செய்திப் பெட்டகம்

இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Monday 12 February 2024

வகுப்பு 8- கட்டுரை -நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு


நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு:

முன்னுரை :
‘விதைத்ததே விளையும்’ என்பது நம் முன்னோர்கள் சொல்லிச் சென்ற பொன்மொழியாகும். ஒரு மனிதன் தன் இளமைப் பருவத்தில் கற்றுக் கொள்பவைகளைப் பின்பற்றியே வாழ்கிறான். ஆதலால் இப்பருவத்தில் தொண்டு செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மாற்றங்களின் விதை :
‘இன்றைய இளைஞர்களின் கைகளில்தான் நாட்டின் எதிர்காலம் உள்ளது’ என்று இளைஞர்களின் சக்தியை உலகிற்கு உணர்த்தினார் சுவாமி விவேகானந்தர். இளைஞர்களின் மாறுபட்ட அணுகுமுறை நாட்டின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும். அறிவு, ஆற்றல், அனுபவம், துணிவு போன்றவற்றின் அடிப்படையில் இளைஞர்களின் செயல்பாடுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இவை மாற்றங்களுக்கு வித்திடுகிறது.

தொண்டு :
இளைஞர்கள் சமுதாய உணர்வுடையவர்களாய் வளர்ந்தால்தான் வீடும் நாடும் நலம் பெறும். பிற உயிரினங்களின் துன்பத்தைக் கண்டு அதனைத் தாங்கிக்கொள்ளாமல் உடனே ஓடிச் சென்று உதவுவதுதான் தொண்டு.

 சமுதாயத்தின் ஓர் உறுப்பாய் விளங்கும் இளைஞர்கள் இச்சமுதாயத்தின் மேம்பாட்டிற்கான செயல்களைச் செய்ய வேண்டும்.

பிற பணிகள் :
புயல் வெள்ளம் போன்ற காலங்களில் மீட்புக் குழுவினரோடு சேர்ந்து ஐம்பது சதவீதம் இளைஞர்கள் பணியாற்றுகிறார்கள். இது போதாது. அனைவரும் அதில் பங்கேற்க வேண்டும். காலரா, பன்றிக் காய்ச்சல், சிக்குன் குனியா போன்ற நோய்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

முடிவுரை :
மக்களுக்கு ஏற்படும் துன்பத்தைக் கண்டவுடன் உதவி புரியும் தொண்டுள்ளம் படைத்த இளைஞர்களாலேயே நாடு வளம் பெறும் நலம் பெறும், என்பதை உணர்வோமாக..

No comments:

Post a Comment