திருநெடுங்கன்- இவ் அடிகளில் இடம்பெற்றுள்ள அணி வகை

=> தீவக அணி

7➤ சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அதன்படி பொருள் கொள்வது.... அணி எனப்படும்

=> நிரல்நிறை அணி எனப்படும்

8➤ உண்மையான இயல்புத்தன்மையினை கேட்டவர்களின் மனமகிழுமாறு உரிய சொற்களை அமைத்து பாடுவது ........அணியாகும்

=> தன்மையணி

9➤ தன்மையணி எத்தனை வகைப்படும் ?

=> 4. ( பொருள் தன்மையணி, குணத் தன்மையணி சாதித்தன்மையணி, தொழில் தன்மையணி

10➤ மெய்யிற் பொடியும் விரிந்த கருங்குழலும் - பாடல் அடியில் அமைந்துள்ள அணி

=> தன்மையணி

11➤ தன்மையணி ........ என்றும் அழைக்கப்படும்

=> தன்மை நவிற்சி அணி

12➤ எவ்வகைப் பொருளு மெய்வகை விளக்குஞ் சொன்முறை தொடுப்பது தன்மையாகும்- எனக் குறிப்பிடும் நூல்

=> தண்டியலங்காரம்

13➤ யாப்பின் உறுப்புகள் எத்தனை ?

=> 6

14➤ பா எத்தனை வகைப்படும் ?

=> 4

15➤ வெண்பாவிற்குரிய ஓசை என்ன ?

=> செப்பல் ஓசை

16➤ ஆசிரியப்பாவுக்கு உரிய ஓசை என்ன ?

=> அகவலோசை

17➤ கலிப்பாவுக்கு உரிய ஓசை என்ன ?

=> துள்ளல் ஓசை

18➤ வஞ்சிப்பாவுக்குரிய ஓசை என்ன ?

=> தூங்கல் ஓசை

19➤ வெண்பாக்கள் எத்தனை வகைப்படும் ?

=> 5 (குறள் , சிந்தியில், நேரிசை, இன்னிசை, பஃறொடை )

20➤ ஆசிரியப்பா எத்தனை வகைப்படும் ?

=> 4 (நேரிசை, இணைக்குறள் நிலைமண்டில / அடிமறி மண்டில )

21➤ இருவர் உரையாடுவது போன்ற ஓசை......

=> செப்பல் ஓசை

22➤ ஒருவர் பேசுதல் போன்ற ஓசை (சொற்பொழிவு ஆற்றுவது போன்ற ஓசை)

=> அகவலோசை

23➤ கன்று துள்ளினாற் போலச் சீர் தோறும் துள்ளி வரும் ஓசை......

=> துள்ளல் ஓசை

24➤ சீர்தோறும் துள்ளாது தூங்கி வரும் ஓசை (தாழ்ந்தே வருவது வருவது

=> தூங்கல் ஓசை

25➤ ஏகாரத்தில் முடியும் பா வகை

=> ஆசிரியப்பா (அகவற்பா )

No comments:

Post a Comment